மாலத்தீவு டூ ஸ்காட்லாந்து: புதிய வாழ்வை தொடங்க 8,000 கி.மீ கடந்து வந்த கடல் ஆமை

Sea Turtle

பட மூலாதாரம், PA Media

மாலத்தீவில் வலையில் சிக்கி காயமடைந்த பிறகு, ஸ்காட்லாந்தில் புதிய வாழ்வை தொடங்கும் வாய்ப்பு ஒரு கடல் ஆமைக்கு அளிக்கப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மாலத்தீவின் ரா அடோல் (Raa Atoll) பகுதியிலிருந்து காப்பாற்றப்பட்ட பின்னர், ஆமைகள் மறுவாழ்வு மையத்தில், ஆலிவ் ரிட்லி கடல் ஆமையான ஏப்ரல் பாதுகாக்கப்பட்டது.

விலங்குகள் நல மருத்துவர்கள் அதற்கு நீண்ட கால பராமரிப்பு தேவை என்றும், இந்த காட்டுப்பகுதியில் அது பிழைக்காது எனவும் கண்டறிந்தனர். 

இப்போது, பலோச்சில் உள்ள சீ லைஃப் லாச் லோமோண்ட் எனும் கடல் பகுதிக்கு இந்த ஆமை 5, 000 மைல்கள் (8,046 கி.மீ) கொண்டு வரப்பட்டுள்ளது. சர்வதேச கடல் ஆமை பாதுகாப்பு முயற்சியின் ஒரு பகுதியாக இந்த கடல் ஆமையை இந்த மையம் எடுத்துக் கொண்டுள்ளது.

ஏப்ரல் பெருங்கடலின் பகுதியில் கழுத்தை சுற்றிய நெகிழி பையுடன் வலையில் சிக்கியிருந்தது. அதனை கண்டுப்பிடித்தப்போது மிதந்து கொண்டிருந்தது.

வலைப்பின்னலில் சிக்கிக்கொண்டதால், அது தன் வலது துடுப்பை இழந்திருந்தது. மேலும், நெகிழி பையால் ஏற்படும் இறுக்கத்தால், இடது துடுப்பு காயமடைந்திருந்தது.

அதற்கு நுரையீரல் தொற்றும் இருப்பது எக்ஸ்ரே மூலமாக தெரியவந்தது. நுரையீரலில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. ஏப்ரலுக்கு நீரில் மிதக்கும் ஆற்றலிலும் பாதிப்பு இருந்தது; அதனால், கடலுக்குள் முழுமையாக மூழ்க முடியாது.

Turtle April

பட மூலாதாரம், PA Media

ஸ்காட்லாந்தில் ஏப்ரல் புதிய வாழ்வை தொடங்க, மாலத்தீவை சேர்ந்த இரண்டு சுற்றுச்சூழல் முகமைகள், ரிப்ஸ்கேபர்கள், மரைன் சேவர்ஸ், பிரிட்டனின் கடல் வாழ்வு மற்றும் பாதுகாப்பு அறக்கட்டளையான கடல் வாழ்வு அறக்கட்டளை ஆகிய குழுக்கள் ஐ.ஏ.ஜி கார்கோ விமானம் மூலம் செல்ல உதவினர்.

'ஃப்ளையிங் டர்ட்ரில் ப்ரொஜக்ட்' (Flying Turtles Project) மூலம் புதிய வசிப்பிடத்திற்கு அழைத்துவரப்பட்ட மற்ற ஐந்து கடல் ஆமைகளுடன் ஏப்ரல் இணைந்தது. மேலும் , 180 கடல் ஆமைகளை மீட்டு, கடலில் மிதக்கவிட்டனர் மரைன் சேவர்ஸ் எனும் கடலுயிரிகள் பாதுகாப்பு அமைப்பினர்.

"லாச் லோமோண்ட் குடும்பத்தில் ஏப்ரலை வரவேற்க எங்களுக்கு உற்சாகமாக உள்ளது. அவள் நன்றாக இருக்கிறாள்.", என்று 'சீ லைஃப் லாச் லமோண்ட்டின் மேலாளர் கேத்ரீன் ஏஞ்சல் கூறுகிறார்.

"எங்களின் அமைப்பில் ஒரு கடல் ஆமை இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது".

Turtle flown 5,000 miles for new life in Scotland

"நெகிழி மாசால் ஏப்ரல் பல காயங்களால் அவதிப்பட்டிருக்கிறாள். அதனால், 'ஸீ லைஃப் லாச் லமோண்ட்டில் ஏப்ரல் இருப்பது நெகிழி மாசு காரணமாக, உயிரினங்கள் எத்தகைய பாதிப்புகளுக்கு உள்ளாகிறது என்பதை குழந்தைகள் பார்க்க முடியும்".

"நீங்கள் வலைப்பின்னல், நெகிழி மாசு காரணமாக ஒரு கடலாமை காயமடைவதை மிகவும் நெருக்கமாக பார்க்கும்போது, இத்தகைய விஷயங்கள் மிகவும் தீவிரமாக சிந்திக்க வைக்கிறது", என்று ஸீ லைஃப் டிரஸ்ட் தூதர் அன்டி டோர்பேட் கூறியுள்ளார்.

இவையே எல்லா கடல் ஆமைகளிலும் மிகவும் அதிகமாக தற்போது காணப்படுகிறது என்று பல்லுயிரிகள் பாதுகாப்பு அறக்கட்டளையான டபுள்யூ.டபுள்யூ.எஃப் கூறுகிறது. ஆனால், அவை ஒரு சில இடங்களில் மட்டுமே கூடு கட்டும் என்பதால் எளிதில் சிக்கலில் மாட்டிக் கொள்ளும் என்றும் இந்த அமைப்பு தெரிவிக்கிறது. 

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :