தங்க வேட்டை: ஒரே நாளில் ரூ.2 கோடி மதிப்புள்ள தங்கக்கட்டிகள் கண்டுபிடிப்பு மற்றும் பிற செய்திகள்

பட மூலாதாரம், AussieGoldHunters/DiscoveryChannel
ஆஸ்திரேலியாவில் தங்க வேட்டையில் ஈடுபட்ட இருவருக்கு வியப்பளிக்கும் வகையில், சுமார் 2,50,000 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் சுமார் இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள இரண்டு தங்கக்கட்டிகள் கிடைத்துள்ளன.
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்திலுள்ள தங்க சுரங்க நகரமான தர்னகுல்லா அருகே ப்ரெண்ட் ஷானன் மற்றும் ஈதன் வெஸ்ட் ஆகியோர் இந்த தங்கக்கட்டிகளை கண்டுபிடித்தனர்.
வியாழக்கிழமை அன்று ஒளிபரப்பப்பட்ட 'ஆஸி கோல்ட் ஹண்டர்ஸ்' என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அவர்களின் இந்த கண்டுபிடிப்பு குறித்து காட்டப்பட்டது.
இவர்கள் இருவரும் குறிப்பிட்ட சில இடங்களில் மண்ணை தோண்டி, அங்கு ஆழத்தில் தங்கம் இருக்கிறதா என்பதை உலோகத்தை கண்டறியும் கருவியை கொண்டு ஆய்ந்தனர்.
தங்களது இந்த கண்டுபிடிப்பு தொடர்பாக சிஎன்என் தொலைக்காட்சியிடம் பேசிய ஈதன் வெஸ்ட், "இவை நிச்சயமாக மிக முக்கியமான கண்டுபிடிப்புகளில் ஒன்றாகும். ஒரே நாளில் இரண்டு பெரிய தங்கக்கட்டிகளை கண்டறிந்திருப்பது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது" என்று அவர் கூறினார்.

பட மூலாதாரம், AussieGoldHunters/DiscoveryChannel
ஈதன் வெஸ்ட்டின் தந்தையோடு சேர்ந்து மேற்கொள்ளப்பட்ட இந்த தங்க வேட்டையில், ஒரு நாளுக்குள்ளாகவே மொத்தம் சுமார் 3.5 கிலோ எடை கொண்ட இரண்டு தங்கக்கட்டிகளை அவர்கள் கண்டறிந்ததாக இதுதொடர்பாக டிஸ்கவரி சேனல் வெளியிட்டுள்ள நிகழ்ச்சியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"இதற்கு முன்னர் யாருமே தோண்டாத இடத்தை தெரிவு செய்திருந்தோம். அங்குதான் எங்களுக்கு இந்த தங்கக்கட்டிகள் கிடைத்தன. நான் சுமார் நான்காண்டுகளாக தங்க வேட்டையில் ஈடுபட்டு வருகிறேன். இதுவரை கிட்டத்தட்ட 'ஆயிரக்கணக்கான தங்கக்கட்டிகளை' கண்டறிந்திருப்பேன்" என்று ஈதன் வெஸ்ட் கூறுகிறார்.

இலங்கையில் அரசியலமைப்பு சீர்திருத்தம் குறித்து அறிவிப்பு

பட மூலாதாரம், Getty Images
இலங்கையர்களின் ஒத்துழைப்புடன் புதிய அரசியலமைப்பை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
புதிய நாடாளுமன்றத்தில் நேற்று (வியாழக்கிழமை) மாலை அக்ராசன உரையை நிகழ்த்திய ஜனாதிபதி, தமது அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தை வெளியிட்டார்.

"மருத்துவராக வேண்டும் என்பதே அவளின் கனவு"

நீட் தேர்வு குறித்த அறிவிப்பு வந்தது முதல், அவள் சற்று சோகமாகவே இருந்தாள். ஆனால், இப்படி ஒரு முடிவு எடுப்பாள் என நினைத்துக்கூட பார்க்கவில்லை' என்று கூறியவாறு கண்ணீர் வடிக்கிறார் சுபஸ்ரீயின் தாய் சுமதி.
கோவையைச் சேர்ந்த மாணவி சுபஸ்ரீ, செவ்வாய்கிழமை இரவு தற்கொலை செய்துகொண்டார். நீட் தேர்வு அச்சத்தால் மாணவி தற்கொலை செய்துள்ளார் என காவல்துறையின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
விரிவாக படிக்க: நீட் தேர்வு: மருத்துவராக வேண்டும் என்பதே அவளின் கனவு - சுபஸ்ரீயின் பெற்றோர் உருக்கம்

ஆத்திகம் முதல் நாத்திகம் வரை: கொள்கைகள் ஒன்றாகப் பயணிக்கும் தமிழகம்

இந்திய ஒன்றியத்தில் உள்ள மாநிலங்களில் 'நாடு' என்ற பெயரைக் கொண்ட மாநிலங்கள் இரண்டு. ஒன்று தமிழ் நாடு. மற்றொன்று மகாராஷ்டிரம். 'மகாராஷ்டிரா' என்றால் வடமொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழிகளில் 'மிகப்பெரிய நாடு' என்று பொருள்.
அந்த மாநிலத்தில் பேசப்படும் மொழியின் பெயருடன், நாடு என்று அடையாளப்படுத்தப்படும் ஒரே மாநிலம் தமிழ்நாடுதான்.

விநாயகர் சதுர்த்தி விவகாரம்: அதிமுக VS பாஜக மோதலாக மாறுகிறதா?

பட மூலாதாரம், Getty Images
தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி விவகாரத்தை முன்வைத்து மத்தியில் ஆளும் பாஜக மற்றும் மாநிலத்தில் ஆளும் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் வார்த்தை மோதல்களைத் தொடங்கியுள்ளனர். ஆனால், மத்தியில் அதிமுகவை உள்ளடக்கிய பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி உறுதியாகவே இருப்பதாக தெரிவிக்கிறார் பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன்.
விரிவாக படிக்க: விநாயகர் சதுர்த்தி விவகாரம்: அதிமுக VS பாஜக மோதலாக மாறுகிறதா?


சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












