You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தைவான் ராணுவ மாஸ் திருமணத்தில் இணைந்த லெஸ்பியன் ஜோடிகள் - சுவாரஸ்ய தகவல்கள்
தைவான் ராணுவத்தில் திருமணத்துக்காக கைகோர்த்த இளம் ஜோடிகள் வரிசையில், இரண்டு லெஸ்பியன் ஜோடிகள் இடம்பிடித்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஆசியாவிலேயே முதலாவது நாடாக தன்பாலினத்தவர்களின் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கொடுத்த நாடாக தைவான் விளங்கி வருகிறது. அங்குள்ள ராணுவத்தில் ஒவ்வொரு ஆண்டும் இளம் வீரர்கள், தங்களின் திருமணத்தை ஒரே இடத்தில் நடத்த அனுமதிக்கப்படுகிறது.
இந்த வழக்கத்தின்படி சுமார் நான்காயிரம் ராணுவ ஜோடிகள் தைவானில் இதுவரை கரம் பிடித்து இல்வாழ்க்கையில் இணைந்துள்ளனர்.
இந்த நிலையில், தன் பாலினத்தவர்கள், இரு பாலின உறவில் விருப்பம் உள்ளவர்கள், திருநங்கைகள் (எல்ஜிபிடி) திருமணத்தை கடந்த ஆண்டு சட்டப்பூர்வமாக தைவான் அரசு அங்கீகரித்தது.
இதையடுத்து தங்களின் திருமண விருப்பத்தை வெளிப்படுத்திய இரு லெஸ்பியன் ஜோடிகள் கரம் பிடிக்க, அந்நாட்டு ராணுவ தலைமையகம் அனுமதி வழங்கியது.
இதன்படி, சென் யிங் ஷுவான் என்ற இளம் ராணுவ அதிகாரி, லீ யிங் யிங் என்ற சக அதிகாரியை திருமணம் செய்து கொண்டார்.
"எல்ஜிபிடி சமூகத்தில் உள்ளவர்கள் எழுந்து நின்று தங்களுடைய விருப்பத்தை வெளிப்படுத்த தைவான் ராணுவம் ஒரு உந்து சக்தியாக இருக்கிறது. எங்களுடைய ராணுவம் வெளிப்படையான மனதுடன் செயல்படுவதில் மகிழ்ச்சி அடைகிறோம்," என்று சென் யிங் ஷுவான் தெரிவித்தார்.
தன் பாலின ஈர்ப்பு விவகாரத்தில் எப்போதுமே நான் வெளிப்படைாயகவே இருந்தேன். காதலுக்கு முன்பு எந்த பேதைமையும் இல்லை. அனைவரும் சமம் என்றும் அவர் கூறினார்.
மற்றொரு தம்பதி வாங் யியும் அவரது மனைவி மெங் யூ மேய், இந்த நிகழ்வையொட்டி தங்களின் அடையாள கொடியை ஏந்தியவாறு இருந்தனர். இதில் மெங்கின் பெற்றோர் திருமணத்துக்கு வரவில்லை. ஆனால், வாங்கின் பெற்றோர் தம்பதிக்கு ஆதரவாக வந்து வாழ்த்து தெரிவித்தனர்.
"தைவான் ராணுவத்தில் இது திருப்பத்தை ஏற்படுத்திய நிகழ்வு," என்று வாங்கின் தாயார் தெரிவித்தார். "ஈரின சேர்க்கையாளர்களுக்கு இது ஒரு வெறும் காகிதத்தில் நடக்கும் சம்பிரதாயம். ஆனால், ஒரு பாலின ஜோடிக்கு இந்த தருணம் மிக முக்கியானது," என்று அவர் கூறினார்.
தைவான் ராணுவத்தில் ஒரு பாலின ஜோடிகள் கைகோர்த்திருப்பது, முற்போக்கான மற்றும் பிரகாசமான சிந்தனையின் அடையாளமாக கருதுகிறோம் என்றும் மணம் புரிந்த ஜோடிகளுக்கு அவர்களின் விருப்ப பாலித்தவரை தேர்வு செய்ய அனுமதி வழங்கியதுடன் தமது ஆசீர்வாதமும் இருக்கும் என்று அந்நாட்டு ராணுவ தலைமையகம் தெரிவித்தது.
சட்டம் இருந்தாலும் தொடரும் தடங்கல்
தைவானில் எல்ஜிபிடி சமூகத்தினர் திருமணம் செய்து கொள்ள கடந்த ஆண்டு சட்டப்பூர்வ அனுமதி வழங்கப்பட்டபோதே ராணுவ வருடாந்திர மாஸ் திருமணத்தில் பங்கேற்று திருமணம் செய்து கொள்ள மூன்று ஜோடிகள் பதிவு செய்தனர். ஆனால், சமூக அழுத்தம், உள்ளூர் விமர்சனங்கள் காரணமாக அவர்கள் திருமண நிகழ்வில் பங்கேற்காமல் பின்வாங்கினர்.
ஒரே பாலினத்தவர்களின் திருமணம் தைவானில் அங்கீகரிக்கப்பட்டபோதும், ஈரினச்சேர்க்கையாளர்களுக்கு இணையான உரிமைகள் இன்னும் அவர்களுக்கு முழுமையாக கிடைக்கவில்லை என்ற கருத்து தைவானில் நிலவுகிறது.
தைவானில் ஒரே பாலினத்தவர்கள் திருமணம் செய்து கொள்ள சட்டப்பூர்வ உரிமை உண்டு என அந்நாட்டு அரசியலமைப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், அரசின் நடவடிக்கைக்கு பெரும்பாலான வாக்காளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் சமூக தடங்கல்கள் பல வடிவங்களில் தொடர்கின்றன.
அதன் விளைவாக சிவில் சட்டப்படி "திருமணம்" என்ற வார்த்தைக்கான விளக்கத்தில் எந்த மாற்ற்ததையும் தைவான் அரசு இதுவரை செய்யவில்லை. அதே சமயம், ஒரு பாலினத்தவர் திருமணத்துக்காக சிறப்புச் சட்டத்தை அந்நாட்டு அரசு கொண்டு வந்தது.
பள்ளிக்கூடங்களில் ஒரு பாலினத்தவர்கள் கல்வி பயில ஊக்குவிக்கப்படுகிறது. ஆனால், பல பெற்றோரும் மத குழுக்களின் பிரதிநிதிகளும், அரசின் இந்த முடிவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டிருக்கிறார்கள்.
பிற செய்திகள்:
- 7.5 சதவீத ஒதுக்கீடு: ஆளுநர் ஒப்புதல் அளித்த சட்டம் அரசு பள்ளி மாணவர்களுக்கு எந்த அளவுக்கு உதவும்?
- டிரம்ப் Vs பைடன்: அமெரிக்கத் தமிழர்கள் ஆதரவு யாருக்கு அதிகம்?
- கொரோனா அச்சம்: மீன் உணவு தவிர்ப்பால் நெருக்கடியில் இலங்கை மீனவர்கள் - கள நிலவரம்
- புதுச்சேரி அவலம்: அடிப்படை வசதிகளின்றி பல தலைமுறைகளாக வாழும் சமூகம்
- “பிரான்ஸ் தாக்குதல் ஒரு இஸ்லாமியவாத பயங்கரவாத தாக்குதல்” - அதிபர் மக்ரோங்
- நீட் இட ஒதுக்கீடு: அரசாணை பிறப்பித்தது ஏன்? - முதல்வர் பழனிசாமி விளக்கம்
- பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நரேந்திர மோதி பெயரில் முழக்கமா? உண்மை என்ன?
- ராஜராஜ சோழன் குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய 10 முக்கிய தகவல்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :