வர்த்தக போர்: ஜி20 மாநாட்டுக்கு முன்பு அமெரிக்கா, சீனா பேச்சுவார்த்தை - டிரம்ப்

பட மூலாதாரம், Reuters
அடுத்த வாரம் நடக்கவுள்ள ஜி20 மாநாட்டில் அமெரிக்காவும், சீனாவும் தங்களின் வர்த்தக பேச்சை தொடரும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் தொலைபேசி வாயிலாக நல்ல முறையில் பேச்சுவார்த்தை நடந்தது. எங்களுடைய அணிகள் தொடர்ந்து எங்களுடைய சந்திப்பிற்கு முன்பு பேசிக்கொள்ளும் என ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தார் டிரம்ப்.
கடந்த சில ஆண்டுகளாக இரண்டு நாடுகளுக்கும் இடையில் வர்த்தக போர் நடந்துகொண்டிருக்கிறது.
மே மாதம் அமெரிக்காவில் வரி உயர்விற்கு பிறகு இரண்டு நாடுகளின் பேச்சு தடம் மாறியது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
இந்நிலையில் ஷீன்ஹுவா என்ற சீன நாட்டின் பத்திரிக்கை அறிக்கைபடி, தான் ஜி20 மாநாட்டில் டிரம்பை சந்திப்பதற்கு தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.
நீண்ட நாள் பிறகு ஜப்பானில் சீன அதிபரை சந்திக்க போவதாக டிரம்ப் கூறியிருந்தார்.
சீனா தன்னுடைய வாக்குறுதியிலிருந்து தவறியது என குற்றம் சாட்டி 200 பில்லியன் டாலர் மதிப்பிலான சீன பொருட்கள் மீதான வரியை டிரம்ப் உயர்த்திய பிறகு, இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக உறவு நின்றது.
சீனாவும் அமெரிக்காவும் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தில் இணையப்போவதாக நினைத்த அனைவருக்கும் இது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சீனாவும் தன் பங்குக்கு தங்களுடைய வரியை உயர்த்தியது.
இது குறித்து ஒரு ஒப்பந்தத்திற்கு வரவில்லை என்றால் மேலும் 300 பில்லியன் டாலர் மதிப்பிலான வரியை உயர்வேன் என்று டிரம்ப் நிர்வாகம் சீனாவை அச்சுறுத்தியது.
இவ்வாறு பல கோடி மதிப்பிலான பொருட்களின் வரியை உயர்த்தியதால் உலக பொருளாதாரம் மிகப்பெரிய சிக்கலை சந்தித்தது மற்றும் உலக நிதி சந்தை பெரிதும் அடிபட்டது.
நிறைய வர்த்தக நிறுவனங்கள் டிரம்பை இந்த போரை முடிக்க கோரினர்.
சில்லறை வியாபாரிகளிலிருந்து மின்சார பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் வரை அமெரிக்க வர்த்தக நிறுவனத்திடம் வரி உயர்வால் வர்த்தகம் பாதிக்கப்படுகிறது என கோரிக்கை வைத்தனர்.
அமெரிக்க அதிபரின் தற்போதைய கருத்தில்கூட இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தின் மீது அவருக்கு நம்பிக்கை இருப்பதாக தெரிந்தது.

பட மூலாதாரம், Getty Images
"எங்களுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறது என நினைக்கிறேன். சீனாவும் இந்த ஒப்பந்தத்திற்கு தயாராக இருக்கிறது. இந்த வரியை அவர்களும் விரும்பவில்லை மற்றும் நிறைய நிறுவனங்கள் இந்த வரியை தவிர்ப்பதற்காக சீனாவிற்கு செல்கின்றனர்" என டிரம்ப் கூறியிருப்பதாக வெள்ளை மாளிகை நிருபர்கள் கூறியுள்ளனர்.
இந்த பேச்சு வார்த்தை தொடங்கினாலும் , இரண்டு பக்கங்களுக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாடு இன்னும் முடிவடையவில்லை.
வர்த்தக ஒப்பந்தம் எவ்வாறு ஏற்படுத்துவது என்றும் இந்த வரியை திரும்ப பெறுவது குறித்தும் வர்த்தக உடன்பாட்டில் குறிப்பிடப்படும் என எதிர்பார்க்க படுகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












