கொரோனா வைரஸ்: உலகின் மிகப்பெரிய அகதிகள் முகாமை தாக்கிய கோவிட்-19 தொற்று மற்றும் பிற செய்திகள்

கோப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

வங்கதேசத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய அகதிகள் முகாமில் வாழ்ந்து வரும் இரண்டு ரோஹிஞ்சா அகதிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

கிட்டதட்ட ஒரு மில்லியன் ரோஹிஞ்சா அகதிகள் வாழ்ந்துவரும் காக்ஸ் பஜார் முகாமில் தற்போது முதல் முறையாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், மேலும் 1900 பேர் பரிசோதனைக்காகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்த முகாமில் ரோஹிஞ்சா அகதிகள் நெருக்கடியான சூழ்நிலையிலும், சுத்தமான குடிநீரும் கிடைக்காமல் வாழ்ந்து வரும் நிலையில், இங்கு வைரஸ் பாதிப்பு ஏற்படலாம் உதவி அமைப்புகள் முன்பே எச்சரித்து இருந்தன.

"உலகின் மிகப்பெரிய அகதிகள் முகாமான காக்ஸ் பஜாருக்கு கொரோனா வைரஸ் வந்துவிட்டது. இந்த நிலை நீடித்தால் வைரஸ் தொற்று காரணமாக ஆயிரக்கணக்கானவர்கள் இறப்பார்கள்'' என வங்கதேசத்தின் சேவ் தி சில்ட்ரன் அமைப்பின் சுகாதார இயக்குனர் ஷமிம் ஜஹான் கூறியுள்ளார்.

Presentational grey line

நிர்மலா சீதாராமன் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அறிவித்த திட்டங்கள் என்னென்ன?

நிர்மலா சீதாராமன்

பட மூலாதாரம், Getty Images

ரேஷன் அட்டை இல்லாத உள்நாட்டிலேயே புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு இலவசமாக ஐந்து கிலோ அரசி அல்லது கோதுமை வழங்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, செவ்வாய் இரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோது அறிவித்த 'ஆத்ம நிர்பார் பாரத் அபியான்' (தற்சார்பு இந்தியா திட்டம்) என்ற பொருளாதார உதவி தொகுப்பு குறித்த விவரங்களை இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.

Presentational grey line

Remdesivir: கொரோனா வைரஸ் மருந்து தயாரிக்கும் இந்தியா, பாகிஸ்தான் - 127 நாடுகளுக்கு பலன்

கோப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் உள்ள மருந்து தயாரிப்பு நிறுவனங்களிடம் கோவிட்-19 சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ரெம்டிசீவர் (Remdesivir) மருந்தை உற்பத்தி செய்வதற்கான ஒப்பந்தத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த கைலீட் எனும் மருந்து தயாரிப்பு நிறுவனம் ஒன்று கையெழுத்திட்டுள்ளது.

அமெரிக்காவின் கைலீட் மருந்து தயாரிப்பு நிறுவனம் மற்றும் இந்தியா, பாகிஸ்தானில் உள்ள காப்புரிமை பெறப்படாத மருந்துகளைத் தயாரிக்கும் ஐந்து நிறுவனங்களிடம் கையெழுத்தாகியுள்ள இந்த ஒப்பந்தம் 127 நாடுகளுக்கான வைரஸ் மருந்தை தயாரிப்பதற்கு உதவும்.

Presentational grey line

கொரோனாவுக்கு பின் உலகெங்கும் குழந்தைகளைத் தாக்கும் புதிய நோய் - குழப்பத்தில் மருத்துவர்கள்

கோப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

தோல் அழற்சியை உண்டாக்கும், கொரோனா வைரஸ் உடன் தொடர்புடையது என்று கருதப்படும், ஒரு விதமான நோய்க்கு அமெரிக்கா மற்றும் மற்றும் பிரிட்டனில் உள்ள பல குழந்தைகள் ஆளாகியுள்ளனர்.

இவர்களில் மிகச் சிறிய எண்ணிக்கையிலான குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை தேவைப்படும் நிலையும் உள்ளது.

Presentational grey line

தமிழகத்திற்குள் பயணம் செய்பவர்கள், பிற மாநிலங்களில் இருந்து வருவோருக்கு என்னென்ன விதிமுறைகள்?

கோப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

தமிழகத்திற்குள் பயணம் செய்பவர்கள், தமிழ்நாட்டிற்கு வெளியில் இருந்து உள்ளே வருவோர் உள்ளிட்டவர்களை எப்படி நடத்த வேண்டும் என்பது குறித்த அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி, ஒரு மாவட்டத்திலிருந்து இன்னொரு மாவட்டத்திற்குச் செல்பவர்கள் கண்டிப்பாக 14 நாட்கள் அவரவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்படுவார்கள். அறிகுறிகள் இருந்தால் மட்டுமே கொரோனா சோதனை செய்யப்படும்.

Presentational grey line

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: