ஆஸ்திரேலியா காட்டுத்தீ: பிரதமருடன் கைக்குலுக்க மறுத்த மக்கள் - ஏன் இந்த கோபம்? மற்றும் பிற செய்திகள்

பட மூலாதாரம், Getty Images
'ஆஸ்திரேலிய பிரதமருடன் கைக்குலுக்க மறுத்த மக்கள்'
ஆஸ்திரேலிய காட்டுத்தீ விவகாரத்தில் பிரதமர் மோரிசன் உரிய நேரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என அந்நாட்டு மக்கள் கோபத்தில் உள்ளனர். காட்டுத்தீ பாதித்த பகுதிகளை அவர் பார்வையிட சென்ற போது பொதுமக்கள், "உங்களுடன் கைக்குலுக்க விரும்பவில்லை. தேர்தலில் இங்கிருந்து நீங்கள் வாக்கு ஏதும் பெறபோவதில்லை" என அவர் முகத்திற்கு நேரே கூறி உள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images
டிசம்பர் மாதம் இறுதியில் ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ பற்றி எரியும் போது பிரதமர் ஸ்காட் மோரிசன் குடும்பத்துடன் ஹவாய் தீவு சென்று இருந்தார். மக்கள் இதன் காரணமாக கோபமாக இருப்பதை அறிந்த அவர் உடனே நாடு திரும்பி, மக்களிடம் மன்னிப்பும் கேட்டார். ஆனாலும், அவர் மீதான கோபம் குறையவில்லை என்கிறார் பிபிசி ஆஸ்திரேலியா செய்தியாளர் ஜெய் சவேஜ்.

பட மூலாதாரம், Getty Images
செப்டம்பரில் பரவ தொடங்கிய காட்டுத்தீயில் சிக்கி இதுவரை 20 பேர் பலியாகி உள்ளனர், டஜன் கணக்கான மக்கள் காணாமல் போய் உள்ளனர், 1300 வீடுகள் தீக்கிரையாகி உள்ளது. ஒரு லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
தொடர்புடைய செய்தி:ஊர் பற்றி எரியும் போது விடுமுறை சென்ற பிரதமர் மன்னிப்பு கேட்டார்

காசெம் சுலேமானீ கொலை மூன்றாம் உலகப் போரைத் தூண்டுமா?

பட மூலாதாரம், Getty Images
இரானில் சக்திவாய்ந்த நபராக விளங்கிய ஜெனெரல் காசெம் சுலேமானீ அமெரிக்காவால் கொல்லப்பட்டிருப்பதால் அமெரிக்கா மற்றும் இரான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான பதற்றம் அதிகரித்துள்ளது.
இரானின் புரட்சிகர ராணுவ படைப்பிரிவின் தலைவரும், அந்த நாட்டிலேயே அதிக அதிகாரம் பெற்ற ராணுவத் தளபதியாக விளங்கியவருமான ஜெனரல் காசெம் சுலேமானீ கொல்லப்பட்டுள்ளது சர்வதேசஅளவில் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது.
விரிவாகப் படிக்க:காசெம் சுலேமானீ கொலை மூன்றாம் உலகப் போரைத் தூண்டுமா?

கடன் பாக்கி, காரில் டீசல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியர்கள் - பேருந்தில் பயணித்த அமைச்சர்

புதுச்சேரி அரசு கூட்டுறவு நிறுவனத்திற்கு சொந்தமான அமுதசுரபி பெட்ரோல் பங்கில் கடந்த வியாழக்கிழமை இரவு டீசல் நிரப்புவதற்காக சென்ற புதுச்சேரி கல்வி மற்றும் வேளாண் துறை அமைச்சர் கமலக்கண்ணனின் காரில் டீசல் நிரப்ப பங்க் பணியாளர்கள் மறுத்துள்ளனர்.
இதனால் கார் ஓட்டுநருக்கும், பங்க் ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அமைச்சரின் காரில் டீசல் நிரப்பாமலே அங்கிருந்து வெளியேறினார் காரின் ஓட்டுநர்.

ஆந்திர கிராமத்தில் முதல் முறையாக கோயிலுக்குள் நுழைந்த தலித்துகள்

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் ஹோசூர் கிராமத்தில், படித்த இளைஞர்கள் சிலர் பொது இடங்களில் மற்றவர்களுடன் சேர்ந்து சாப்பிடுவது மற்றும் எல்லோரும் படிக்கும் பள்ளிகளிலேயே படிப்பது, கிராம கோயில்களில் நுழைவது என்று முன்னெடுத்த இயக்கம் 2019 டிசம்பர் 14ஆம் தேதியன்று உள்ளூர் கோயிலில் நுழையும் வாய்ப்பை பெற்றுத் தந்தது.
விரிவாகப் படிக்க:ஆந்திர கிராமத்தில் முதல் முறையாக கோயிலுக்குள் நுழைந்த தலித்துகள்

குழந்தைகள் ஆபாசப் படம் பார்த்ததாக கோவையில் அஸ்ஸாம் இளைஞர் கைது

பட மூலாதாரம், Getty Images
கோவையில் குழந்தைகள் ஆபாசப் படத்தை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து பகிர்ந்ததாக அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல் அதிகரித்து வருவதை தொடர்ந்து தமிழகத்தில் ஆபாசப் படங்களை சமூக வலைதளங்களில் பரப்புபவர்கள் பற்றிய தகவல்களை காவல்துறையினர் திரட்டி வருகின்றனர்.
விரிவாகப் படிக்க:குழந்தைகள் ஆபாசப் படம் பார்த்ததாக கோவையில் அஸ்ஸாம் இளைஞர் கைது

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












