இளவரசர் ஃபிலிப்: வாழ்க்கை வரலாற்றை சொல்லும் புகைப்படங்கள்

இளவரசர் ஃபிலிப்
படக்குறிப்பு, 1921ஆம் ஆண்டு ஜூன் 10ஆம் தேதி கிரேக்க தீவான கோர்ஃபுவில் பிறந்தார் எடின்பரோ கோமகன். அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் டென்மார்க், ஜெர்மனி, ரஷ்யா, பிரிட்டன் ஆகியவற்றின் அரச குடும்பங்கள் வரை விரிவடைந்துள்ளனர்.
இளவரசர் ஃபிலிப்

பட மூலாதாரம், GETTY IMAGES / ALAMY

படக்குறிப்பு, கிரீஸ் இளவரசர் ஆண்ட்ரூ, பேட்டன்பர்க் இளவரசி அலைஸின் ஒரே மகன் இளவரசர் ஃபிலிப்
இளவரசர் ஃபிலிப்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிரான்ஸில் உள்ள மெக்ஜேனட் அமெரிக்க பள்ளியில் தனது பள்ளிக் கல்வியைத் தொடங்கினார் இளவரசர் ஃபிலிப். படத்தில் இடமிருந்து இரண்டாவதாக இருப்பவர் இளவரசர். ஏழு வயதில் இங்கிலாந்தில் உள்ள தனது உறவினர் மவுன்ட்பேட்டன் வீட்டுக்குச் சென்ற அவர் அங்குள்ள சர்ரே பகுதியில் ஆரம்ப பள்ளிக்கல்வியைப் படித்தார்.
இளவரசர் ஃபிலிப்

பட மூலாதாரம், PA

படக்குறிப்பு, பின்னர் அவர் கல்வியாளர் கர்ட் ஹான் உருவாக்கிய கோர்டன்ஸ்டொன் உறைவிட பள்ளியில் படித்தார். அங்குதான் விளையாட்டுத்துறையில் தனது திறமைகளை வளர்த்துக் கொண்டார் இளவரசர் ஃபிலிப்.
இளவரசர் ஃபிலிப்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்த படம் தான் இளவரசி இரண்டாம் எலிசபெத்தும் (இடமிருந்து மூன்றாவது) அப்போது கடற்படை வீரராகவும் கிரீஸ் மற்றும் டென்மார்க் இளவரசருமாகவும் இருந்த ஃபிலிப் (வெள்ளை தொப்பியுடன் அரசிக்கு இடதுபுறமாக அவருடன் பேசுபவர்) அருகருகே இருக்கும்போது எடுக்கப்பட்ட முதல் படமாக கருதப்படுகிறது. 1939, ஜூலை 23ஆம் தேதி டார்மெளத்தில் உள்ள பிரிட்டிஷ் கடற்படை கல்லூரி நிகழ்வில் இளவரசி எலிசபெத் கலந்து கொண்டபோது எடுக்கப்பட்ட படம் இது.
இளவரசர் ஃபிலிப்

பட மூலாதாரம், PA

படக்குறிப்பு, இரண்டாம் உலக போரில், ஹெச்எம்எஸ் வேலியன்ட் போர்க்கப்பல் பணியில் தீரத்துடன் பணியாற்றினார் இளவரசர் ஃபிலிப். கிரீஸில் அந்த இத்தாலிய கப்பல் 1941இல் சிக்கியபோது, தேடுதல் விளக்கொளியை பீய்ச்சி அடித்து எதிரியை சிதறடிக்கச் செய்தது இளவரசர் ஃபிலிப்பின் தலைமை. இதற்காக கடற்படை சேவை குறிப்பில் அவரது பெயர் இடம்பெறச் செய்யப்பட்டது.
இளவரசர் ஃபிலிப்

பட மூலாதாரம், PA

படக்குறிப்பு, 1947இல் இளவரசி எலிசபெத்துடனான அவரது நிச்சயதார்த்தம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இளவரசர் ஃபிலிப்

பட மூலாதாரம், PA

படக்குறிப்பு, இந்த ஜோடிக்கு அதே ஆண்டு நவம்பர் 20ஆம் தேதி திருமணமானது.
இளவரசர் ஃபிலிப்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 1951ஆம் ஆண்டு துருக்கியில் உள்ள கடற்கரையில் நீர் சறுக்கல் விளையாட்டில் இளவரசர் ஃபிலிப் ஈடுபட்டபோது இந்த படத்தை ஒரு புகைப்படக் கலைஞர் எடுத்தார். ஹெஎம்எஸ் மேக்பீ கப்பலின் தளபதியாக கடைசியாக அவர் ஆற்றிய கடற்படை சேவையின்போது இந்த படம் எடுக்கப்பட்டது.
இளவரசர் ஃபிலிப்

பட மூலாதாரம், PA

படக்குறிப்பு, கவுட்ரே பூங்காவில் நடைபெற்ற ரோஹாம்ப்டன் கோப்பையின் அரையிறுதி போட்டியில், இளவரசர் ஃபிலிப் போலோ விளையாடுவதை இங்கு காணலாம். அவர் பிரிட்டனின் முன்னணி போலோ வீரர்களில் ஒருவராக திகழ்ந்தார்.
இளவரசர் ஃபிலிப்

பட மூலாதாரம், PA

படக்குறிப்பு, எடின்பரோ கோமகன் ஃபிலிப் ஒரு கிரிக்கெட் ஆர்வலர். இங்கிலாந்தின் முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரங்களைக் கொண்ட அவரது அணி, நார்ஃபோக்கின் கோமகன் தலைமையிலான சஸ்ஸெக்ஸ் வீரர்களைக் கொண்ட அணியை எதிர்கொண்ட போது எடுக்கப்பட்ட படம்.
இளவரசர் ஃபிலிப்
படக்குறிப்பு, இளவரசர் மற்றும் அரசிக்கு நான்கு குழந்தைகள். இடமிருந்து வலமாக, எட்வேர்ட், ஆண்ட்ரூவ், அன்னே, சார்லஸ் இருக்கும் இந்தப் படம் 1960-களில் எடுக்கப்பட்டது.
இளவரசர் ஃபிலிப்

பட மூலாதாரம், PA

படக்குறிப்பு, 25-ம் ஆண்டு திருமண நாளைக் கொண்டாட, இளவரசர் ஃபிலிப்பும், அரசியாரும் தங்களது பால்மோரல் எஸ்டேட்டில் இருக்கும் ஒரு பண்ணைக்கு வந்த போது எடுக்கப்பட்ட படம் இது.
இளவரசர் ஃபிலிப்

பட மூலாதாரம், PA

படக்குறிப்பு, 1977-ம் ஆண்டு அரசியார் பொறுப்பேற்றுக் கொண்டு 25 ஆண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடிய போது, இளவரசர் ஃபிலிப் உடன் இருந்தார். நியூசிலாந்தின் வடக்குத் தீவில், கிஸ்பர்னில் இருக்கும் ரக்பீ பூங்காவில், பிப்ரவரி மாதத்தில் நியூசிலாந்தின் பாலிநேசியன் திருவிழா தொடங்கப்பட்ட போது இருவரும் கலந்து கொண்டனர். அப்போது இருவரும் 'க்ளோக்' என்கிற ஒரு வகையான, மவோரி கஹு கிவி (கிவி தோலில் உருவாக்கப்பட்ட) ஆடையை அணிந்திருந்தனர். அப்போது எடுக்கப்பட்ட படமிது.
இளவரசர் ஃபிலிப்

பட மூலாதாரம், PA

படக்குறிப்பு, அதே ஆண்டில், பார்படாஸ் நாட்டுக்கு அருகில் அரச குடும்பத்தின் சொகுசுக் கப்பல் பிரிட்டானியாவில் இருந்த போது, அப்பகுதிக்கு அருகில்அதிவேக விமானம் பறந்த போது, அரசியாரும், இளவரசரும் கையசைத்தபோது எடுக்கப்பட்ட படமிது.
இளவரசர் ஃபிலிப்

பட மூலாதாரம், PA

படக்குறிப்பு, 1979-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், அரசியாரின் உறவினர் லூயிஸ் மவுன்ட்பேட்டன், அயர்லாந்தில் அவரது கப்பலில் வைத்து ஐஆர்ஏ வெடிகுண்டால் கொல்லப்பட்டார். அச்செய்தியைக் கேட்ட இளவரசர் ஃபிலிப், வடக்கு பிரான்ஸில் நார்மண்டியில் மோட்டார் வாகனப் போட்டியில் இருந்து, பிரிட்டனுக்குத் திரும்பி வந்த போது எடுத்த படம்.
இளவரசர் ஃபிலிப்

பட மூலாதாரம், PA

படக்குறிப்பு, இயற்கை மற்றும் அதை பேணிப் பாதுகாப்பதில் இளவரசர் ஃபிலிப் வாழ்நாள் முழுவதும் பேரார்வத்துடன் இருந்தார். எனவே உலக வன உயிரின நிதி என்று அழைக்கப்பட்ட அமைப்பின் சர்வதேச தலைவராக பதவி ஏற்பதற்கு சரியான தேர்வாக இருந்தார்.
இளவரசர் ஃபிலிப்

பட மூலாதாரம், PA

படக்குறிப்பு, பக்கிங்ஹாம் மாளிகை மீது பறந்து செல்லும் விமான அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்வதற்காக 1985-ம் ஆண்டு இளவரசர் ஃபிலிப் தன் குடும்பத்தினரோடு நிற்கும் படம். இதில் இளம் வயது இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசர் ஹாரியும் இருக்கிறார்கள்.
இளவரசர் ஃபிலிப்: வாழ்க்கை, புகைப்படங்களாக

பட மூலாதாரம், PA

படக்குறிப்பு, 1996-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்க அதிபர் நெல்சன் மண்டேலா அரசுப் பயணமாக பிரிட்டன் வந்த முதல் நாளில், பிரிட்டனின் ராணுவ மரியாதையை ஏற்றுக் கொள்ளும் போது அதிபர் மண்டேலா உடன் சென்றார் இளவரசர் ஃபிலிப்.
இளவரசர்

பட மூலாதாரம், PA

படக்குறிப்பு, இளவரசர் ஃபிலிப் 60 ஆண்டுகளுக்கு மேல் ராணியின் ஆட்சிக்கு அதரவாக இருந்தார். அதில் 2002-ம் ஆண்டு அரசியார் ஆட்சிப் பொறுப்பேற்று 50 ஆண்டு கால கொண்டாட்டமும் அடக்கம்.
இளவரசர்

பட மூலாதாரம், PA

படக்குறிப்பு, 1956-ம் ஆண்டு இளவரசர் ஃபிலிப் 'எடின்பெரொ கோமகன் விருது' திட்டத்தைக் கொண்டு வந்தார். இளைஞர்களின் திறனை மேம்படுத்துவது தான் இதன் நோக்கம். 2010-ம் ஆண்டு ஹோலிரோட்ஹவுஸில், எடின்பெரோ கோமகன் தங்க விருதைப் பெற்றவர்களோடு எடுத்த படம்.
இளவரசர்

பட மூலாதாரம், PA

படக்குறிப்பு, வயதான காலத்திலும் இளவரசர் ஃபிலிப் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டார். இதில் 2005-ம் ஆண்டு சாண்ட்ரிங்கமில் நடந்த குதிரைத் தேர் ஓட்டும் போட்டிகளும் அடக்கம்.
இளவரசர்

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, 2011-ம் ஆண்டு, இளவரசர் ஃபிலிப்பின் பேரன் மற்றும் இளவரசர் வில்லியம், கேதரின் மிடில்டனை திருமணம் செய்து கொண்டதற்காக, அரச குடும்பத்தை வாழ்த்த பக்கிங்ஹாம் அரண்மனைக்கு வெளியே ஆயிரக் கணக்கானோர் காத்திருந்த போது எடுத்த படம்.
இளவரசர்

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, 12 மாதங்களுக்குப் பிறகு, ராணி இரண்டாம் எலிசபெத் ஆட்சிப் பொறுப்பேற்று 60 ஆண்டுகள் நிறைவு செய்ததை கொண்டுடாடும் விதத்தில், கடந்த 2012-ம் ஆண்டு ஜூன் 03-ம் தேதி, தேம்ஸ் நதியில் கப்பல்களின் அணி வகுப்பு நடந்தது. அதில் ராயல் பார்ஜ் என்றழைக்கப்பட்ட தி ஸ்பிரிட் ஆஃப் சார்ட்வெல் கப்பலில், ராணி இரண்டாம் எலிசபெத் உடன் இருந்தார் இளவரசர் ஃபிலிப். அப்போது இளவரசர் ஃபிலிப் நல்ல உடல் நலத்தோடு இருப்பதாகத் தெரிந்தது. ஆனால் அடுத்த நளே (ஜூன் 04-ம் தேதி) சிறுநீரகப் பையில் தொற்று இருப்பதாகக் கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் இளவரசர் ஃபிலிப்.
ராண்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, உடல் நலம் தேறிய பின், 2012-ம் ஆண்டு லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டியில், பிரிட்டனின் ஈக்வஸ்ட்ரியன் அணி விளையாடுவதைக் காண இளவரசி அன்னே உடன் இருந்தார் இளவரசர் ஃபிலிப். பிரிட்டன் அணியில் அவரது பேத்தி சாரா ஃபிலிப்ஸ் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராணி எலிசபெத் மற்றும் இளவரசர் ஃபிலிப்

பட மூலாதாரம், PA Media

படக்குறிப்பு, அரசியார் முடிசூடி 60 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில், 2013-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் எடின்பரோவின் கோமகன் ஃபிலிப் வெஸ்ட்மின்ஸ்டர் அபேவில் இருக்கும் தேவாலயத்தின் சேவையில் கலந்து கொண்டார்.
ராணி எலிசபெத் மற்றும் இளவரசர் ஃபிலிப்

பட மூலாதாரம், PA Media

படக்குறிப்பு, கடந்த 2014-ம் ஆண்டு, அரசியார் மேற்கொண்ட வடக்கு அயர்லாந்து பயணத்தில் உடன் இருந்தார் இளவரசர் ஃபிலிப். அங்கு பெல்ஃபாஸ்டில் இருக்கும் ஹில்ஸ்பரோ கோட்டையின் பார்வையாளர் புத்தகத்தில் இளவரசர் ஃபிலிப் கையெழுத்திடும் படமிது.
ராணி எலிசபெத்

பட மூலாதாரம், PA Media

படக்குறிப்பு, இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்த தினத்தை அனுசரிக்கும் விதத்தில் விண்ட்சர் கோட்டையில் 70-ம் ஆண்டு நிகழ்ச்சியில், அரசியார் இரண்டாம் எலிசபெத் உடன் இருந்தார் எடின்பரோவின் கோமான் ஃபிலிப். அந்நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்ட நினைவுச் சுடர் பந்தங்களில் முதல் பந்தத்தை ஏற்றி வைத்தார் அரசியார் இரண்டாம் எலிசபெத்.
இளவரசர் ஃபிலிப்

பட மூலாதாரம், PA Media

படக்குறிப்பு, பாண்ட்பரி என்னுமிடத்துக்குச் சென்றிருந்த போது இளவரசர் ஃபிலிப் மற்றும் அவரது மகன் சார்லஸ் நகைச்சுவையான தருணத்தை பகிர்ந்து கொண்டனர். இங்கு தான் அரசியார் இரண்டாம் எலிசபத், தன் தாயார் எலிசபத்தின் திருஉருவச் சிலையைத் திறந்து வைத்தார்.
இளவரசர் ஃபிலிப்

பட மூலாதாரம், PA Media

படக்குறிப்பு, கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், பெட்ஃபோர்ட்ஷேரில் விப்ஸ்நேட் விலங்குகள் பூங்காவில் யானைகள் நல மையத்தை திறந்த போது இளவரசர் ஃபிலிப் அரசியாரோடு இருந்தார். அதே ஆண்டு மே மாதம், தன் 95-வது வயதில் அரசியாரின் முழு ஆதரவோடு, பொது விஷயங்களில் ஈடுபடுவதைக் குறைத்துக் கொள்வதாக அறிவித்தார் அவர்.
ராணி எலிசபெத்

பட மூலாதாரம், PA Media

படக்குறிப்பு, மான்செஸ்டர் நகரத்தில், அரியானா கிராண்டின் கச்சேரியில் கொல்லப்பட்டவர்களுக்காக, கடந்த 2017 மே 23-ம் தேதி அரசியாரும், இளவரசர் ஃபிலிப்பும், பக்கிங்ஹாம் அரண்மனையில் ஒரு விருந்து தொடங்குவதற்கு முன், ஒரு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்திய போது எடுத்த படம்.
இளவரசர் ஃபிலிப்

பட மூலாதாரம், PA Media

படக்குறிப்பு, பிரிட்டன் வரலாற்றிலேயே, இளவரசர் ஃபிலிப் தான், நீண்ட காலமாக பிரிட்டனின் ஆட்சிப் பொறுப்பில் இருந்தவரின் துணைவராக இருந்தவர் என்கிற பெருமையைப் பெற்றிருக்கிறார்.