இந்தோனீசிய க்ராக்கடாவ் எரிமலை வெடிப்பின் பிரும்மாண்டத்தை காட்டும் செயற்கைகோள் படம்

சுனாமியும் எரிமலையும்

பட மூலாதாரம், PLANET LABS, INC

இந்தோனீசியாவை புரட்டிப் போட்ட டிசம்பர்-22 தேதி சுனாமிக்கு காரணாமான அனாக் க்ராகட்டாவ் என்ற கடலடி எரிமலை வெடிப்பின் பிரும்மாண்டத்தைக் காட்டும் சிறந்த செயற்கைகோள் ஆப்டிக்கல் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

சுண்டா ஜலசந்தியில் நிலவிய மோசமான வானிலையால், ஸ்கைசாட், டோவ் செயற்கைக் கோள்களால் புகை, மேகமூட்டத்தின் நடுவே பூமியை காண்பது சிரமமாக இருந்தது.

புவியை நம் கண்கள் காணும் அதே வித ஒளியில் காண்பவை இந்த செயற்கைக் கோள்கள்.

இதனிடையே மேக மூட்டத்தின் நடுவே இருந்த சிறு இடைவெளி மூலம் அந்த செயற்கைகோள் புகைப்படங்கள் எடுத்திருக்கிறது.

அவற்றை இங்கு பகிர்கிறோம்:

சுனாமியும் எரிமலையும்

பட மூலாதாரம், PLANET LABS, INC.

சான் ஃப்ரான்சிஸ்கோவை தலைமையிடமாக கொண்ட ப்ளானட் நிறுவனம் இந்த செயற்கோள்களை இயக்குகிறது.

டோவ், ஸ்கைசேட் எனும் அந்த நிறுவனத்தின் செயற்கைகோள்கள் பூமியை நல்ல தரத்தில் புகைப்படம் எடுக்கின்றன.

சுனாமியும் எரிமலையும்

பட மூலாதாரம், PLANET LABS, INC.

இந்த எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து ஜாவா மற்றும் சுமத்ரா கடற்பகுதியில் ஏற்பட்ட சுனாமி காரணமாக 430 பேர் இறந்தனர்.

ஆயிரக்கணக்கானோர் வேறு இடங்களில் குடிபுகுந்தனர்.

காணொளிக் குறிப்பு, சுனாமி: 'கடல்தான் எங்கள் தாய்; கடற்கரை எங்கள் தாய்மடி'

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: