இந்தியத் தூதரக ஃபேஸ்புக் பக்கத்தில் எதிர்ப்பைப் பதிவு செய்த கொரியத் தமிழர்கள்

இந்திய அமைச்சர் நிதின் கட்கரி நான்கு நாள் தென் கொரியப் பயணம் மேற்கொண்டார். அங்கு அவர் பல அமைச்சகங்களைப் பார்வையிட்டார், அந்தப் புகைப்படங்களை சோலில் உள்ள இந்திய தூதரகம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தது.

அதன் கீழ் கருத்துகளை பதிவு செய்த நூற்றுக் கணக்கான கொரியா வாழ் தமிழர்கள், மத்திய அரசு உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என வலியுறுத்தியுனர்.

நீர் வளத்துறை அமைச்சர் என்கிற முறையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது பற்றி ஏன் கருத்துக் கூறவில்லை என்றும் இதில் உங்களின் நிலைப்பாடு என்ன என்பது போன்ற கேள்விகளுடனும் நெட்டிசன்கள் தொடர்ந்து பதிவிட்டனர்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் படி காவிரி மேலாண்மைவாரியம் அமைக்கக்கூறி #CauveriManagementBoard என்ற ஹேஷ்டேகை அவர்கள் கருத்துகளுடன் இணைத்து தங்கள் எதிர்ப்பை கொரியா வாழ் தமிழர்கள் பதிவு செய்தனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: