இஸ்ரேல்: இஸ்லாமிய அரசில் 1100 ஆண்டுகளுக்கு முன்பு புதைத்து வைக்கப்பட்ட தங்க நாணயங்கள் கண்டுபிடிப்பு மற்றும் பிற செய்திகள்

பட மூலாதாரம், Reuters
இஸ்லாமிய அரசில் 1100 ஆண்டுகளுக்கு முன்பு புதைத்து வைக்கப்பட்ட தங்க நாணயங்கள் கண்டுபிடிப்பு
மத்திய இஸ்ரேலில் நடந்து வரும் அகழாய்வு ஒன்றில் 1100 ஆண்டுகளுக்கு முன்பு புதைத்து வைக்கப்பட்ட 425 தங்க நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இஸ்லாமிய அரசின் தொடக்கக் காலத்தில் அந்த பகுதி அப்பாஸிய கிலாபத் ஆட்சியின் கீழ் இருந்த போது பயன்படுத்தப்பட்ட நாணயங்களாக அவை இருக்கலாம் என கருதப்படுகிறது.
845 கிராம் எடை உள்ள அந்த நாணயங்கள் புதைக்கப்பட்ட காலத்தில் பெரும் மதிப்பு உடையதாக இருக்கலாம். அந்த நாணயங்களை கொண்டு கிலாபத்தின் அட்சியின் கீழ் உள்ள ஒரு நகரத்தில் சொகுசு வீடு ஒன்றை வாங்கி இருக்க முடியும் என்கின்றனர் வல்லுநர்கள்.
அந்த நாணயங்களுக்கு சொந்தக்காரர்கள் யார்? ஏன் அவர்கள் அதனை புதைத்து வைத்தனர் அல்லது ஏன் அதனை மீண்டும் எடுக்க வரவில்லை என்பது ஒரு புதிராகவே உள்ளது.
1100 ஆண்டுகளுக்கு முன்பு அந்த நாணயங்களை புதைத்து வைத்த நபர், மீண்டும் எடுக்கும் நோக்கத்துடனே புதைத்து வைத்திருக்கிறார். நாணயங்கள் உள்ள அந்த பாத்திரத்தை ஆணி அடித்து மூடி வைத்திருக்கிறார் என்கிறார் அகழாய்வின் இயக்குநர் லியாட் நடாவ் ஜிவ்.
கீழடியில் கிடைத்த நுண்கற்கால கருவிகளும் எரிந்த நெல் மணிகளும்

கீழடித் தொகுதியில் நடந்து வரும் அகழாய்வில் நுண்கற்கால கருவிகள், கரிமயமாகிப்போன நெல்மணிகள் உள்ளிட்டவை கிடைத்திருப்பது ஆய்வாளர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மாநிலம் முழுக்க நடந்துவரும் ஆய்வுகளில் ஆயிரக்கணக்கான தொல் பொருட்களும் நூற்றுக்கணக்கான முதுமக்கள் தாழிகளும் சேகரிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் தற்போது கீழடி தொகுதிகள், ஆதிச்சநல்லூர், சிவகளை, கொடுமணல் ஆகிய இடங்களில் அகழாய்வுப் பணிகள் நடந்துவருகின்றன. இந்த அகழாய்வுப் பணிகள் எந்த நிலையில் உள்ளன, கிடைத்த பொருட்கள் என்னென்ன என்பது குறித்த தகவல்களை மாநில தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் வெளியிட்டார்.
விரிவாகப் படிக்க:கீழடியில் கிடைத்த நுண்கற்கால கருவிகளும் எரிந்த நெல் மணிகளும்
காங்கிரஸ் தலைமை: விரைவில் புதிய தலைவர் - சோனியா, ராகுல் காந்தியின் எதிர்காலம் என்னவாகும்?

பட மூலாதாரம், Getty Images
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் காரிய கமிட்டி கூட்டத்தில் கட்சித்தலைமை மாற்றம் தொடர்பான முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போதைய நிலைப்படி, சோனியா காந்தியே இடைக்கால தலைவராக தொடருவார் என்று அக்கட்சியின் காரிய கமிட்டி தீர்மானித்துள்ளது.
இன்று காலை முதல் மாலை வரை நடைபெற்ற கூட்டத்தில் நிறைவுரையாற்றிய சோனியா காந்தி, கட்சித்தலைமை தொடர்பாக சில தலைவர்கள் அனுப்பிய கடிதம், பொதுவெளியில் கசிந்த நிகழ்வு, தம்மை காயப்படுத்தியதாக தெரிவித்தார்.
விரிவாகப் படிக்க:காங்கிரஸ் தலைமை: சோனியா, ராகுல் காந்தியின் எதிர்காலம் என்னவாகும்?
கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை: நிபுணர்களின் எச்சரிக்கையை மீறி அமெரிக்கா ஒப்புதல்

பட மூலாதாரம், Reuters
அமெரிக்காவில் கோவிட்-19 வைரஸ் நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை வழங்குவதற்கான அவசரகால நடவடிக்கைக்கு அந்நாட்டின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை (எஃப்டிஏ) அனுமதி வழங்கியுள்ளது.
கொரோனா நோயில் இருந்து மீண்டவர்களின் ரத்தத்தில் கலந்த ஊநீர் (Blood plasma) எனப்படும் பிளாஸ்மா எதிர்ப்பான்கள், அமெரிக்காவில் வாழும் 70 ஆயிரம் மோசமான நிலையில் உள்ளவர்களின் சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஆரம்பநிலை பரிசோதனைகளில் அதன் பயன்பாடு பாதுகாப்பானதாக இருந்தாலும் அது மேலும் வலுவுடன் செயலாற்றுகிறதா என்பதை அறிவது அவசியம் என்று அமெரிக்க உணவு மற்றும் மருந்துத்துறை தெரிவித்துள்ளது.
பெலாரூஸ் நாட்டில் என்ன நடக்கிறது? அதிபருக்கு எதிராக கொந்தளிக்கும் மக்கள்

பட மூலாதாரம், Getty Images
பெலாரூஸ் நாடு பெரிய போராட்டங்களின் பிடியில் சிக்கிக் கொண்டுள்ளது. நீண்டகாலம் அதிபராக இருந்து வந்த அலெக்ஸாண்டர் லூகஷென்கோவுக்கு ஆதரவாக தேர்தலில் தில்லுமுல்லு வேலைகள் நடந்திருப்பதாக புகார்கள் எழுந்ததால் அங்கு போராட்டங்கள் வெடித்துள்ளன.
பெலாரூஸ் நாட்டில் எதிர்கட்சிகளின் பேரணிகளில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமாக உள்ளது.
சர்வதேச அளவில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கைகளை வரைபட வடிவில் நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












