யுக்ரேன் நெருக்கடி: ஐ.நாவில் ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானத்தில் இந்தியா வாக்களிக்காதது ஏன்?

யுக்ரேன் நெருக்கடி:

பட மூலாதாரம், Getty Images

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில், யுக்ரேனைத் தாக்கும் ரஷ்யாவிற்கு எதிரான முன்மொழிவு தொடர்பாக, இந்தியாவின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பதைப் பார்க்க அனைவரும் ஆவலுடன் இருந்தனர். ஆனால் சீனா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போலவே இந்தியாவும், அந்த முடிவை எடுத்தது. ஆம், ஆதரவாக வாக்களிக்கவுமில்லை எதிர்க்கவுமில்லை. அதாவது, வாக்கெடுப்பிலேயே கலந்துகொள்ளவில்லை.

இந்நிலையில், யுக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு எதிரான தீர்மானத்தின் மீது வாக்களிக்காதது ஏன் என இந்தியா விளக்கம் அளித்துள்ளது.

இந்தியா தெரிவித்த விளக்கம்:

யுக்ரேனில் சமீபத்திய நிகழ்வுகளால் இந்தியா மிகவும் கவலையடைந்துள்ளது என்று பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி டி.எஸ் திருமூர்த்தி கூறினார். ராஜிய பேச்சுவார்த்தை மூலம் பிரச்னையை தீர்க்கும் வழி கைவிடப்பட்டுள்ளது வருந்தத்தக்கது. வன்முறையை விரைவில் நிறுத்த வேண்டும் என்று இந்தியா வலியுறுத்துகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

யுக்ரேனுக்கு எதிரான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலின் முக்கியமான கூட்டம் வெள்ளிக்கிழமை இரவு (இந்திய நேரப்படி) நடைபெற்றது. கூட்டத்தில், ரஷ்யாவின் தாக்குதலுக்கு எதிரான தீர்மானம் முன்வைக்கப்பட்டது. 15 உறுப்பு நாடுகள் வாக்களித்திருக்க வேண்டும். தீர்மானத்திற்கு ஆதரவாக 11 உறுப்பினர்கள் வாக்களித்தனர். ஆனால் இந்தியா, சீனா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

ஐநா பாதுகாப்பு கவுன்சில் - UNSC

பட மூலாதாரம், Reuters

இருப்பினும், தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி ரஷ்யா இந்த தீர்மானத்தை தடுத்தது. இதற்காக ரஷ்யா ஒரு நிரந்தர உறுப்பினர் என்ற நிலையில் தனது வீட்டோவை பயன்படுத்தியது. (ஐ.நாவில் நிரந்தர உறுப்பு நாடுகளுக்கு மட்டுமே இருக்கும் அதிகாரம் அது. வீட்டோ அதிகாரம் பொருந்திய நாடுகள், பெரும்பான்மை குறித்த எந்தக் கவலையும் இன்றி எந்தவொரு தீர்மானத்தையும் தடுக்கலாம். )

யுக்ரேனுக்கு எதிராகவோ அல்லது யுக்ரேன் குடிமக்களுக்கு எதிராகவோ ரஷ்யா போர் தொடுக்கவில்லை என்றும் டான்பாஸ் மக்களை காப்பாற்றவே இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் ஐநாவுக்கான ரஷ்ய தூதர் தெரிவித்தார்.

யுக்ரேன் மீதான ரஷ்ய தாக்குதலை நிறுத்தவும், ராணுவத்தை திரும்ப அழைக்கவும் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. பாதுகாப்பு கவுன்சிலில் வீட்டோ அதிகாரம் கொண்ட ஐந்து நிரந்தர உறுப்பினர்களில் ரஷ்யாவும் ஒன்று. ரஷ்யாவைத் தவிர அமெரிக்கா, சீனா, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கும் வீட்டோ அதிகாரம் உள்ளது.

இந்தியா ஏன் தீர்மானத்தின் மீது வாக்களிக்கவில்லை?

யுக்ரேன் விவகாரத்தில் இந்தியா தனது கருத்துக்களை வெளிப்படுத்தும் அறிக்கையை வெளியிட்டு, வாக்களிக்காதது ஏன் என்பதையும் விளக்கியுள்ளது.

  • யுக்ரேனில் சமீபத்திய நிகழ்வுகளால் இந்தியா மிகவும் கவலையடைந்துள்ளது.
  • வன்முறை மற்றும் பகைமையை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம்.
  • மனித உயிரை பணயம் வைத்து எந்த ஒரு தீர்வையும் காண முடியாது.
  • அதிக எண்ணிக்கையிலான இந்திய மாணவர்கள் உட்பட யுக்ரேனில் உள்ள இந்திய சமூகத்தினரின் பாதுகாப்பு குறித்தும் நாங்கள் அக்கறை கொண்டுள்ளோம்.
  • சமகால உலகளாவிய ஒழுங்குமுறைக்கான ஐக்கிய நாடுகளின் சாசனமானது சர்வதேச சட்டம், தனிப்பட்ட நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கான மரியாதை ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்துள்ளது.
  • எல்லா உறுப்பு நாடுகளும் ஆக்கப்பூர்வமான வழியில் முன்னேற இந்தக் கோட்பாடுகளை மதிக்க வேண்டும்.
  • இந்த பாதை எவ்வளவு கடினமானதாக இருந்தாலும், கருத்து வேறுபாடுகள் மற்றும் சச்சரவுகளைத் தீர்ப்பதற்கான ஒரே வழி பேச்சுவார்த்தைதான்.
  • ராஜிய பாதை கைவிடப்பட்டது வருத்தமளிக்கிறது. இதற்கு நாம் திரும்ப வேண்டும்.
  • இந்த எல்லா காரணங்களுக்காகவும், இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிக்க வேண்டாம் என்று இந்தியா தேர்வு செய்துள்ளது.
X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

ரஷ்யாவை விமர்சித்த அமெரிக்கா

ரஷ்யாவின் நடவடிக்கை அடிப்படைக் கொள்கைகளின் மீதான தாக்குதல் என்று ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்கத் தூதர் லிண்டா தாமஸ் கிரீன்ஃபீல்ட், கூறியுள்ளார். ரஷ்யா தனது வீட்டோ அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறது என்றார் அவர்.

அதேநேரம், ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் யுக்ரேன் மீதான தாக்குதல் விவகாரத்தை எழுப்பிய உறுப்பு நாடுகளுக்கு யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி நன்றி தெரிவித்துள்ளார்.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 2

இந்தியாவுக்கு ஏன் தர்மசங்கடம்?

நீண்ட காலமாக ரஷ்யாவின் நட்பு நாடாக இந்தியா இருந்து வருகிறது. ரஷ்யா இந்தியாவிற்கு ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை வழங்குகிறது.

இருப்பினும், இருவருக்கும் இடையிலான உறவு பாதுகாப்பு ஒப்பந்தங்களோடு மட்டும் நிற்கவில்லை. பாலிவுட் படங்கள் ரஷ்யாவில் வெளியாகின்றன. ரஷ்யாவில் ஏராளமான இந்திய மாணவர்கள் படிக்கின்றனர். கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கூடத்தின் கிளை கூட ரஷ்யாவில் உள்ளது.

இந்தியா, யுக்ரேனுடனும் வர்த்தக உறவுகளைக் கொண்டுள்ளது மற்றும் இந்த இரு நாடுகளிலும் பல இந்திய குடிமக்கள் வாழ்கின்றனர். பெரும் எண்ணிக்கையில் மாணவர்கள் யுக்ரேனில் படிக்கச் செல்கிறார்கள். அதே நேரத்தில், கல்வியுடன் கூடவே வேலைக்காகவும் பல இந்தியர்கள் ரஷ்யா செல்கிறார்கள்.

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்திற்கு முன்பும் கூட, ரஷ்யா-யுக்ரேன் நெருக்கடி விவகாரத்தில் எந்த தரப்பையும் இந்தியா கண்டிக்கவில்லை.

இந்த வாரம், யுக்ரேனின் இரண்டு பகுதிகளான டொனெட்ஸ்க் மற்றும் லூஹான்ஸ்க் ஆகியவை ரஷ்யாவால் சுதந்திர பிரதேசமாக அங்கீகரிக்கப்பட்டன. அதன் பிறகு மேற்கத்திய நாடுகளின் கோபம் அதிகரித்தது. அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், பிரிட்டன், ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளும் ரஷ்யாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தன.

ஆனால் இந்த விஷயத்தில் இந்தியா நடுநிலை வகித்தது. அது ரஷ்யாவைக் கண்டிக்கவில்லை. கூடவே யுக்ரேனின் இறையாண்மை பற்றி தனது அதிகாரப்பூர்வ அறிக்கைகளில் அடிக்கோடிட்டுக் கூட காட்டவில்லை.

ரஷ்யா மீதான புதிய பொருளாதார தடைகளால் இந்தியாவுக்கு எஸ்-400 ஏவுகணை அமைப்புகளை வழங்குவதில் எந்த பாதிப்பும் ஏற்படாது என இந்தியாவுக்கான ரஷ்யாவின் தற்காலிக தூதர் ரோமன் பாபுஷ்கின் தெரிவித்துள்ளார். ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எந்த ராணுவ தளவாடங்களை வாங்கினாலும் அதன் விநியோகம் பாதிக்கப்படாது என்றார் அவர்.

"யுக்ரேன் நெருக்கடி குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பேசிய நேட்டோ அல்லாத நாடுகளில் முதல் நாடு இந்தியா. ராஜிய பேச்சுவார்த்தை மூலம் பதற்றத்தை குறைப்பது குறித்து இந்தியா பேசியது. ஆனால் ரஷ்யாவை அது கண்டிக்கவில்லை. கூடவே யுக்ரேனின் இறையாண்மையை பற்றியும் குறிப்பிடவில்லை," என்று ஐரோப்பிய கவுன்சிலுடன் சர்வதேச உறவுகளுக்காக பணியாற்றும் ரிச்சர்ட் கோவன் ட்வீட் செய்துள்ளார்.

திடீரென்று வாக்களித்த கென்யா

ஜனவரி 31 அன்று யுக்ரேன் பற்றி விவாதிக்க ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் வாக்கெடுப்பு நடந்தபோது, ​​​​இந்தியாவுடன் கென்யாவும் வாக்களிக்கவில்லை. ஆனால் செவ்வாயன்று, கென்யா திடீரென்று தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது.

கென்யா புதினை கடுமையான வார்த்தைகளால் சாடியது. ஆப்பிரிக்காவில் காலனித்துவம் முடிவுக்கு வந்தபோது இருந்த பதற்றம் போல கிழக்கு யுக்ரேனின் நிலைமை உள்ளது என்று கென்யா கூறியது.

யுக்ரேன் நெருக்கடியில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்த மக்களின் கருத்து பிளவுபட்டுள்ளது.

"யுக்ரேனில் ரஷ்ய படையெடுப்பு தொடர்பான இந்தியாவின் நிலைப்பாட்டை விமர்சிப்பவர்கள் அடிப்படை உண்மைகளை புறக்கணிக்கிறார்கள். ரஷ்யாவிற்கும் இந்தியாவுக்கும் இடையே இருக்கும் ஆழமான உறவுகள் காரணமாக இந்தியா தனது சொந்த நலன்களுக்கு எதிராக முடிவுகளை எடுக்க முடியாது" என்று இந்தியாவின் முக்கிய ஆங்கில நாளிதழான தி இந்துவின் சர்வதேச விவகாரங்களுக்கான ஆசிரியர் ஸ்டான்லி ஜானி எழுதியுள்ளார்.

X பதிவை கடந்து செல்ல, 3
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 3

"விதி அடிப்படையிலான சர்வதேச அமைப்பைப் பொருத்தவரை, ரஷ்யா கிரைமியாவை இணைத்தது மற்றும் டான்பாஸை அங்கீகரித்ததற்கு மிகவும் வலுவான சர்வதேச கண்டனங்கள் எழுந்தன. ஆனால் இஸ்ரேல், கோலன் அல்லது கிழக்கு ஜெருசலேமை இணைத்தபோது, ​​​​அது அங்கீகரிக்கப்பட்டது. சிரியாவின் பிரதேசத்தை துருக்கி ஆக்கிரமித்தபோது அது பற்றி பேசப்படவில்லை. நாம் உண்மையான அரசியலைப் பற்றி பேச வேண்டும்,"என்று ஸ்டான்லி கூறுகிறார்.

X பதிவை கடந்து செல்ல, 4
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 4

இந்தியாவின் நிலைப்பாடு குறித்த அமெரிக்காவின் கருத்து என்ன?

ஆனால் இந்தியாவின் நிலைப்பாடு யுக்ரேனையும் மேற்கத்திய நாடுகளையும் பாதிக்கவில்லை என்று சொல்லமுடியாது.

ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு "அதிருப்தி" அளிப்பதாகவும், மேலும் இந்தியாவிடம் இருந்து கூடுதல் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம் என்றும் வியாழனன்று யுக்ரேனின் தூதர் டாக்டர் இகோர் பொலிகா கூறினார்.

இந்தியாவும் அமெரிக்காவும் முக்கிய பாதுகாப்பு பங்காளிகள் என்றால், ரஷ்யா விஷயத்தில் இரு நாடுகளும் ஒன்றாக இருக்கிறதா? என்று வியாழனன்று அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் கேட்கப்பட்டது.

இந்தக் கேள்விக்கு பதிலளித்த ஜோ பைடன், "அமெரிக்கா இந்தியாவுடன் பேசும். இதுவரை இதற்கான முழுமையான தீர்வு கிடைக்கவில்லை" என்றார்.

பிபிசி இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீராங்கனை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: