மம்மி: நான்காயிரம் ஆண்டு பழமையான பதப்படுத்தப்பட்ட பூனைகள்

நான்காயிரம் ஆண்டு பழமையான பதப்படுத்தப்பட்ட பூனைகளின் உடல்களை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதுபோல பழங்கால எகிப்தியர்கள் புனிதமாக கருதிய வண்டுகளையும் கண்டுபிடித்துள்ளனர்.

எகிப்தில் தெற்கு கெய்ரோ பகுதியில் உள்ள 4000 ஆம் ஆண்டு பழங்கால கல்லறையில் இவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இறப்பிற்கு பின் சிறப்பான இடத்தை பூனை மற்றும் சில விலங்குகள் அடைவதாக எகிப்தியர்கள் நம்பினர். அதன் பொருட்டு அவைகளுக்கு சிறப்பிடத்தை அளித்தனர்.

ஒரு கல்லறையில் வெண்கலத்தால் செய்யப்பட்ட பூனை கடவுளின் சிலை இருந்தது.

ஒரு வகை வண்டிற்கு சிறப்பு மரியாதை அளித்தனர். அதனை சூரிய கடவுள் என நம்பினர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :