22,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பனி யுக கரடியின் உடல் மற்றும் பிற பிபிசி செய்திகள்

ice age bear

பட மூலாதாரம், NORTH-EASTERN FEDERAL UNIVERSITY

ரஷ்யாவின் ஆர்டிக் பிரதேசத்தில் பனி யுகத்தில் வாழ்ந்த கரடி ஒன்றின் உடல் எந்த விதமான சேதமும் இல்லாமல் நல்ல நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வடகிழக்கு ரஷ்யாவில் உள்ள லியாக்கோவ்ஸ்கி தீவுகளில் உறைபனிக்கு அடியில், கலைமான்கள் மேய்ப்பர்களால் இந்த கரடியின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

22,000 ஆண்டுகளில் இருந்து 39,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த செங்கரடி இனத்தைச் சேர்ந்ததாக இந்தக் கரடி இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

இதன் பற்கள் மற்றும் மூக்கு ஆகியவை துளிகூட சேதமில்லாமல் நல்ல நிலையில் இருக்கின்றன.

ice age bear

பட மூலாதாரம், NORTH-EASTERN FEDERAL UNIVERSITY

ரஷ்யாவிலுள்ள நார்த் ஈஸ்டர்ன் ஃபெடரல் பல்கலைக்கழகத்தில் இந்த கரடியின் உடல் ஆய்வுக்கு உட்படுத்தப்படும்.

18,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நாய்க்குட்டி ஒன்றின் உடல் சைபீரிய உறைபனியில் கடந்தாண்டு இதேபோல நல்ல நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

திலீபனுக்கு தடையை மீறி அஞ்சலி

தமிழீழ விடுதலைப் புலிகள்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆரம்பகால உறுப்பினரான திலீபனின் 33ஆவது நினைவேந்தலை கடைப்பிடிக்க முயன்ற தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் உறுப்பினரும், வட மாகாண சபை முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கைது செய்யப்பட்டுள்ளார்.

"சீன ராணுவத்துக்கு பலத்த சேதம்"

india vs china news

பட மூலாதாரம், Getty Images

கிழக்கு லடாக் பிராந்தியத்தில் உள்ள அசல் எல்லை கட்டுப்பாட்டு கோடு (எல்ஏசி) அமைந்த பகுதியில் கடந்த ஜூன் மாதம் இந்திய படையினருடனான மோதலில் சீன ராணுவ தரப்பு பலத்த சேதத்தை எதிர்கொண்டதாக இந்திய நாடாளுமன்றத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

சசிகலா எப்போது விடுதலையாவார்?

jayalalitha friend sasikala release date

பட மூலாதாரம், Getty Images

சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடகா மாநிலம் பரப்பன அக்ரஹார சிறையில் தண்டனை அனுபவித்து வரும் மறைந்த ஜெயலலிதாவின் தோழி வி.கே. சசிகலா அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 27ஆம் தேதி விடுதலை ஆகலாம் என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஐ) மூலம் பெறப்பட்ட தகவல் தெரிவிக்கிறது.

ஆனால், அவர் செப்டம்பர் மாத இறுதியிலேயே விடுதலையாகும் வாய்ப்புகளும் உள்ளன என்கிறார் அவரது வழக்கறிஞர்.

வெள்ளியில் வேற்று கிரக உயிர்கள்?

Venus

பட மூலாதாரம், JAXA/ISAS/Akatsuki Project Team

பூமிக்கும் சூரியனுக்கும் இடையே அமைந்துள்ள கோள்களில் ஒன்றான வெள்ளியில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இந்த ஆய்வு ஏன் அதிக கவனத்தைப் பெறுகிறது என்றால் பூமிக்கு வெளியே உயிர்கள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் நிறைந்த இடமாக வெள்ளியை ஆய்வாளர்கள் கருதியதில்லை.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: