கைதான கனடா நாட்டவரை உளவாளிகள் என குற்றஞ்சாட்டும் சீனா

பட மூலாதாரம், AFP
சீனா கைது செய்துள்ள கனடா நாட்டை சேர்ந்த இருவரும் உளவு பார்த்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.
சீன தொலைத்தொடர்பு நிறுவனமான குவாவெயின் முக்கிய செயலதிகாரி அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படும் சாத்தியக்கூறு அதிகரித்துள்ளதால், இரு நாடுகளுக்கு இடையில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் இந்த நடவடிக்கை வந்துள்ளது.
முன்னாள் ராஜ்ஜீய அதிகாரி மைக்கேல் கோவ்ரிக், வணிகர் மைக்கேல் ஸ்பாவர் ஆகிய இருவரும் கடந்த டிசம்பர் மாதம் சீனாவால் கைது செய்யப்பட்டனர்.
ஹூவாவெய் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் முக்கிய செயலதிகாரி மெங் வான்சௌ, மோசடி செய்ததாகவும், இரான் தடைகளுக்கு எதிராக செயல்பட்டார் என்ற சந்தேகத்திலும் கைது செய்யப்பட்ட பின்னர், இந்த கனட நாட்டவர் இருவரும் சீனாவில் கைது செய்யப்பட்டனர்.

பட மூலாதாரம், EPA
அமெரிக்கா கேட்டுக்கொண்டதற்கு இணங்க தன்னை கைது செய்ததற்கு எதிராக கனடா மீது மெங் வான்சௌ வழக்கு தொடுத்துள்ளார்.
மெங் வான்சௌவை கைது செய்திருப்பதை சீனா கண்டித்துள்ளது. இந்த ராஜ்ஜீய சர்ச்சை, கனட-சீன இருதரப்பு உறவை பெரிதும் பாதித்துள்ளது.
கனடாவின் வான்கூவர் நகரில் சொந்த வீட்டை கொண்டிருக்கும் மெங் வான்சௌ, இப்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பட மூலாதாரம், Reuters
மெங் வான்ச்சௌ கைதுக்கு பதிலடியாக கனட நாட்டவர் இருவரையும் சீனா கைது செய்துள்ளதாக பார்க்கப்படுகிறது.
மெங் வான்சௌவை நாடுகடத்தும் வழிமுறையை கனடா அதிகாரபூர்வமாக கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியுள்ளது. இந்த சட்ட நடவடிக்கை மிகவும் நீளமானது என்பதால், இந்த நடவடிக்கை தொடக்க நிலையில்தான் உள்ளது.
பிற செய்திகள்:
- ஜெய்ஷ்-இ-முகம்மது நிறுவனர் மசூத் அஸ்கர் இறந்துவிட்டாரா?
- தாக்குதலில் இறந்தவர்களை கணக்கெடுப்பதில்லை - இந்திய விமானப்படை தளபதி பேட்டி
- மன்னார் சம்பவம்: மாவட்ட சர்வமத பேரவையிலிருந்து வெளியேறியது இந்து குருமார் சங்கம்
- அமித் ஷா சொல்வது உண்மையா? ராணுவம் சொல்வது உண்மையா?
- திமுக கூட்டணியில் விசிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு தலா 2 தொகுதிகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












