கடந்த வார உலகத்தை விளக்கும் சுவாரசிய புகைப்படங்கள்

கடந்த வாரம் (நவம்பர் 17-23) உலகம் முழுவதும் நடந்த சுவாரசியமான நிகழ்வுகளை விளக்கும் புகைப்படங்களின் தொகுப்பு.

தாய்லாந்தின் அந்தரத்தில் தொங்கும் அனுபவத்தை தரும் முதலாவது கட்டடத்தில் குதூகலத்தில் இருக்கும் சிறுவன். 78 மாடிகளை கொண்ட பாங்காங்கின் கிங் பவர் மஹநக்ஹோன் என்ற கட்டடத்தின் உச்சியில், 314 மீட்டர் உயரத்தில் இது அமைக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், SOE ZEYA TUN/REUTERS

படக்குறிப்பு, தாய்லாந்தின் அந்தரத்தில் தொங்கும் அனுபவத்தை தரும் முதலாவது கட்டடத்தில் குதூகலத்தில் இருக்கும் சிறுவன். 78 மாடிகளை கொண்ட பாங்காங்கின் கிங் பவர் மஹநக்ஹோன் என்ற கட்டடத்தின் உச்சியில், 314 மீட்டர் உயரத்தில் இது அமைக்கப்பட்டுள்ளது.
பிரபல கலை வடிவமைப்பாளர் நிக் கேவ் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடத்தி வரும் கண்காட்சியில் தான் உருவாக்கிய பொருட்களுடன் இருப்பதை விளக்குகிறது இந்த புகைப்படம்.

பட மூலாதாரம், MARK METCALFE/GETTY IMAGES

படக்குறிப்பு, பிரபல கலை வடிவமைப்பாளர் நிக் கேவ் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடத்தி வரும் கண்காட்சியில் தான் உருவாக்கிய பொருட்களுடன் இருப்பதை விளக்குகிறது இந்த புகைப்படம்.
மிலாது நபி தினத்தை முன்னிட்டு பாகிஸ்தானின் கராச்சி நகரில் நடந்த பேரணியில் இசைத்தவாறு செல்கிறார் இந்த சிறுமி.

பட மூலாதாரம், RIZWAN TABASSUM/AFP

படக்குறிப்பு, மிலாது நபி தினத்தை முன்னிட்டு பாகிஸ்தானின் கராச்சி நகரில் நடந்த பேரணியில் இசைத்தவாறு செல்கிறார் இந்த சிறுமி.
ரஷ்யாவின் மாஸ்கோ நகரிலுள்ள உயிரியல் பூங்காவில் வசித்து வரும் கிரா என்னும் 23 வயது கொரில்லா சமீபத்தில் பிறந்த தனது குட்டியுடன் பூங்காவை சுற்றி வருகிறது.

பட மூலாதாரம், SHAMIL ZHUMATOV/REUTERS

படக்குறிப்பு, ரஷ்யாவின் மாஸ்கோ நகரிலுள்ள உயிரியல் பூங்காவில் வசித்து வரும் கிரா என்னும் 23 வயது கொரில்லா சமீபத்தில் பிறந்த தனது குட்டியுடன் பூங்காவை சுற்றி வருகிறது.
1837ஆம் ஆண்டு பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் போர்ச்சுகீசிய குடியேறிகளால் தொடங்கப்பட்ட ராயல் போர்ச்சுகீசு கேபினட் ஆஃப் ரீடிங் என்ற நூலகத்தில் ஊழியர் ஒருவர் புத்தகங்களை அடுக்கி வைக்கிறார்.

பட மூலாதாரம், CARL DE SOUZA/AFP

படக்குறிப்பு, 1837ஆம் ஆண்டு பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் போர்ச்சுகீசிய குடியேறிகளால் தொடங்கப்பட்ட ராயல் போர்ச்சுகீசு கேபினட் ஆஃப் ரீடிங் என்ற நூலகத்தில் ஊழியர் ஒருவர் புத்தகங்களை அடுக்கி வைக்கிறார்.
மத்திய அமெரிக்க நாடுகளிலிருந்து மெக்ஸிகோ வழியாக அமெரிக்காவிற்கு செல்ல பல்லாயிரக்கணக்கானோர் முயற்சித்து வருகின்றனர். ஹோண்டுராஸை சேர்ந்த ஆறு வயது சிறுவன் மெக்ஸிகோவின் தடுப்பு காவல் படையினருக்கு முன்னதாக படுத்திருக்கிறார்.

பட மூலாதாரம், HANNAH MCKAY/REUTERS

படக்குறிப்பு, மத்திய அமெரிக்க நாடுகளிலிருந்து மெக்ஸிகோ வழியாக அமெரிக்காவிற்கு செல்ல பல்லாயிரக்கணக்கானோர் முயற்சித்து வருகின்றனர். ஹோண்டுராஸை சேர்ந்த ஆறு வயது சிறுவன் மெக்ஸிகோவின் தடுப்பு காவல் படையினருக்கு முன்னதாக படுத்திருக்கிறார்.
லாட்வியா நாட்டில் நடந்து வரும் ஒளி திருவிழாவில் வைக்கப்பட்டுள்ள கலைடாஸ்கோப்பில் மக்கள் குழுமியிருக்கும் காட்சி.

பட மூலாதாரம், TOMS KALNINS/EPA

படக்குறிப்பு, லாட்வியா நாட்டில் நடந்து வரும் ஒளி திருவிழாவில் வைக்கப்பட்டுள்ள கலைடாஸ்கோப்பில் மக்கள் குழுமியிருக்கும் காட்சி.
இந்திய தலைநகர் புதுடெல்லியிலுள்ள யமுனா நதியில் படகில் ஒருவர் வருவதையும், அங்கிருந்த பறவைகள் பறப்பதையும் காணலாம்.

பட மூலாதாரம், ANUSHREE FADNAVIS/REUTERS

படக்குறிப்பு, இந்திய தலைநகர் புதுடெல்லியிலுள்ள யமுனா நதியில் படகில் ஒருவர் வருவதையும், அங்கிருந்த பறவைகள் பறப்பதையும் காணலாம்.
அமெரிக்காவில் நன்றி தெரிவிக்கும் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வான்கோழிகளை வைத்து நடைபெறும் பாரம்பரிய நிகழ்வில் பங்கேற்ற காட்சி.

பட மூலாதாரம், ERIK S LESSER/EPA

படக்குறிப்பு, அமெரிக்காவில் நன்றி தெரிவிக்கும் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வான்கோழிகளை வைத்து நடைபெறும் பாரம்பரிய நிகழ்வில் பங்கேற்ற காட்சி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :