You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஸ்கேன் தொழில்நுட்பம் மூலம் வெளிப்பட்ட மம்மி மீதுள்ள ரகசிய எழுத்துக்கள்
லண்டனில் உள்ள ஆராய்ச்சியாளர்கள், மம்மி முகமூடி பாப்பிரஸ் பெட்டியில் என்னென்ன எழுதப்பட்டுள்ளன என்பதைக் கண்டறிய ஸ்கேனிங் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர்.
இந்த அலங்கரிக்கப்பட்ட பெட்டிகள் தான் இறந்தவர்களின் உடல் கல்லறையில் வைக்கும் முன் வைக்கப்படும் இடமாகும்.
பண்டைய எகிப்தியர்கள், பொருட்கள் பட்டியலையோ அல்லது வருமான வரி குறித்த குறிப்புகளை எழுதவோ பயன்படுத்திய பாப்பிரஸ் துண்டுகளால் இந்த பெட்டி தயாரிக்கப்பட்டுள்ளன.
பண்டைய எகிப்தின் அன்றாட வாழ்க்கையின் ஒரு புதிய நுண்ணறிவை இந்த தொழில்நுட்பம் வரலாற்றாய்வாளர்களுக்கு வழங்குகிறது.
எகிப்து மன்னர்களின் சமாதிகளில் உள்ள சுவர்களில் காணப்படும் பழங்கால எகிப்தியர்களின் சித்திர வடிவ எழுத்துக்கள் பற்றிய ஆய்வு (ஹேய்ரோகிலைபிஃஸ்), செல்வந்தர்களும் சக்திவாய்ந்தவர்களும் தாங்கள் எவ்வாறு சித்தரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று நினைத்ததைக் காட்டுகிறது.
இந்த புதிய தொழில்நூட்பம் எகிப்து குறித்து படித்து வருபவர்களுக்கு பண்டைய எகிப்தின் உண்மையான கதையை அணுக வழிவகுக்கும் என்று இந்த திட்டத்தை முன்னடத்தும் யூனிவர்சிட்டி காலேஜ் லண்டனின் பேராசிரியர் ஆடம் கிப்ஸன் கூறுகிறார்.
"உயர் ரக பொருட்களை தயாரிக்க உதவியதால் கழிவு பாப்பிரஸ் 2000 ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்டு வந்தது,'' என்றார் அவர்.
"எனவே இந்த முகமூடிகள் எங்களிடம் உள்ள கழிவு பாப்பிரஸ்களின் தொகுப்பில் சிறந்த ஒன்றாகும். இதில் தனிநபர்கள் பற்றியும் அவர்களின் அன்றாட வாழ்க்கை பற்றிய தகவல்களும் உள்ளன''
இந்த பாப்பிரஸ் துண்டுகள் 2000 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானவை.
இதன் மேல் உள்ள எழுத்துக்கள் பெரும்பாலும் மம்மி குறித்த தகவல்களையெல்லாம் ஒன்றுசேர்த்து பசை மற்றும் பிளாஸ்டர்களால் மறைக்கப்பட்டிருக்கும்.
ஆனால் ஆய்வாளர்கள், இதன் கீழ் என்ன உள்ளது என்பது குறித்து எழுத்துக்களை மிளிரச்செய்யும் பல்வேறு வகையான விளக்குகளைக்கொண்டு ஸ்கேன் செய்வார்கள்.
கென்ட்டில், சிட்டிங்ஸ்டோன் காஸிலில் உள்ள ஒரு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள ஒரு மம்மி குறித்த விவகாரத்தில், இந்த தொழில்நுட்பம் மூலம் முதல் வெற்றி கிடைத்துள்ளது. கண்களுக்குப் புலப்படாத பாத தகட்டில் எழுதப்பட்டவற்றை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த ஸ்கேன் மூலம் ஒரு பெயர் வெளிவந்தது. அது தான் "ஐரிதொரூ" - எகிப்தின் பொதுப்பெயர். '' காக்கும் கடவுளின் கண் எனது எதிரிகளுக்கு எதிரானது'' என்பது இதன் பொருள்.
இப்போது வரை, அவற்றின் மீது எழுதப்பட்டதைப் பார்க்க ஒரே வழி இந்த விலைமதிப்பற்ற பொருட்களை அழிக்கவேண்டியதுதான். இதனால் இதைச் செய்யலாமா வேண்டாமா என்று எகிப்தைப் பற்றி படிப்பவர்கள் குழம்பிவிடுவார்கள். அவர்கள் இதை அழிப்பார்களா? அல்லது அதைத் தொடாமலே, அதில் அடங்கிய கதைகளைக் கூறாமலே விட்டுவிடுவார்களா?
அப்படியே மம்மி வழக்குகளை விட்டு விடும் ஒரு ஸ்கேனிங் தொழில்நுட்பத்தை இப்போது ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர். ஆனால் பாப்பிரஸ்ஸில் என்ன உள்ளது என்பதை எகிப்து பற்றி படிப்பவர்களால் படிக்கமுடியும். யூனிவர்சிட்டி காலேஜ் லண்டனில் எகிப்து பற்றி படிக்கும் மாணவர், தன்னைப் போன்ற மாணவர்களிடம் இரண்டு உலகம் பற்றிய சிறந்த தகவல்கள் இருப்பதாகக் கூறுகிறார்.
''இந்த விலையுயர்ந்த பொருட்கள் அதன் எழுத்துக்களுக்காக அழிக்கப்படுவதைப் பார்த்தால் எனக்கு பயமாக இருக்கிறது. அவை வரையறுக்கப்பட்ட ஆதாரங்கள்; இப்போது அந்த அழகான பொருட்களை பாதுகாக்கவும் அவற்றின் உட்பகுதியில் உள்ளவற்றைப் பார்த்து, எகிப்தியர்கள் தங்கள் ஆவண ஆதாரங்கள் மூலம் வாழ்ந்த வழியையும் புரிந்து கொள்வதற்கு நம்மிடம் ஒரு தொழில்நுட்பம் உள்ளது. அவர்கள் எழுதியவற்றையும் அவர்களுக்கு முக்கியமானவற்றையும் நம்மால் பார்க்க முடியும்''
பிற செய்திகள்:
சமூகஊடகங்களில் பிபிசி தமிழ் :