பாலியல் வல்லுறவுக்கு ஆளான 3 வயது மியான்மர் குழந்தை: கைதானவருக்கு ஆதரவாக போராடும் மக்கள்

நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும் என்ற நிலையை இந்த வழக்கு ஏற்படுத்தியுள்ளது.

பட மூலாதாரம், AFP/Getty Images

படக்குறிப்பு, நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும் என்ற நிலையை இந்த வழக்கு ஏற்படுத்தியுள்ளது.

(எச்சரிக்கை: இந்த செய்தியில் வரும் விவரங்கள் உங்களுக்கு மன வருத்தத்தை உண்டாக்கலாம்.)

அந்த பெண் குழந்தைக்கு இப்போது மூன்று வயது. அந்த குழந்தை பாலியல் வல்லுறவுக்கு ஆளானபோது, வயது இரண்டுதான். இவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக சந்தேகப்படுபவர் மீதான விசாரணையில் இந்த குழந்தை சாட்சியம் அளித்துள்ளது.

தனக்கு என்ன நடந்தது? என்று சிறப்பாக பயிற்சி பெற்ற வழக்கறிஞர் உடனிருக்கும்போது விக்டோரியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) சுமார் இரண்டு மணிநேரம் சாட்சியம் அளித்தார்.

மூன்று வயதாகும் மியான்மரை சேர்ந்த இந்த குழந்தை தனக்கு என்ன நடந்தது என்று விவரிப்பதை காணொளி இணைப்பு மூலம் நீதிமன்றத்தில் இருப்போர் பார்த்தனர்.

முந்தைய விசாரணைகளில் பத்திரிகையாளர்களும், பொது மக்களும் அனுமதிக்கப்பட்ட நிலையில், இந்த விசாரணையின்போது யாரும் நீதிமன்றத்தில் நுழைய அனுமதிக்கப்படவில்லை.

பல காரணங்களால் விக்டோரியாவின் இந்த வழக்கு சர்ச்சைக்குரியதாக மியான்மரில் பார்க்கப்படுகிறது.

செயல்திறனற்ற காவல்துறையினர் குற்றம் செய்யாத நபரை கைது செய்திருக்கிறார்கள் என்ற சந்தேகம் எழுந்துள்ளதால், மக்கள் கோபம் கொண்டுள்ளனர். இந்த குழந்தை சாட்சியம் அளித்தபோது, தற்போது விசாரிக்கப்படுபவரை சுட்டிக்காட்டாமல் வேறு இருவர் இந்த பாலியல் தாக்குதல் நடத்தியதாக அடையாளம் காட்டியுள்ளார்.

காவல்துறையினர் சொல்வதென்ன?

கடந்த மே மாதம் 16ம் தேதி காலை மியான்மரின் தலைநகர் நேபிதாவிலுள்ள 'விஸ்டம் ஹில்' தனியார் மழலையர் பள்ளிக்கு இந்த குழந்தை செல்கிறது. இந்த பெண் குழந்தை வீட்டுக்கு வருவதற்கு முன்னால் பாலியல் வல்லுறுவுக்கு உட்ப்படுத்தப்பட்டதாக குடும்பத்தினரும், உள்ளூர் காவல்துறையினரும் தெரிவிக்கின்றனர்.

அப்போது அந்தக் குழந்தைக்கு இரண்டு வயதே நிறைவடைந்திருந்தது.

இந்த பெண் குழந்தைக்கு ஏற்பட்டிருந்த காயங்களை முதலில் கவனித்த தாய், மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். மருத்துவ பரிசோதனையில் இந்த குழந்தை மீது பாலியல் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது தெரியவந்தது என்கிறது காவல்துறை.

மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டிருந்ததால், தொடக்கத்தில் விக்டோரியாவோடு பேச முடியவில்லை என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர், ஆனால், பின்னர் அந்த குழந்தையிடம் விசாரிக்கப்பட்டது என்று தந்தை கூறுகிறார்.

பிபிசி நியூஸ் பர்மிய மொழிப்பிரிவுக்கு கிடைத்த சிசிடிவி காணொளி, சந்தேக நபர் நர்சரிக்கு வெளியே இருப்பதை காட்டுகிறது.

பட மூலாதாரம், Supplied

படக்குறிப்பு, பிபிசி நியூஸ் பர்மிய மொழிப்பிரிவுக்கு கிடைத்த சிசிடிவி காணொளியி சந்தேக நபர் நர்சரிக்கு வெளியே இருப்பதை காட்டுகிறது.

மே மாதம் 30ம் தேதி 29 வயதான பள்ளியின் ஓட்டுநர் அவுங் ஜியி என்று அறியப்படும் அவுங் காவ் மயோ கைது செய்யப்பட்டார். ஆனால் அவர் குற்றம் செய்ததற்கான சான்றுகள் இல்லை என்று பின்னர் விடுவிக்கப்பட்டார்.

பிறகு ஜூலை 3ம் தேதி அவர் மீண்டும் கைது செய்யப்பட்டு, இப்போது விசாரிக்கப்பட்டு வருகிறார். இவர்தான் குற்றவாளியா என்ற சந்தேகம் பலரிடம் நிலவுகிறது. தங்களின் வேலை முடிந்துவிட்டது என அதிகாரிகள் கூறிகொள்வதற்கு இவரை சிக்க வைத்து கைது செய்திருப்பதாக பலரும் நம்புகின்றனர்.

பலிகடா?

வீட்டில் வைத்து சிசிடிவி காணொளியை காட்டியபோது அவுங் ஜியி-யை விக்டோரியா குற்றவாளியாக அடையாளம் காட்டியுள்ளார்.

அவரை சுட்டிக்காட்டி, அவர்தான் தனது பெண் உறுப்பை கிள்ளியதாக விக்டோரியா தெரிவித்துள்ளார்.

இந்த சிசிடிவி காணொளி தெளிவாக இல்லை. அவுங் ஜியி-யின் பின்புறமே அதில் தெரிகிறது. அதில் அவர் தொப்பி ஒன்றை அணிந்துள்ளார். அதனையே முக்கிய சான்றாக வைத்துகொண்டு அவரை கைது செய்து குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளனர்.

ஆனால், அதன் பின்னர் அவுங் ஜியி-யின் புகைப்படங்களை காட்டியபோது, விக்டோரியா அவர்தான் தன்னை பாலியல் வன்கொடுமை செய்தார் என்று சுட்டிக்காட்டவில்லை.

எனவே, விக்டோரியா தன் மீது பாலியல் தாக்குதல் தொடுத்ததாக இரண்டு முறை அடையாளம் காட்டியுள்ள சட்டபூர்வ வயதை அடையாத இரு சிறார்கள் செய்திருக்கலாம் என மக்கள் எண்ணுகின்றனர்.

விக்டோரியாவுக்கு நீதி வழங்க வேண்டுமென கோரி மியான்மர் முழுவதும் பேரணிகள் நடத்தப்பட்டன.

பட மூலாதாரம், AFP/Getty Images

படக்குறிப்பு, விக்டோரியாவுக்கு நீதி வழங்க வேண்டுமென கோரி மியான்மர் முழுவதும் பேரணிகள் நடத்தப்பட்டன.

சில வாரங்களுக்கு முன்னால், அவுங் ஜியி மற்றும் இந்த இருவரின் புகைப்படங்களை விக்டோரியாவின் தந்தை அவரிடம் காட்டினார். சட்டபூர்வ வயதுக்கு வராத இருவரையும் தெளிவாக அடையாளம் கண்டு கொண்ட விக்டோரியா அவர்களை பார்த்தவுடனே மிகவும் கோபம்கொண்டார். ஓட்டுநர் அவுங் ஜியி-யை அப்போது பாலியல் தாக்குதல் நடத்திய நபராக விக்டோரியா அடையாளம் காட்டவில்லை.

இதை காணாளி எடுத்துக்கொண்ட தந்தை அக்காணொளியையே சான்றாக நீதிமன்றத்தில் வழங்கியுள்ளார்.

புகைப்படங்கள்

மேலும், அவுங் ஜியி மற்றும் சட்டபூர்வ வயதுக்கு வராத இருவரும் இருக்கும் சில புகைப்படங்களை நீதிமன்றத்தில் வைத்து காட்டியபோது சட்டபூர்வ வயதுக்கு வராத இருவரின் புகைப்படங்களையும் குற்றவாளிகளாக விக்டோரியா சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த வேளையில் தொழில்முறை வழங்கறிஞர்கள் இந்த குழந்தையிடம் விசாரித்தனர். இந்த இரண்டு பேரையும் சுட்டிக்காட்டினாரே ஒழிய அவுங் ஜியி-யை விக்டோரியா சுட்டிக்காட்டவில்லை.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

"அந்த புகைப்படங்களை காட்டியபோது இளைய "கோ கோ" என்னை நெஞ்சில் அடித்தார்" என்றும், "மூத்த "கோ கோ" எனது பெண் உறுப்பில் கிள்ளினார்" என்றும் நீதிமன்றத்தில் விக்டோரியா தெரிவித்தார். (மியான்மரில் இளம் ஆணை குறிப்பிட "கோ கோ" என்று சொல்லப்படுகிறது).

"ஆறு புகைப்படங்கள் இந்த குழந்தையின் முன்னால் வைக்கப்பட்டது. அவுங் ஜியி-யின் புகைப்படத்தை காட்டியபோது அவரை தனக்கு தெரியாது என்று குழந்தை கூறியது. இந்த குழந்தையின் ஆசிரியரான ஹினின் நியு, இந்த சம்பவத்திற்கு பிறகு தன்னை கழுவி விட்டதாக இந்த குழந்தை கூறியது" என்று அவுங் ஜியி-யின் வழங்கறிஞரான கின் மெக் ஜாவ் கூறினார்.

மழலையர் பள்ளியில் குற்றம் நடைபெறவில்லை?

முன்னதாக பள்ளியில் வைத்து எந்தவொரு பாலியல் தாக்குதலும் நடத்தப்படவில்லை என்று நிர்வாகம் மறுத்துவிட்டது. பிற ஆசிரியர்களும் அதனையே தெரிவித்தனர்.

வழக்கு விசாரணையாளர்கள் தன்னை ஒன்பது முறை விசாரித்துள்ளதாக பிபிசியிடம் தெரிவித்த இந்த குழந்தையின் ஆசிரியர் ஹினின் நியு, இந்த குற்றத்தை அவுங் ஜியி செய்திருக்கமாட்டார் என்று உறுதியாக நீதிமன்றத்தில் தெரிவித்ததாக கூறினார்.

"அவர் இந்த குற்றத்தை செய்திருக்க முடியாது. எல்லா ஆசிரியர்களும் எப்போதும் குழந்தைகளோடு உள்ளனர். எனவே, அவர் இதனை செய்திருக்கவே முடியாது" என்று அவர் தெரிவித்தார்.

அந்த நாளில், தனது கண்பார்வையில் இருந்து விக்டோரியா வேறு எங்கும் செல்லவில்லை என்று இன்னொரு ஆசிரியர் நிலார் அயி கூறினார்.

குற்றம் செய்யாததற்கான ஆதாரம்?

வேண்டுமென்றே புனையப்பட்டு அவுங் ஜியி சிக்க வைக்கப்பட்டுள்ளார் என்றே பொது மக்கள் பலரும் நம்புகின்றனர்.

ஹினின் நியு
படக்குறிப்பு, இந்த சம்பவம் மழலையர் பள்ளியில் வைத்து நடந்தது என்பதை ஹினின் நியு-வும், பிற ஆசிரியர்களும் மறுக்கின்றனர்.

அவருக்கு எதிரான சான்றாக வைக்கப்பட்டுள்ள சிசிடிவி காணொளியையே, அவர் சிக்கலில் மாட்டிவிட்டுள்ளதற்கு ஆதாரமாக இந்த மக்கள் சொல்கின்றனர்.

பிபிசியிடம் கிடைத்த இந்த காணொளியில், இந்த பாலியல் தாக்குதல் நடந்ததாக கூறப்படும் நாளில் மழலையர் பள்ளியின் வரவேற்பு பகுதியில் அவுங் ஜியி காத்திருப்பது தெரிகிறது.

விக்டோரியாவை கண்டுபிடித்து, பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த போதிய நேரம் அவருக்கு இருக்கவில்லை என்பதை இந்த காணொளி காட்டுவதாக மக்கள் கூறுகின்றனர்.

ஜூலை 6ம் தேதி வெள்ளை ஆடை அணிந்த 6,000 பேர், "தங்களுக்கு நீதி வேண்டும்" என்று கோரி இந்த வழக்கை விசாரிக்கும் யாங்கூனிலுள்ள மத்திய புலன்விசாரணை துறையின் தலைமையகத்தை நோக்கி பேரணியாக சென்றர்.

பெற்றோர் சொல்வதென்ன?

காவல்துறையை நேரடியாக விமர்சிக்காமல் இருப்பதில் எச்சரிக்கையாக பேசும் விக்டோரியாவின் தந்தை, பிற சிசிடிவி காணொளிகள் தொலைந்துவிட்டன என்றும், விசாரணை சரியாக நடத்தப்படவில்லை என்றும் பிபிசியிடம் கூறியுள்ளார்.

மிகவும் மேசமான கடந்த இரண்டு மாதங்களும் இனி தங்கள் வாழ்வில் முடிவுக்கு வர வேண்டுமென விரும்புவதாகவும் அவர்கள் கூறினர்.

"எனக்கு உண்மை தெரிந்தாக வேண்டும்" என்று தெரிவித்த தந்தை, ஏதுமறியாத குழந்தைக்கு எதிராக நடத்தப்பட்டுள்ள குற்றம் என்பதால், எவ்வளவு நாட்கள் ஆனாலும் இந்த விஷயத்தை விட்டுவிட போவதில்லை" என்றார்.

விக்டோரியாவுக்கு நீதி கோரி காவல்முறையின் தலைமையகம் நோக்கி போராட்டக்காரர்கள் பேரணியாக சென்றனர்.

பட மூலாதாரம், AFP/Getty Images

படக்குறிப்பு, விக்டோரியாவுக்கு நீதி கோரி காவல்முறையின் தலைமையகம் நோக்கி போராட்டக்காரர்கள் பேரணியாக சென்றனர்.

"எனது குழந்தை இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவள் உயிரோடு இருக்கிறாள், அவள் இது பற்றி பேசுகிறாள். எனது மகளின் சொற்களை தீவிரமாக எடுத்துகொண்டு செயல்படுவார்கள் என்று நம்புகிறேன்" என்று அவர் மேலும் கூறினார்.

விக்டோரியாவுக்கு நீதி

விக்டோரியாவுக்கு ஆதரவு அளிப்பதற்கான பரப்புரை சமூக ஊடகங்களில் தொடங்கியது. இந்த பாலியல் வல்லுறவு பற்றி கேள்விப்பட்ட சில ஃபேஸ்புக் பயனாளர்கள், இதில் நீதி கிடைக்க வேண்டுமென பதிவிட்டனர். இதனால், இந்த வழக்கு பலரும் உற்றுநோக்கி வரும் ஒன்றாக மாறியுள்ளது.

இரண்டு வாரங்களுக்கு பின்னர், சுகாதார மற்றும் விளையாட்டு துறையின் மூத்த அதிகாரியான வின் கோ கோ தியன் என்பவர், "விக்டோரியவுக்கு நீதி" என்ற பரப்புரையை தொடங்கி, இந்த வழக்கில் காணப்படும் முரண்பாடுகளை சுட்டிக்காட்டினார்.

கைது செய்யப்பட்ட அவர், அவமதிப்பு குற்றச்சாட்டை எதிர்கொண்டு வருகிறார். ஆனால், அவரது சொற்கள் எதிரொலித்தன. பிரபலங்கள் இந்த இயக்கத்திற்கு ஆதரவு அளித்தனர். ஆயிரக்கணக்கான ஃபேஸ்புக் பயனாளர்கள் இந்த பரப்புரைக்கு ஆதரவு அளித்தனர். ஆதரவு அளிக்கும் ஸ்டிக்கர்கள் கார்களில் ஓட்டப்பட்டன.

பிபிசி மியான்மர் பிரிவும் இந்த குழந்தைக்கு ஆதரவான செய்திகள் பலவற்றை பெற்றது.

பாலியல் துஷ்பிரயோகம்

மியான்மர் நாட்டின் பல்வேறு இடங்களிலும் சிறு சிறு போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. இந்தப் போராட்டக்காரர்கள் விக்டோரியாவுக்கு மட்டும் நீதி வேண்டும் என்று கோரவில்லை.

குழந்தைகள் மீது அதிகரித்துள்ள பாலியல் துஷ்பிரயோகங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட பாலியல் வல்லுறவுகளின் எண்ணிக்கை 50 சதவீதம் அதிகரித்துள்ளதாக அரசு புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. 2018ம் ஆண்டு மட்டும் 1,528 பாலியல் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

இவற்றில் பதிக்கப்பட்ட மூன்றில் இரண்டு பங்கு குழந்தைகள் என்கிற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

இவ்வாறாக பாலியல் தாக்குதல் பற்றி தகவல் வெளியிடும் துணிச்சல் அதிகரித்து வருவதாகவே சில தொண்டு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், குடும்ப வன்முறை தனிப்பட்ட விஷயமாக பார்க்கப்படும் மியான்மர் நாட்டில், விக்டோரியாவுக்கு நடந்திருப்பது கவலையளிப்பதாக பலரும் கூறுகின்றனர்.

(இந்த கட்டுரை பிபிசி செய்தியாளர் நிக் பிளேக்கின் முந்தைய செய்திகளில் இருந்தும், பிபிசி நியூஸ் பர்மிய மொழி பிரிவில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.)

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :