விமான என்ஜினில் கூடு கட்டிய தேனீக்கள் - புறப்பாட்டில் தாமதம்

விமானத்தில் இன்ஜினில் கூடு கட்டிய தேனீக்கள் - புறப்பாட்டில் தாமதம்

பட மூலாதாரம், TWITTER

தென்னாப்பிரிக்காவின் முக்கிய நகரங்களில் ஒன்றான டர்பனின் விமான நிலையத்தில் விமானம் ஒன்றின் என்ஜினில் ஆயிரக்கணக்கான தேனீக்கள் கூடு கட்டியது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேங்கோ ஏர்லைன்ஸுக்கு சொந்தமான அந்த விமானத்தின் என்ஜினில் கூடியிருந்த சுமார் 20,000 தேனீக்கள் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மிகவும் அரிதான நிகழ்வின் காரணமாக விமானத்தின் புறப்பாட்டில் தாமதம் ஏற்பட்டது. சில மணிநேரங்களுக்கு முன்னர்தான் தேனீக்கள் அங்கு ஓய்வெடுக்க வந்திருக்க வேண்டும் என்று வல்லுநர் ஒருவர் தெரிவித்தார்.

இந்நிலையில், விமானத்தின் புறப்பாட்டு நேரத்திற்கு 25 நிமிடத்திற்கு முன்னர்தான் தேனீக்கள் என்ஜினுக்குள் வந்தன என்றும் இதன் காரணமாக கிங் சாகா சர்வதேச விமான நிலையத்தில் மூன்று பயணிகள் விமானங்களின் புறப்பாடு தாமதமானதாகவும் மேங்கோ ஏர்லைன்ஸின் செய்தித்தொடர்பாளர் செர்ஜியோ டோஸ் சாண்டோஸ் தெரிவித்துள்ளார்.

"என்னுடைய எட்டாண்டுகால விமானப் போக்குவரத்து பணி அனுபவத்தில் இதுபோன்ற சூழ்நிலையை நான் கண்டதே இல்லை" என்று தென்னாப்பிரிக்காவின் நியூஸ்24 இணையதள செய்தி நிறுவனத்திடம் அவர் கூறியுள்ளார்.

இந்த நிகழ்வு குறித்த புகைப்படம் ஒன்றை மேங்கோ ஏர்லைன்ஸ் ட்விட்டரில் வெளியிட்டுள்ளது.

தேனீக்கள் விமானத்தின் என்ஜினுக்குள் புகுந்தது விரைவிலேயே கண்டுபிடிக்கப்பட்டாலும், அவற்றை நீக்குவதற்கு தகுந்த நிறுவனத்தை கண்டறிந்து, அதன் பணியாளர்களை விமான ஓடுபாதைக்குள் அழைத்து செல்வதற்குரிய அனுமதியை விமான நிலைய அதிகாரிகளிடம் பெறுவதற்கு தாமதமாகிவிட்டது.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

விமான நிலைய அதிகாரிகளிடமிருந்து அனுமதி கிடைத்த சிறிது நேரத்திலேயே தேனீக்கள் அப்புறப்படுத்தப்பட்டதாக 'ஏ பீ சீ' (A Bee C) நிறுவனத்தின் மெல்வின் டவ்சோன் என்பவர் தெரிவித்துள்ளார்.

"இதற்கு முன்னர் பல வித்தியாசமான சூழ்நிலையில் தேனீக்களை நீக்கியிருந்தாலும், இதுபோன்று நடப்பது எங்களுக்கு இதுவே முதல்முறை" என்று நியூஸ்24 தொலைக்காட்சியிடம் அவர் மேலும் கூறினார்.

தேனீக்கள் விமானத்தின் என்ஜினுக்குள் ஓய்வெடுக்க வந்திருக்க வாய்ப்புண்டு என்று தென்னாப்பிரிக்க தேனீக்கள் தொழிற்துறையின் தலைவர் மைக் மைல்ஸ் தெரிவித்துள்ளார்.

"எண்ணெய் பசையுடனும், ஒருவித துர்நாற்றம் மற்றும் சூடாக காணப்படும் விமானத்தின் இன்ஜின் தேனீக்களுக்கு நிரந்தர இடமாக இருக்க வாய்ப்பில்லை. மரங்களில் வசிப்பதை மட்டுமே விரும்பும் தேனீக்கள், விமானத்தின் என்ஜினில் குழுமியது அசாதாரணமானது," என்று அவர் மேலும் கூறினார்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :