கிளாஸ்கோ COP26 மாநாட்டில் அதிகம் கவனம் பெறும் 5 பேர்

பட மூலாதாரம், Getty Images / PA media
கிளாஸ்கோ COP26 மாநாட்டில் 200 நாடுகளை சேர்ந்த 20 ஆயிரம் பேர் கலந்து கொள்கின்றனர். இதில் நாட்டின் தலைவர்கள் மட்டுமல்லாது, பருவநிலை நிபுணர்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களும் வருகை தரவுள்ளனர்.
ஆனால் இதில் முக்கியமாக கவனிக்கப்படக் கூடியவர்கள் யார்?
ஜோ பைடன்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனக்கு முன்பு ஆட்சியில் இருந்த டிரம்ப், பாரிஸ் பருவநிலை ஒப்பந்த்திலிருந்து அமெரிக்கா வெளியேறும் என்ற முடிவை திரும்பப் பெற்றார். பருவநிலை மாற்றத்துக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்போவதாக அவர் உறுதியளித்தார்.
உலகின் மிகப்பெரிய பொருளாதாரமாக அமெரிக்கா உள்ளது. மேலும் அதிகப்படியாக கார்பன் உமிழும் நாடுகளின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. எனவே அமெரிக்கா இந்த மாநாட்டில் கலந்து கொள்வது அவசியமாக பார்க்கப்படுகிறது.
ஷி ஷென்ஹுவா
சீன அதிபர் ஷி ஜின்பிங் கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு எங்கும் பயணம் மேற்கொள்ளவில்லை. இந்த மாநாட்டிலும் அவர் கலந்து கொள்ளவில்லை.

பட மூலாதாரம், Getty Images
இவரின் சீனாவின் பருவநிலைக்கான சிறப்பு தூதர். ஷி ஜின் பிங்கின் சார்பாக இந்த கூட்டத்தில் கலந்து கொள்கிறார். 2007 - 2018ஆம் ஆண்டு காலகட்டத்தில் நடைபெற்ற பருவநிலை சார்ந்த கூட்டங்களில் நாட்டின் முக்கிய பேச்சாளராக இருந்தார். சீனா பருவநிலை மாற்றம் குறித்து என்ன உறுதியளிக்கிறது என்பது நாம் அனைவருக்கும் முக்கியமானது.
பாட்ரிக்கா எஸ்பினோசா
மெக்சிகோவின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தவர். ஐநாவின் முக்கிய பருவநிலை பேச்சாளர். உயர் குழுவில் இருக்கும் ஒருசில பெண்களில் இவரும் ஒருவர்.
நரேந்திர மோதி

பட மூலாதாரம், Pib india
கார்பனை உமிழும் நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. கார்பன் உமிழ்வை குறைக்கும் ஆண்டையும் இந்தியா இதுவரை குறிப்பிடவில்லை. அதாவது `நெட் ஜீரோ` நிலையை அடையும் இலக்கை இந்தியா தெரியப்படுத்தவில்லை.
அதேபோல கார்பன் உமிழ்வை குறைக்கும் திட்டத்தையும் ஐநாவிடம் வழங்கவில்லை. ஐந்தாண்டுக்கு ஒருமுறை இவ்வாறு திட்டம் குறித்து சமர்ப்பிக்க வேண்டும் என்று பாரிஸ் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே க்ளாகோவில் நடைபெறும் இந்த மாநாட்டில் முக்கிய முடிவுகள் குறித்து மோதி அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அலோக் ஷர்மா
பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினரான இவர் தற்போது COP26 தலைவராக உள்ளார். இவரின் பணி நாட்டின் தலைவர்களை பசுமைக் குடில் வாயு வெளியேற்றத்தை குறைக்கும் நடவடிக்கைகளுக்கு ஒப்புக் கொள்ள வைக்க வேண்டும்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












