பாகிஸ்தான் மசூதியில் குண்டுவெடிப்பு - 14 பேர் பலி

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் மசூதி ஒன்றில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் ஒரு போலீஸ் அதிகாரி உட்பட 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் இந்த விபத்தில் 21 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
போலீஸார் மற்றும் ராணுவத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களில் பல பேரின் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாக கூறப்படுகிறது.
"மசூதியில் அப்பாவி மக்களை தாக்கியவர்கள் உண்மையான முஸ்லிமாக இருக்க முடியாது," என பாகிஸ்தான் ராணுவ தலைவர் கமர் ஜாவித் பாஜ்வா தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்








