பெண் ஊழியர்களுக்கு 'மாதவிடாய் பேட்ஜ்' அறிமுகப்படுத்திய ஜப்பான் கடை

பட மூலாதாரம், TWITTER
தங்களது கடையில் பணிபுரியும் பெண்கள் மாதவிடாய் காலத்தின்போது, அவர்கள் விரும்பினால் அதை மற்ற ஊழியர்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் பேட்ஜ் அணிந்துகொள்ளும் முறை குறித்து 'மறுபரிசீலனை' செய்யவுள்ளதாக ஜப்பானிலுள்ள பல்பொருள் அங்காடி ஒன்று தெரிவித்துள்ளது.
'மிஸ் பீரியட்' என்று அறியப்படும் கேலிச்சித்திர பாத்திரம் அச்சிடப்பட்ட பேட்ஜை அணிந்துகொள்ளும் திட்டத்தை கடந்த அக்டோபர் மாதம் 'தி டைமாறு' எனும் ஜப்பானிய பல்பொருள் அங்காடி செயற்படுத்தியது.
அதாவது, இந்த பேட்ஜை அணிந்துள்ள ஊழியர்கள் அதன் மூலம் கூடுதல் உதவிகள் அல்லது நீண்ட இடைவேளைகள் ஆகியவற்றை பெறுவதற்கு இது பயனுள்ளதாக இருக்கும் என்று கருதியதாக அதன் நிர்வாகம் கூறுகிறது.
"ஊழியர்களின் மாதவிடாய் குறித்த விவரத்தை இதன் வாயிலாக வாடிக்கையாளர்களிடம் தெரிவிக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை" என்று அந்த கடையின் செய்தித்தொடர்பாளர் பிபிசியிடம் கூறினார்.
இந்த பேட்ஜ்கள் அறிமுகப்படுத்தப்பட்டது ஏன்?
'தி டைமாறு' என்ற பல்பொருள் அங்காடித் தொடரின் ஒசாகா பகுதியிலுள்ள கிளையில், பெண்களுக்காக பொருட்கள் வைக்கப்பட்டுள்ள பிரிவில் பணிபுரியும் கிட்டத்தட்ட 500 ஊழியர்களுக்கு கடந்த அக்டோபர் மாதம் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
சுய விருப்பத்தின் பேரில் ஊழியர்கள் தங்களது மாதவிடாயை பேட்ஜ்கள் வாயிலாக தெரியப்படுத்தும் யோசனையை தங்களது ஊழியர்களே அளித்ததாகவும், இதை கடையின் ஒரு பகுதியில் பணிபுரிபவர்களுக்கு மட்டுமே அறிமுகப்படுத்தியதாகவும் அந்த கடையின் நிர்வாகத்தின் தரப்பில் கூறப்படுகிறது.
பெண்கள் சார்ந்த பொருட்கள் விற்கப்படும் பகுதியில் மட்டுமே இந்த பேட்ஜ் அணியப்படுவதை அதில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துகள் சுட்டிக்காட்டுகின்றன.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
'ஊழியர்களின் பணிச் சூழலை மேம்படுத்தும் எண்ணத்துடனே' இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக அந்த கடையின் செய்தித்தொடர்பாளர் யோகோ ஹிகுச்சி கூறுகிறார்.
முன்னதாக, இந்த பேட்ஜ் அறிமுகப்படுத்தப்பட்டபோது எழுந்த குழப்பங்களால், வாடிக்கையாளர்களிடம் இருந்து எதிர்மறையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. மேலும், சில ஊழியர்களால் இந்த பேட்ஜை அணிவதன் பயன்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும், சிலர் தயக்கம் காட்டினார்கள் என்றும் 'தி டைமாறு' பல்பொருள் அங்காடியின் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
"தங்களதுசக ஊழியர் ஒருவர், மாதவிடாய் காலத்தின்போது இருந்தால், அவர்களுக்கு சுமையை தூக்குவதற்கு உதவுவதற்கும், நீண்ட இடைவேளை எடுப்பதற்கும் மற்ற ஊழியர்கள் வழிவகை செய்வதற்கு இது உதவும்," என்று ஹிகுச்சி கூறுகிறார்.
தங்களது விளக்கத்தை அறிந்த சில வாடிக்கையாளர்கள் கடையின் தொலைபேசிக்கு அழைத்து, ஆதரவு தெரிவித்ததாக ஹிகுச்சி மேலும் கூறுகிறார்.
சமீப நாட்களில் இந்த திட்டத்திற்கு வரவேற்பு பெருகி வரும் நிலையிலும், இந்த திட்டத்தை தொடரலாமா, வேண்டாமா என்பது குறித்து யோசித்து வருவதாக 'தி டைமாறு' கூறுகிறது.
வாடிக்கையாளர்களுக்கு தெரியாத வகையில், சக ஊழியர்கள் மாதவிடாய் காலத்தில் உள்ளதை பணியாளர்கள் அறிந்துகொள்ளும் வகையில் திட்டத்தை மறுசீரமைப்பதற்கு முயற்சித்து வருவதாக யோகோ ஹிகுச்சி கூறுகிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












