கொரோனா வைரஸ்: மனித குரங்குகளுக்கு கோவிட்-19 தொற்று பரவும் அபாயம் மற்றும் பிற செய்திகள்

பட மூலாதாரம், Getty Images
மனித இனத்துடன் பரிணாம வளர்ச்சி ரீதியாக நெருங்கிய தொடர்புடையதாகக் கருதப்படும் மனிதக் குரங்குகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த மனிதர்கள் எவ்வாறு முடக்கப்பட்டிருக்கிறார்களோ, அதேபோல மனிதக் குரங்குகளும் அவற்றின் வாழ்விடங்களில் இருந்து வெளியேற முடியாத வகையில் முடக்கப்பட்டுள்ளன.
இதனால், மனிதக் குரங்குகள், ஒராங்குட்டான் போன்றவை இருக்கும் உயிரியல் பூங்காக்கள் ஆப்பிரிக்காவில் மூடப்பட்டுள்ளன.
அதிக சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் இடம் என்பதால் மனிதர்களிடம் இருந்து, அவற்றுக்கு பரவக்கூடிய வாய்ப்பு இருப்பதால் இவை மூடப்பட்டுள்ளன.
எனினும், மனிதர்களிடம் இருந்து மனிதக் குரங்குகளுக்கு வைரஸ் பரவுமா என்பது இதுவரை தெரியவில்லை.
கடந்த சில தினங்களுக்கு முன்பு அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் உள்ள உயிரியல் பூங்கா ஒன்றில் ஒரு பெண் புலிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

கொரோனா வைரஸ்: நியூயார்க்கில் சடலங்களை மொத்தமாக புதைக்கும் அவலம்

பட மூலாதாரம், Reuters
இந்த புகைப்படம் நியூயார்க்கில் சடலங்களை மொத்தமாக புதைக்கும் போது எடுத்தது. அங்கே கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
பாதுகாப்பு உடையில் இருக்கும் பணியாளர்கள் அந்த சவப்பெட்டிகளைப் புதைக்க ஒரு பெரிய குழியைத் தோண்டுகின்றனர்.
விரிவாக படிக்க: கொரோனா வைரஸ்: நியூயார்க்கில் சடலங்களை மொத்தமாக புதைக்கும் அவலம்

"கொரோனோ தொற்றில் தமிழ்நாடு இன்னும் இரண்டாம் கட்டத்திலேயே இருக்கிறது"

பட மூலாதாரம், Getty Images
தமிழ்நாட்டில் நேற்று மேலும் 77 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கும் நிலையில், அந்நோய் பரவுவதில் தமிழ்நாடு இன்னும் இரண்டாம் கட்டத்திலேயே இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
"தமிழக அரசின் பிரதானமான நோக்கம் இந்த நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதுதான். அதற்காகத்தான் இந்த ஊரடங்கு போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன" என தமிழக தலைமைச் செயலர் கே. சண்முகம் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ்: இந்தியாவில் அண்மைய தகவல்கள் என்ன?

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 412ஆக உயர்ந்துள்ளது. 24 மணி நேரத்தில் 547 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை மொத்தம் 206 பேர் உயிரிழந்துள்ளனர்.
வெளிநாடுகளுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துகளை ஏற்றுமதி செய்வதால் இந்தியாவில் அந்த மருந்துக்கு தட்டுப்பாடு நிலவக் கூடும் என்ற கருத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இணை செயலர் லாவ் அகர்வால், உள்நாட்டு தேவையான ஒரு கோடி மாத்திரைகளை விட 1.30 கோடி மாத்திரைகள் அதிகமாக கைவசம் உள்ளதாக விளக்கம் அளித்துள்ளார்.
விரிவாக படிக்க: கொரோனா வைரஸ்: இந்தியாவில் அண்மைய தகவல்கள் என்ன?

மாசுபாட்டையும், குப்பைகளையும் குறைத்த நோய்த்தொற்று

பட மூலாதாரம், RAVI
கொரோனா காரணமாக பொது மக்களின் நடமாட்டம் மற்றும் பயணம் குறைந்துள்ளதால், தமிழகத்தின் நகரப்பகுதிகளில் காற்று மாசுபாடு குறைந்துள்ளதோடு, சுற்றுலா தளங்களில் குப்பைகள் சேருவதும் குறைந்துள்ளது தெரிய வந்துள்ளது.
அதேபோல திடக்கழிவு சேர்வதிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
விரிவாக படிக்க: கொரோனா வைரஸ்: மாசுபாட்டையும், குப்பைகளையும் குறைத்த நோய்த்தொற்று

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












