கொரோனா வைரஸ்: உலகத்தில் ஒரே நாளில் 424 பேர் பலி, 9750 பேருக்கு தொற்று

இத்தாலி மருத்துவமனை ஒன்றில்...

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இத்தாலி மருத்துவமனை ஒன்றில்...

கொரோனா வைரஸ் தொற்று ஒரே நாளில் புதிதாக 12 நாடுகளுக்கு பரவியிருப்பதாகவும், புதிதாக 9,769 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும், புதிதாக 438 பேர் இறந்திருப்பதாகவும் உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது.

கொரோனா வைரஸ் உலகளாவிய தொற்றாக மாறியிருப்பதாக சில நாள்களுக்கு முன்பு அறிவித்த உலக சுகாதார நிறுவனம், பிறகு இந்த தொற்றின் மையமாக ஐரோப்பா ஆகியிருப்பதாகவும் அறிவித்தது.

Banner image reading 'more about coronavirus'
பேனர்

கொரோனா வைரஸ் பிரச்சனையின் பாதிப்பு குறித்து நாள்தோறும் சூழ்நிலை அறிக்கைகளை வெளியிட்டு வரும் உலக சுகாதார நிறுவனம், மத்திய ஐரோப்பிய நேரப்படி மார்ச் 14ம் தேதி வெளியிட்ட சமீபத்திய அறிக்கையில் தெரிவித்துள்ள விவரங்கள் நிலைமையின் தீவிரத்தை உணர்த்துகின்றன.

இந்த அறிக்கைப்படி, உலகில் இதுவரை 134 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் நோய்த் தொற்று பரவியுள்ளது. உலகில் மொத்தம் 1,42,539 பேருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டு, அவர்களில் 5,393 பேர் இறந்துள்ளனர். இதில் முந்தைய நாள் அறிக்கையை ஒப்பிட, புதிதாக நோய்த் தொற்றியவர்களின் எண்ணிக்கை 9,769 ஆகும். 438 பேர் புதிதாக இறந்துள்ளனர்.

முன்தயாரிப்பு மற்றும் எதிர்வினை ஆற்றுவதற்கான திட்டத்தை மட்டுமல்ல, கொரோனா ஏற்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படும் நோயாளிகளின் தீவிர திடீர் சுவாசத் தொற்று பிரச்சனைக்கு எப்படி சிகிச்சை அளிக்கவேண்டும் என்பதற்கான வழிகாட்டுதலையும் உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இத்தாலி மருத்துவமனை சோதனைக் கூடம் ஒன்றில்.

பட மூலாதாரம், Getty Images

முதல் முதலில் இந்த நோய்த் தொற்று கண்டுபிடிக்கப்பட்ட, மோசமாகப் பாதிக்கப்பட்ட சீனாவில், இந்த நோயின் தாக்கம் குறைந்துள்ளதாகவும் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. உலக சுகாதார நிறுவனத்தின் மேற்கண்ட சமீபத்திய அறிக்கையில், சீனாவில் புதிதாக 18 பேருக்கு மட்டுமே இந்த நோய் தொற்றியிருப்பதாகவும், 14 பேர் இறந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1000 பேருக்கு மேல் நோய்த் தொற்றிய நாடுகள் எவை, எவை?

உலக சுகாதார நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கைப்படி, 1,000 பேருக்கு மேல் நோய் தொற்று கண்டறியப்பட்ட நாடுகள், அந்நாடுகளில் நோய் தொற்றியோர் எண்ணிக்கை மற்றும் இறந்தவர்கள் எண்ணிக்கை:

இவை தவிர, நெதர்லாந்தில் 804 பேருக்கும், பிரிட்டனில் 802 பேருக்கும், டென்மார்க்கில் 801 பேருக்கும், ஸ்வீடனில் 775 பேருக்கும், நார்வேயில் 750 பேருக்கும் தொற்று ஏற்பட்டிருப்பதாகவும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா
Banner image reading 'more about coronavirus'

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: