இஸ்ரேல் துப்பாக்கி சூட்டில் 30 பாலத்தீனர்கள் பலி

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம்.

இஸ்ரேல் துப்பாக்கி சூட்டில் 30 பாலத்தீனர்கள் பலி

காசா - இஸ்ரேல் எல்லையில் மீண்டும் வெடித்துள்ள மோதலில் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்திருப்பதாக பாலத்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த இரு வாரங்களுக்கு முன்பு தொடங்கிய 'ஃபிளேக் ஃபிரைடே' (கொடி வெள்ளி) போராட்டங்களில் இதுவரை 30 பாலத்தீனர்கள் இஸ்ரேலின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளனர்.

விசாரணை வளையத்தில் டிரம்பின் வழக்கறிஞர்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் வழக்கறிஞர் மைக்கேல் கோஹென் குற்றவியல் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக அந்நாட்டு நீதித்துறை கூறியுள்ளது.

அவரது வர்த்தகத் தொடர்புகள் விசாரிக்கப்பட்டு வருவதாக விசாரணை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

வெடிபொருட்கள் நிரம்பிய ஆளில்லா விமானம்

பிப்ரவரி மாதம் தங்களால் சுட்டு வீழ்த்தப்பட்ட இரானின் ஆளில்லா விமானம் வெடிபொருட்களால் நிரப்பட்டிருந்தது என்றும் அது தங்களைத் தாக்கும் நோக்குடன் ஏவப்பட்டது என்றும் இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.

அந்த ஆளில்லா விமானம் சிரியாவில் உள்ள ஒரு விமானப்படைத் தளத்தில் இருந்து ஏவப்பட்டது.

ஊடகவியலாளர்கள் கடத்திக் கொலை

கொலம்பியக் கிளர்ச்சியாளர்களால் கடத்தப்பட்ட இரு ஊடகவியலாளர்கள் மற்றும் அவர்களின் வாகன ஓட்டுநர் ஆகியோர் கொல்லப்பட்டுள்ளதாக ஈக்குவெடார் அதிபர் லெனின் மொரேனோ கூறியுள்ளார்.

ஈக்குவெடார் - கொலம்பியா எல்லையில் இருக்கும் கிளர்ச்சியாளர்கள் மற்றும் போதைப் பொருள் கடத்தல்காரர்கள் ஈக்குவெடார் ராணுவத்தை இலக்கு வைத்து தாக்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: