கொரோனா வைரஸ் தடுப்பூசி: மக்களுக்கு முன்னதாக போட்டுக்கொண்ட ஸ்காட் மோரிசன்

ஸ்காட் மோரிசன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஸ்காட் மோரிசன்

உலகையே புரட்டிப்போட்ட கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசியை போடும் பணியை ஆஸ்திரேலியா நாளை முதல் தொடங்க உள்ளது.

கொரோனா வைரஸ் தடுப்பூசி தொடர்பாக மக்களிடையே நிலவும் அச்ச உணர்வை நீக்கி, நம்பிக்கையூட்டும் வகையில், தடுப்பூசி நாளை முதல் போடப்பட தொடங்குவதற்கு முன்பாக, இன்றே (பிப்ரவரி 21, ஞாற்றுக்கிழமை) அந்த நாட்டின் பிரதமர் ஸ்காட் மோரிசன் தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக்கொண்டார்.

ஆஸ்திரேலிய முழுவதும் நாளை முதல் கொரோனா தடுப்பூசி வழங்கும் பணிகள் அதிகாரபூர்வமாக தொடங்கும் நிலையில், அதுகுறித்து மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் பிரதமர் கலந்துகொண்ட இந்த நிகழ்வு நேரலையாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது.

உங்களுக்கு பிடித்த வீராங்கனைக்கு வாக்களிக்க CLICK HERE

சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் பராமரிப்பு இல்லங்களில் வசிக்கும் சிலர் கலந்துகொண்ட இந்த தடுப்பூசி செலுத்தும் நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் ஸ்காட் மோரிசன், "நாளை நாடுமுழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் தொடங்குகிறது. இந்த நிலையில், அதற்கு முன்னதாக, தடுப்பூசி பாதுகாப்பானது, முக்கியமானது என்பதையும் அதை கொரோனாவை முன்களத்தில் எதிர்த்து நின்று போராடுபவர்களுக்கும் எளிதில் பாதிக்கப்பட கூடியவர்களுக்கும் முதலில் அளிக்க வேண்டியது அவசியம் என்பதையும் வலியுறுத்த விரும்புகிறேன்" என்று கூறினார்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

இதையடுத்து, ஆஸ்திரேலியாவிலேயே முதலாவதாக 85 வயதான ஜேன் மாலிசியாக் என்ற மூதாட்டிக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

ஆஸ்திரேலிய சுகாதாரத்துறையால் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டுள்ள ஃபைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியே அடுத்த சில வாரங்களுக்கு பொது மக்களுக்கு செலுத்தப்படவுள்ளது.

Banner image reading 'more about coronavirus'
Banner

முன்னதாக, இந்த வார தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவின் மருத்துவ கட்டுப்பாட்டாளர், அஸ்ட்ராஜெனிகா மற்றும் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் இணைந்து உருவாக்கிய தடுப்பூசிக்கு தற்காலிக ஒப்புதல் அளித்தார். இது அடுத்த மாதம் முதல் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் வாரங்களில் அஸ்ட்ராஜெனிகா தடுப்பூசி போட்டுக்கொள்ள உள்ளதாக அந்த நாட்டின் சுகாதார அமைச்சர் கிரெக் ஹன்ட் கூறுகிறார்.

மார்ச் மாதத்தின் தொடக்கத்தில் சுமார் 40 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு ஆஸ்திரேலியா இலக்கு நிர்ணயித்துள்ளது.

மக்களுக்கு முன்னதாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட ஆஸ்திரேலிய பிரதமர்

பட மூலாதாரம், EPA

அதே சமயத்தில், ஆஸ்திரேலியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

குறிப்பாக, ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன், சிட்னி, பிரிஸ்பேன் உள்ளிட்ட நகரங்களில் நடைபெற்ற தடுப்பூசிக்கு எதிரான போராட்டங்களின்போது காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

ஆஸ்திரேலியாவில் இதுவரை கொரோனா வைரஸால் 28,920 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 909 பேர் உயிரிழந்துள்ளனர்.

BBC Indian Sports Woman of the Year

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: