கடல் நீருக்குள் ராணுவ டாங்கிகள்: ஜோர்டானின் மெய்சிலிர்க்க வைக்கும் அருங்காட்சியகம்

பட மூலாதாரம், AFP
ஆக்குபா கடற்கரையில் அமைந்துள்ள முதலாவது நீருக்குள் இருக்கும் ராணுவ அருங்காட்சியகத்தை ஜோர்டான் திறந்துள்ளது.
புதன்கிழமை நடைபெற்ற இந்த திறப்பு விழாவில், டாங்கிகள், படை துருப்புகளை ஏற்றி செல்லும் வாகனங்கள் மற்றும் ஒரு ஹெலிகாப்டர் உள்பட நீரில் மூழ்கிய பல ராணுவ வாகனங்களை ஜோர்டான் அரசு இந்த அருங்காட்சியகத்தில் இடம்பெற செய்துள்ளது.
செங்கடலில் உள்ள பவள பாறைகளில் போர் புரிவது போன்ற வடிவமைப்பில் இந்த வாகனங்கள் உள்ளன.
இங்கு சுற்றுலா வருவோருக்கு புதுவித அருங்காட்சியக அனுபவத்தை இந்த காட்சிப்படுத்தல் வழங்குகிறது என்று உள்ளூர் அதிகாரிகள் கூறினர்.
விளையாட்டு, சுற்றுச்சூழல் மற்றும் கண்காட்சி பொருட்களை இதில் சேர்க்க போவதாக ஆக்குபா சிறப்பு பொருளாதார மண்டல நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், Reuters

பட மூலாதாரம், Reuters

பட மூலாதாரம், Reuters

பட மூலாதாரம், Reuters
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்








