யேமன் கிளர்ச்சி: சுயாட்சியை பிரகடனம் செய்த பிரிவினைவாதிகள் - என்ன நடந்தது?

தெற்கு யேமனை சேர்ந்த பிரிவினைவாதிகள் அமைதி ஒப்பந்தத்தை மீறி சுயாட்சியைப் பிரகடனம் செய்துள்ளனர்.

ஏடனை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் தெற்கு இடைநிலை கவுன்சில் அவசரைநிலையைப் பிரகடனப்படுத்தி, இனி தாங்களே துறைமுகமான ஏடன் நகரம் மற்றும் தெற்கு மாகாணாங்களை ஆளப் போவதாகக் கூறி உள்ளது.

தெற்கு இடைநிலை கவுன்சிலை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆதரிக்கிறது.

இது ஆபத்தான பெருங்கேட்டை விளைவிக்கும் என சர்வதேசத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஏமன் அரசை ஆதரிக்கும் செளதி அரேபியா கூறி உள்ளது.

இது தொடர்பாகப் பேசி உள்ளா செளதி அரேபியாவின் வெளியுறவு துறை அமைச்சர், "இந்தச் சுயாட்சி பிரகடனம் மூலம் செளதி அரேபியாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் முழுவதுமாக மீறப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் மீண்டும் ஆயுத கிளர்ச்சிக்கு இது வழிவகுத்துள்ளது," என்று கூறி உள்ளார்.

ஹுத்தி கிளர்ச்சி குழுவுக்கும் யேமன் அரசுக்கும் நடந்து வரும்போரில் செளதி தலைமையிலான அரபு நாடுகளின் கூட்டமைப்பு யேமனுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளது.

அரபு நாடுகளின் கூட்டமைப்பில் எமிரேட்ஸ் இருந்தாலும், அந்நாடு பிரிவினைவாதிகளை ஆதரிக்கிறது.

யேமன் தொடர்புடைய செய்திகளைப் படிக்க:

சமீப காலத்தில் உலகில் மிக மோசமான மனிதநேய நெருக்கடி உருவாக இந்த யேமன் போர் காரணமாகியுள்ளது. ஏறத்தாழ ஒரு லட்சம் பேர் இந்தப் போரின் காரணமாகப் பலியாகி உள்ளனர்.

கொரோனாவும், ஏமனும்

கொரோனா காரணமாக மோசமாக பாதிக்கப்படும் ஐந்து நாடுகளில் ஏமனுன் ஒரு நாடு

அரபு நாடுகளிலேயே மிகவும் வறுமை நிலையில் உள்ள நாடான ஏமனில் 2015 ஆவது ஆண்டு முதல் ஹூத்தி கிளர்ச்சியாளர்களுக்கும் அரசுக்கு ஆதரவாக செளதி அரேபியா தலைமையிலான படைகளுக்கும் இடையே போர் நடந்து வருகிறது.

தற்போதைய கொரோனா பரவல் அந்த நாட்டில் நிலவும் மனிதநேய சிக்கலை மேலும் அதிகமாக்கியுள்ளது.

சண்டைகள் நடக்கும் காலம் நீடிக்கும் போது அதன் காரணமாக பாதிக்கப்படும் மக்கள் எண்ணிக்கையும் அதிகமாகிறது. 2016 ஆம் ஆண்டில் யேமனில் நாங்கள் 30 முதல் 40 லட்சம் வரையிலான மக்களுக்கு உதவி செய்தோம்.

ஆனால் தற்பொழுது ஒரு கோடியே 20 லட்சம் மக்களுக்கு உதவி செய்கிறோம் என்று பிபிசியிடம் தெரிவித்தார் உலக உணவு திட்டத்தின் தலைமை பொருளாதார வல்லுநர் ஆரிஃப் ஹுசேன்.

ஹுத்தி கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாடுகளில் இருக்கும் பகுதிகளில் மக்களுக்கு உதவிகள் சென்று சேர்வதை தடுத்து வருவதாகவும் உலக உணவுத்திட்டம் இந்த மாதத்தின் தொடக்கத்தில் தெரிவித்துள்ளது. யேமெனில் இந்த மாத தொடக்கத்தில் வைரஸ் தொற்று இருப்பது முதன்முதலாக உறுதி செய்யப்பட்டது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: