நியூசிலாந்தில் எரிமலை வெடிப்பு : 5 சுற்றுலா பயணிகள் உயிரிழப்பு

பட மூலாதாரம், Getty Images
நியூசிலாந்தில் உள்ள எரிமலை வெடித்ததில் பலர் காணாமல் போனதாகவும், ஐந்து பேர் உயிரிழந்துள்ளவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.
எரிமலை வெடிப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு சுற்றுலாப் பயணிகள் அங்குள்ள ஒயிட் தீவின் பள்ளத்தாக்கிற்கு சென்றுள்ளனர் என்பது தெரியவந்தது.
எரிமலை வெடிப்பு ஏற்பட்ட பகுதியில் இருந்து 23 பேர் மீட்கப்பட்டதாகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் காவல்துறையினர் கூறுகின்றனர். மீட்பு பணிகளை மேற்கொள்ளவது தற்போதைய சூழ்நிலையில் மிகவும் ஆபத்தானது என்றும் தெரிவிக்கின்றனர்.
ஒயிட் தீவு வகாரி என்றும் அழைக்கப்படும், இந்த எரிமலை எந்த நேரத்திலும் வெடிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இருப்பினும் இந்த தீவு மிக முக்கியமான சுற்றுலா தளமாக விளங்கியது. பலர் இங்கு ஒரு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்வர்.
எரிமலையில் என்ன நடந்தது ?
உள்ளூர் நேரப்படி சரியாக காலை 02 11 மணியளவில் எரிமலை வெடித்தது.
காலை சுற்றலா பயணத்தை முடித்துவிட்டு படகில் சென்றுகொண்டிருந்தபோது, எரிமலை வெடித்து புகை மூட்டமாக காட்சியளிக்கும் எரிமலையை சுற்றுலா பயணி மைகேல் சண்டே காணொளியாக பதிவு செய்துள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
எரிமலை வெடிப்பதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு அந்த மலை அடிவாரத்தில் தான் இருந்ததாக பிபிசியிடம் அவர் கூறினார்.
''பாதுகாப்பான சூழலே அங்கு நிலவியது, ஆனால் சுற்று பயணம் மேற்கொள்ளவரும் குழுக்களின் எண்ணிக்கையை அவர்கள் குறைக்க முயற்சித்தனர். '' என்றும் மைக்கேல் கூறினார்.
''நாங்கள் திரும்பி செல்வதற்காக படகில் ஏறிவிடும். பிறகு யாரோ ஒருவர் சொல்லியே, எரிமலை வெடித்ததை கவனித்தோம், முதலில் பயந்து விட்டேன்'' என்று அவர் மேலும் தெரிவித்தார்.
''படகை திருப்பி கொண்டு சென்று அங்கு காத்திருந்த இன்னும் சில சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்து சேர்ந்தோம்'' என்றும் மைக்கேல் தெரிவித்தார்.
அங்கு நேரடியாக பதிவு செய்யப்பட்ட காட்சிகளில் இன்னும் சிலர் மலை அடிவாரத்தில் இருப்பது தெரியவந்தது.

பட மூலாதாரம், Reuters
ஒயிட் தீவுக்கு யாரெல்லாம் சென்றனர்?
ஒயிட் தீவை சுற்றி நியூசிலாந்து மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த பல சுற்றுலா பயணிகள் இருந்ததாக நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தெரிவித்துள்ளார்.
எரிமலை வெடித்தபோது அங்கு இருந்த தங்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் குறித்து அனைவருக்கும் கவலை உள்ளது என்பதை நான் அறிவேன்- மீட்புப்பணிக்காக காவல்துறையினர் தங்களால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர் எனவும் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தெரிவித்தார்.
காவல்துறையினர் மீட்பு பணிக்காக தனி குழுவை அமைத்து செயல்படுகின்றனர், ஆனால் கற்கள் மற்றும் எரிமலை துகள்கள் வெடித்து சிதறுவதால், அங்கு செல்வதில் இடையூறு ஏற்பட்டுள்ளது என பிரதமர் கூறினார்.
இந்த கட்டத்தில், தீவிற்குள் சென்று மீட்பு பணி மேற்கொள்வது போலீசாருக்கு மிகவும் ஆபத்தான பணியாக உள்ளது என காவல்துறை அதிகாரி ஜான் டிம்ஸ் கூறுகிறார். மீட்பு பணியை பாதுகாப்பாக மேற்கொள்ள நிபுணர்களிடம் அறிவுரை கேட்டு செயல்படுகிறோம் என்றும் ஜான் டிம்ஸ் தெரிவித்தார்.
ஆரம்ப கட்டத்தில் தீவை சுற்றி 100 பேர் இருந்ததாக காவல் துறையினர் கூறுகின்றனர், பிறகு 50 பேர் என எண்ணிக்கையை குறைத்துள்ளனர்.
பயனாளர்களில் சிலர் ராயல் கரீபியனுக்குச் சொந்தமான ஓவன்ஷன் ஆஃப் தி சீஸ் என்ற கப்பல் மூலம் பயணித்து ஒயிட் தீக்கு வந்தவர்கள் என்று கருதுகின்றனர்.

இந்த எரிமலை வெடிப்பு எதிர்பார்க்கப்பட்டதா?
டிசம்பர் 3 ஆம் தேதி, புவியியல் ஆபத்து கண்காணிப்பு வலைத்தளமான ஜியோநெட் "எரிமலையின் வெடிக்கும் தன்மையை நாம் எதிர்பார்க்கும் காலக்கட்டம் வந்துவிட்டது " என்று எச்சரித்தது, மேலும் "தற்போதைய செயல்பாட்டு நிலை பார்வையாளர்களுக்கு நேரடி ஆபத்தை ஏற்படுத்தாது". என்றும் கூறியது.
எச்சரிக்கை நிலை சமீபத்தில் அதிகரிக்கப்பட்டது. மக்கள் மத்தியில் பரபரப்பும் நிலவியது, என்று ஆக்லாந்து பல்கலைக்கழகத்தின் இணை பேராசிரியர் ஜேன் லிண்சே கூறினார்.
இந்த எரிமலையில் இருந்து நீராவி மட்டுமே வெளிப்படுகிறது, இன்னும் முழு விவரம் தெரியவில்லை என்றும் லிண்சே கூறினார்.
எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் அங்கு சுற்றுலா பயணிகளை அனுமதித்திருக்க கூடாதே ? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, "இது தனியாருக்குச் சொந்தமான தீவு மற்றும் ஏராளமான தனியார் சுற்றுலா நிறுவனங்கள் இங்கு இயங்குகின்றன. எனவே அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இல்லை.'' என்று பதிலத்தார்.
ஒயிட் தீவு பல ஆண்டுகளாக பல எரிமலை வெடிப்புகளைக் எதிர்கொண்டுள்ளது, மிக சமீபத்தில் 2016லும் ஒரு எரிமலை வெடித்தது, ஆனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
எரிமலை வெடிப்பின் துகள்கள் அப்பகுதி மக்களின் குடி இருப்புகளில் விழ வாய்ப்புள்ளதால், காவல் துறையினர் அவர்களை வேறு இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தியுள்ளனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












