You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பல்பொருள் அங்காடியில் குரங்கின் 'மம்மி'
அமெரிக்காவின் மினேசோட்டா மாகாணத்தில் பல்பொருள் அங்காடியாக செயல்பட்ட ஒரு கட்டடத்தை புனரமைக்கும்போது "பதப்படுத்தப்பட்ட" மம்மியைப் போல காணப்பட்ட ஒரு குரங்கின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த உடல் மினியாபோலிஸில் உள்ள பழைய டெய்டன் டிபார்ட்மென்ட் ஸ்டோர் கட்டடத்தின் மொட்டை மாடியில் கிடைத்தது.
சிலந்தி குரங்கின் (spider monkey) தோற்றம் தொடர்பான தகவல்களை கண்டறிவதற்காக உள்ளூர் அருங்காட்சியகங்களுடன் இணைந்து செயல்படுவதாக கட்டட புனரமைப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் கூறுகிறார்.
தனது தந்தை 1960களில் இந்த மம்மியை திருடியிருக்கலாம் என்று மினியாபோலிஸ் நகருக்கு அருகிலுள்ள நகரின் மேயர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தை பழைய மின்னசோட்டா பேஸ்புக் பக்கத்தில் கட்டுமான பணியாளர் ஒருவர் முதன்முதலில் பதிவிட்டார்.
குரங்கு காணமல் போனதற்கு தங்கள் குடும்ப குடும்பத்தலைவர்தான் காரணம் என்று மேயரும் அவரது தாயும் குற்றம் சாட்டுகின்றனர். அலுவலக இடத்தை விரிவாக்கும் நோக்கில் கட்டடம் புதுப்பிக்கும் வேலைகள் தொடங்கப்பட்டன.
"இறந்துபோன விலங்கினம்" ஒரு மொட்டை மாடியில் தன்னை வெளிப்படுத்தியது" என்ற வாசகத்துடன் இந்த புகைப்படத்தை அவர் பதிவிட்டிருந்தார்.
இந்த குரங்கு மம்மி 116 ஆண்டு பழமையான கட்டடத்தின் எட்டாவது தளத்தில் இருந்த ஒரு செல்லப் பிராணிகளின் கடையில் இருந்து வந்திருக்கலாம் என்று இந்த புகைப்படத்தை பார்த்த சில விமர்சகர்கள் சமூக ஊடகத்தின் பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருந்தனர்.
காலமான தனது தந்தையே இந்த மம்மி காணாமல் போனதற்கு காரணம் என்று மின்னேசோட்டா மாகணத்தின் ராபின்ஸ்டேல் நகர மேயர் ரீகன் மர்பி கருதுகிறார். 1960களில் தனது தந்தை லாரி மர்பியும் அவரது நண்பரும், செல்லப் பிராணிகள் விற்பனை செய்யும் கடையில் இருந்து இந்த மனிதக் குரங்கை திருடியதாக கூறுகிறார்.
திருடிய இருவரும் இறந்துவிட்டாலும், ரீகன் மர்பியின் தாய் மோனிகா, அது அயர்லாந்து நாட்டை சேர்ந்தது என்று கூறுகிறார். தனது இளமை காலத்தில் அந்த குரங்கு, மங்கி ஷைன்ஸ் (monkey shines) என்ற நாடகத்தினால் மிகவும் பிரபலமாக இருந்தது என்று WCCO தொலைகாட்சியில் பேசுகையில் அவர் தெரிவித்தார்.
"கணவரின் நண்பரின் அம்மா இந்த குரங்கை வீட்டில் வைத்துக் கொள்ள முடியாது என்று உறுதியாக கூறிவிட்டார்".
எனவே இளைஞரான தனது கணவரும், அவரது நண்பரும் செல்லப் பிராணிகள் இருந்த கடைக்கு மீண்டும் கொண்டு வந்து விட்டுவிட்டார்கள் என்று மோனிகா கூறுகிறார்.
இந்த புனரமைப்பு பணியில் வேறு சில பொருட்களும் கிடைத்தன. அதில் திருடப்பட்ட பர்ஸ் ஒன்றும் இருந்தது. அது அண்மையில் அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்