வங்கதேசத்தின் முதல் அதிபரை கொலை செய்த முன்னாள் ராணுவ வீரர் தூக்கிலிடப்பட்டார்

பட மூலாதாரம், Douglas Miller/getty Images
1975ஆம் ஆண்டில் வங்கதேச தலைவரை கொலை செய்த குற்றத்திற்காக முன்னாள் ராணுவ வீரரான அப்துல் மஜேத் தூக்கிலிடப்பட்டார்.
வங்க தேசத்தின் தந்தை என்று அழைகப்பட்ட அந்நாட்டின் முதல் அதிபரான க்ஷேக் முஜிபுர் ரஹ்மானை கொலை செய்த குற்றத்திற்காக தேடப்பட்டு வந்த குற்றவாளியான அப்துல் மஜேத், 25 ஆண்டுகளாக போலீஸாரிடம் சிக்காமல் இருந்து, சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.
இந்த வார தொடக்கத்தில் அப்துல் மஜேத்தின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் தள்ளுபடி செய்ததையடுத்து, வங்கதேச தலைநகர் தாகாவில் அவர் தூக்கிலிடப்பட்டார்.
தற்போதைய வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினாவின் தந்தையான க்ஷேக் முஜிபுர் ரஹ்மான் 1975ஆம் ஆண்டு ராணுவ சதியால் கொல்லப்பட்டார். அவரது குடும்ப உறுப்பினர்கள் பலரும் அப்போது கொல்லப்பட்டனர்.
வங்கதேசம், பாகிஸ்தானிடமிருந்து விடுதலை பெற்ற நான்கு ஆண்டுகளில் இந்த சம்பவம் நடந்தது.
இந்த சதி செயலுக்கு பிறகும் அப்துல் மஜேத், வங்கதேசத்தில்தான் இருந்து வந்தார். ஆனால், 1996ஆம் ஆண்டில் பிரதமராக ஹசினா தேர்ந்தெடுக்கப்பட்டபோது அவர் இந்தியாவுக்கு தப்பிச் சென்றதாக நம்பப்படுகிறது.

கொரோனா வைரஸ்: ஊரடங்கு நீட்டிப்பு கோரிக்கை

பட மூலாதாரம், ANI
இந்திய பிரதமர் நரேந்திர மோதி, அனைத்து மாநில முதலமைச்சர்கள் உடன் கொரோனா வைரஸ் தொடர்பாக ஆலோசனைக் கூட்டத்தை நேற்று நடத்தினார்.
இந்தக்கூட்டம் காணொளிக் காட்சி வாயிலாக நடைபெற்றது.
அதில் பல மாநில முதல்வர்கள் ஊரடங்கு உத்தரவை நீடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்ததாக தெரிகிறது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஊரடங்கை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்க வலியுறுத்தி உள்ளார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் உள்ளிட்ட பலரும் இந்தியாவில் ஊரடங்கை நீட்டிக்குமாறு பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக ஏஎன்ஐ முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
விரிவாக படிக்க: கொரோனா வைரஸ்: ஊரடங்கு நீட்டிப்பு, பிறந்த நாள் கொண்டாடிய பா.ஜ.க எம்.எல்.ஏ - சில தகவல்கள்

கபசுர குடிநீர் என்பது என்ன?அது கொரோனாவை குணப்படுத்துமா?

கொரோனா தொற்று வேகமாகப் பரவிவரும் நிலையில், இந்தியாவின் மாற்று மருத்துவ முறைகளில் ஒன்றான சித்த மருத்துவத்தில் கபசுர குடிநீர் ஒரு மருந்தாக முன்வைக்கப்பட்டது. தமிழ்நாட்டின் பல இடங்களில் இந்த மருந்தை வாங்க மக்கள் கடைகளில் குவிந்தனர். உண்மையில் கபசுர குடிநீர் என்பது என்ன, அது கொரோனாவை குணப்படுத்துமா, மாற்று மருத்துவ முறைகளில் கொரோனாவுக்கு தீர்வு இருக்கிறதா என்பதெல்லாம் குறித்து மூத்த சித்த மருத்துவர்களில் ஒருவரான கு. சிவராமன், பிபிசியின் செய்தியாளரான முரளிதரன் காசி விஸ்வநாதனிடம் பேசினார்.
"இந்த கோவிட் - 19ன், மருத்துவ ரீதியான அறிகுறிகளை முதலில் பட்டியலிட்டோம். காய்ச்சல், நெஞ்சில் சளி சேருவது, மூச்சு இரைப்பு போன்ற நிமோனியா நோய்க்கான அறிகுறிகள்தான் இந்நோய்க்கும் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறியது. அதே அறிகுறிகளைக் கொண்ட பழைய நோய்களுக்கு நாங்கள் மருந்துகளைக் கொடுத்திருக்கிறோம். அப்படிப் பார்க்கும்போது, நிமோனியா போன்ற மரணம் வரை கொண்டுசெல்லக்கூடிய காய்ச்சல்களுக்கான முக்கியமான சித்த மருந்து கபசுர குடிநீர்" என சிவராமன் தெரிவித்தார்.

கொரோனாவைரஸ்: துன்புறுத்தலுக்கு உள்ளாகும் சிறுவர்கள்

பட மூலாதாரம், EPA
இலங்கையில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த காலப் பகுதியில் சிறுவர் துன்புறுத்தல்கள் வெகுவாக அதிகரித்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவிக்கின்றது.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் கலாநிதி முதித்த விதானபத்திரன பிபிசி தமிழுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இலங்கையில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் அதிகரித்துள்ள பின்னணியில் கடந்த மார்ச் மாதம் 20ஆம் தேதி முதல் தொடர் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டது.
விரிவாக படிக்க: கொரோனாவைரஸ்: இலங்கையில் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் சிறுவர்கள்

கொரோனா வைரஸ் வெப்பநிலை அதிகமானால் அழிந்துவிடுமா?

பட மூலாதாரம், Spencer Platt/getty Images
வெப்பம் அதிகமாக இருக்கும் நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று பரவாது என கூறப்பட்டதை தற்போது நம்புவதற்கில்லை. ஏனென்றால் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கிட்டதட்ட அனைத்து நாடுகளிலும் பரவிவிட்டது. ஆனால் இதுகுறித்த புதிய ஆய்வுகள் ஏதேனும் நமக்கு நம்பிக்கை தருவதாக உள்ளதா?
கொரோனா வைரஸ் தொற்று பரவல் பருவ நிலையை பொறுத்தது என்பதை சொல்வதற்கு இன்னும் சற்று காலம் தேவை. கொரோனா தொற்று, பருவநிலையை பொறுத்ததா என்பதை தெரிந்து கொள்ள ஒரு வருடம் முழுக்க ஓர் இடத்தில் எவ்வாறு அந்த தொற்று பரவல் மாறுபடுகிறது என்பதை ஆராய வேண்டும்.
இருப்பினும் இது வெவ்வேறு பருவநிலை கொண்ட நாடுகளில் எவ்வாறு பரவுகிறது என்பதை வைத்து நாம் சிறிது புரிந்து கொள்ளலாம்.
விரிவாக படிக்க: வெப்பநிலை அதிகமானால் கொரோனா வைரஸ் அழிந்துவிடுமா?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












