காலநிலை மாற்றம்: அமெரிக்காவை தாக்க இருக்கும் மற்றுமொரு பெருந்துயர் - 520 ஆண்டுகளுக்குப் பின் நடக்க இருக்கும் அவலம்

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்காவை தாக்க இருக்கும் மற்றுமொரு பெருந்துயர்
அமெரிக்க வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு ஒரு பெரும் வறட்சி ஏற்பட இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். குறிப்பாக இந்த வறட்சியானது அமெரிக்காவின் மேற்கு பகுதியைத் தாக்க இருக்கிறது. இந்த பெரும் வறட்சி இயற்கையான தொடர் நிகழ்வென்றும், இது 2000ஆம் ஆண்டிலேயே தொடங்கிவிட்டதென்றும், காலநிலை மாற்றம் இதனைத் துரிதப்படுத்துகிறது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்காவில் இதற்கு முன்பு 40 முறை வறட்சி ஏற்பட்டிருக்கிறதென்றும், அதில் 4 வறட்சிகள் பெரும் வறட்சி என்றும் கூறும் ஆராய்ச்சியாளர்கள். இவை 800, 1100, 1200 மற்றும் 1500 ஆகிய காலகட்டங்களில் ஏற்பட்டதாகக் கூறுகிறார்கள். இதன் காரணமாக மிக மோசமான அளவிற்குக் காட்டுத்தீ அதிகரிக்குமென்றும், முக்கிய நீர் நிலைகளான பொவெல் ஏரி மற்றும் மேட் ஏரி வற்றும் என்றும் கூறுகிறார்கள்.
இந்த ஆராய்ச்சி முடிவானது சயின்ஸ் சஞ்சிகையில் வெளியாகி உள்ளது.

உலக சுகாதார நிறுவனத்துக்கு உதவியை நிறுத்திய அமெரிக்கா: உங்களுக்கு என்ன பாதிப்பு?

பட மூலாதாரம், Getty Images
உலக சுகாதார நிறுவனத்துக்கு அமெரிக்கா அளித்து வரும் நிதியை நிறுத்தப் போவதாக அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் நோய்த் பரவல் விவகாரத்தில் அந்த நிறுவனம் "தன் அடிப்படைக் கடமையைச் செய்யத் தவறிவிட்டதால்'' இந்த நிதி உதவியை நிறுத்துவதாக அவர் கூறியுள்ளார். உலக சுகாதார நிறுவனம் என்பது என்ன, அதன் பணிகள் என்ன? சுகாதாரம் மற்றும் மருத்துவ விவகாரங்களில் அதுதான் உலகின் தலையாய அமைப்பு.

கொரோனா இந்தியா: பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13000-ஐ கடந்தது

பட மூலாதாரம், Getty Images
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 13000-ஐ கடந்துள்ளது. இந்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் இன்று மாலை வெளியிட்ட தகவலின்படி இதுவரை 13,387 பேர் இதுவரை கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1007 பேருக்கு தொற்று இருப்பது புதிதாக உறுதியாகியுள்ளது மற்றும் 23 பேர் இறந்துள்ளனர் என்று சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் இன்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
விரிவாகப் படிக்க:கொரோனா இந்தியா: "தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும் விகிதம் குறைகிறது"

தமிழகத்தில் மேலும் புதிதாக 56 பேருக்கு கொரோனா தொற்று; 103 பேர் குணமடைந்தனர்

பட மூலாதாரம், Getty Images
தமிழ்நாட்டில் மேலும் 56 பேருக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1323ஆக உயர்ந்துள்ளது. இது தொடர்பாக மாநில பொது சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், வெளிநாட்டில் இருந்து வந்த பயணிகளில் 34 பேர் விமான நிலையத்திற்கு அருகில் உள்ள இடத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 23,934 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 1891 பேர் நோய்க் குறிகளுடன் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? பாதுகாத்து கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்
- Pandemic என்றால் என்ன?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா?
- முறையாக கை கழுவுதல் எப்படி?
- கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்

சிங்கப்பூர்: பிழைக்க போன இடத்தில் கொரோனாவுக்கு இலக்காகும் தொழிலாளர்கள்

பட மூலாதாரம், Reuters
சில வாரங்களுக்கு முன்பு வரை கொரோனா வைரஸை சிறப்பாக கட்டுப்படுத்திய நாடு என பாராட்டுகளை பெற்று வந்த சிங்கப்பூர், கடந்த சில நாட்களாக திடீரென அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக செய்வதறியாமல் திகைத்து நிற்கிறது.
விரிவாகப் படிக்க:சிங்கப்பூரில் கொரோனாவுக்கு இலக்காகும் வெளிநாட்டு தொழிலாளர்கள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












