You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மீண்டும் முடங்குகிறதா அமெரிக்க அரசு?: நெருங்கி வரும் காலக்கெடு
எல்லை பாதுகாப்பு ஒப்பந்தம் பற்றி அமெரிக்க நாடாளுமன்ற பேச்சுவார்த்தைகள் முடங்கியுள்ளதால், அமெரிக்காவில் மீண்டும் அரசுத்துறைகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மத்திய நிதி ஆதரவு ஒப்பந்தம் காலாவதியாகின்ற, வரும் வெள்ளிக்கிழமைக்குள் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு நேரம் வழங்கும் வகையில், திங்கள்கிழமைக்குள் ஒப்பந்தம் ஒன்று எட்டப்படும் என்று பேச்சுவார்த்தையாளர்கள் நம்பிக்கொண்டிருந்தார்கள்.
ஆவணமில்லாத குடியேறிகள் கைது, மெக்ஸிகோ எல்லையில் அதிபர் டிரம்ப் வாக்குறுதி அளித்த எல்லைச்சுவருக்கு நிதி அளிக்கின்ற விவகாரம் ஆகியவற்றில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரிந்துள்ளனர்.
சமீபத்தில் 35 நாட்கள் அமெரிக்க அரசு பணிகள் முடங்கியது அந்நாட்டின் வரலாற்றில் அதிக நாட்கள் அரசு இயந்திரம் முடங்கிய பதிவை பெற்றுள்ளது.
பல லட்சக்கணக்கானோருக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், மருத்துவமனை பராமரிப்பு, விமான போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் சட்ட அமலாக்கத்துறை போன்ற முக்கிய சேவைகளிலுள்ளவர்கள் மட்டும் ஊதியமின்றி வேலை செய்தனர்.
அமெரிக்க பொருளாதாரம் 11 பில்லியன் டாலராக மதிப்பிடப்படுகிறது.
இதுவரை பேச்சுவார்த்தைகளும் திட்டமிடாத நிலையில், இந்த பேச்சுவார்த்தை மேற்கொள்வோர் எவ்வாறு ஒப்பந்தம் ஒன்றை எட்ட முயற்சிப்பார்கள் என்பது தெளிவாக இல்லை.
நாடாளுமன்றத்தால் ஒப்புக்கொள்ளக்கூடிய எல்லைப் பாதுகாப்பு ஒப்பந்தத்தை உருவாக்க குடியரசு கட்சி, ஜனநாயக கட்சி மற்றும் நாடாளுமன்றத்தை சேர்ந்த 17 பேச்சுவார்த்தையாளர்கள் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பிற செய்திகள்:
- நரேந்திர மோதி, சந்திரபாபு நாயுடு - தனிநபர் விமர்சனத்தால் தீவிரமடைந்த மோதல்
- பிரியங்கா காந்தி தனது முதல் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்
- இந்தியாவின் #MeToo இயக்கத்தில் எதிரொலிக்காத பெண் குரல்கள்
- மக்களவை தேர்தல் 2019: பாஜக - அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கியதா?
- '4 குழந்தைகள் பெற்றால் வருமானவரி கட்ட வேண்டாம்'
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்