You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ரசிகர்களை இணைக்க 'ரஜினி மன்றம்' இணையதளம்; கமலை முந்தினார் ரஜினி
தமிழகம் முழுவதும் உள்ள தனது ரசிகர்களை ஒன்றிணைக்கும் விதமாக 'ரஜினி மன்றம்' என்ற ஒரு புதிய இணையதளம் மற்றும் ஒரு செயலியை அறிமுகப்படுத்தியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.
இதுதொடர்பாக காணொளி பதிவு ஒன்றில் பேசும் அவர், தனது அரசியல் பிரவேசத்தை வரவேற்ற அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்வதாகவும், பதிவு பெற்ற மற்றும் பதிவு பெறாத சங்கங்களை சேர்ந்த ரசிகர்கள் மற்றும் தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை விரும்பும் பொதுமக்கள் ஆகியோரை ஒரே குடையின்கீழ் இணைக்கும் விதமாக 'ரஜினிமன்றம்' என்ற ஒரு புதிய இணையதளம் மற்றும் செயலியை உருவாக்கியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ரசிகர் மன்றங்கள் தவிர, தமிழ் நாட்டில் ஓர் அரசியல் மாற்றம் ஏற்பட வேண்டும் என்று விரும்புவோரும் சேர்ந்து, அந்த இணையதளத்தில், பெயர் மற்றும் வாக்காளர் அட்டை எண்ணை பதிவுசெய்து உறுப்பினராகலாம் என்றும் கூறியுள்ளார்.
முன்னர், நேற்றைய தினம் ரசிகர்களிடையே உரையாற்றிய அவர், தான் அரசியலுக்கு வருவது உறுதி என்றும், அது காலத்தின் கட்டாயம் என்றும் ரசிகர்கள் மத்தியில் அறிவித்திருந்தார்.
மேலும் பேசுகையில், தான் தனி கட்சி தொடங்கபோவாதாகவும், அனைத்து தொகுதிகளிலும் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டி யிடுவோம் என்றும் அலர் கூறினார் அவர். காலம் குறைவாக இருப்பதால் அதற்கு முன்பு வரும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்ற அவர், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து தேர்தல் சமயத்தில் அறிவிப்பேன் என்றார்.
கமலை முந்திய ரஜினி
கடந்த நவம்பர் மாதம், மக்கள் கருத்துக்களையும், பிரச்சனைகளையும் தெரிவிப்பதற்காக 'மையம் விசில்' 'MAIAMWHISTLE' என்ற பிரத்யேக செயலியை தனது பிறந்த நாளான்று நடிகர் கமல் ஹாசன் சென்னையில் அறிமுகப்படுத்தினார்.
செயலியை அறிமுகம் செய்து வைத்தபிறகு பேசிய கமல், ''தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக இந்தச் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது'' என்றார். இது ஒரு செயலி மட்டுமல்ல ஒரு பொது அரங்கம் என கமல் குறிப்பிட்டார்.
தமிழகம் முழுவதும் பயணம் செய்யத் திட்டமிட்டுள்ளதாக கூறிய கமல், தீயவை நடக்கும்போது குரல் கொடுக்க 'மையம் விசில்' செயலி பயன்படும் என்றார்.
பிற செய்திகள்:
சமூகஊடகங்களில் பிபிசி தமிழ் :