பாரீஸ் 'ஸ்பைடர் மேன்' பாய்ந்து காப்பாற்றிய குழந்தையின் தந்தைக்கு சிறை

கடந்த சில மணி நேரங்களில் நிகழ்ந்த உலக நடப்புகளில் சிலவற்றை தொகுத்து வழங்குகிறோம்.

தந்தைக்கு சிறை

தந்தைக்கு சிறை

பட மூலாதாரம், Facebook

பாரிஸில் நான்காவது மாடி பால்கானியில் இருந்து தவறி விழுந்து, தொங்கி கொண்டிருந்த சிறுவனை மலியிலிருந்து குடிபெயர்ந்த ஒருவர் ஹீரோ போல காப்பாற்றியுள்ளார்.மேற்கு ஆஃபிரிக்க நாடான மலியிலிருந்து குடிபெயர்ந்தவர் கசாமா. அவர் குழந்தையை காப்பாற்றும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலவாக பரவியது.ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில், ஒரு பால்கனியில் இருந்து மற்றொரு பால்கனிக்கு தாவி, 4 வயது குழந்தையை காப்பாற்றினார்.இந்த குழந்தையின் தந்தைக்கு மூன்று மாதங்கள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பால்கனியில் தொங்கிக் கொண்டிருந்த அந்த குழந்தை குடியேறி ஒருவரால் மீட்கப்பட்டது. ஸ்பைடர்மேன் போல கட்டடத்தில் ஏறி அவர் அந்த குழந்தையை மீட்டார். அதற்காக அவர் பலராலும் பாரட்டப்பட்டார். பிரான்ஸ் நாட்டு குடியுரிமையும் அவருக்கு வழங்கப்பட்டது. குழந்தையின் தந்தை முறையாக குழந்தையை பராமரிக்கவில்லை என்று கூறிய நீதிமன்றம், அவர் 'பெற்றோர் கடமை'-க்கான பயிற்சி எடுக்க வேண்டும் என்றும் கூறி உள்ளது.

Presentational grey line

16 வயதில் பாலியல் வல்லுறவு

பத்மா

பட மூலாதாரம், AXELLE/BAUER-GRIFFIN/GETTY

நான் 16 வயதில் பாலியல் வல்லுறவுக்கு உள்ளானேன் என அமெரிக்க தொகுப்பாளர் பத்மலட்சுமி தெரிவித்துள்ளார். நாற்பத்து எட்டு வயதான பத்மா நியூயார்க் டைம்ஸ் நாளிதழுக்கு எழுதிய கட்டுரையில் ஒரு புத்தாண்டு தினத்தன்று தன் நண்பரால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளானதாக தெரிவித்துள்ளார். அண்மையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நீதிபதிகள் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய இரண்டு பெண்கள் குறித்து சந்தேகத்தை எழுப்பி இருந்தார். இது குறித்து பத்மா எழுதிய கட்டுரையில் தனக்கு நிகழ்ந்த நிகழ்வை சுட்டிக்காட்டி உள்ளார்.

Presentational grey line
Presentational grey line

புனித நகரங்களை இணைக்கும் ரயில்

புனித நகரங்களை இணைக்கும் ரயில்

பட மூலாதாரம், Reuters

செளதி அரசர் சல்மான் புனித நகரங்களை இணக்கும் அதிக வேக ரயிலை தொடங்கி வைத்தார். இந்த ரயிலானது மெக்கா மதினா ஆகிய நகரங்களை இணைக்கிறது. இந்த ரயில் திட்டத்தின் மதிப்பு 6.7 பில்லியன் டாலர்கள். மணிக்கு 300 கி.மீ வேகத்தில் இந்த ரயில் செல்லும் .

Presentational grey line

சுட்டுக் கொலை

சுட்டுக் கொலை

பட மூலாதாரம், AL-WEED AL-ALAIAMI FOR HUMAN RIGHTS

இராக் மனித உரிமை பெண் செயற்பாட்டாளர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் . அரசாங்கத்திற்கு எதிராக கடுமையான போராட்டங்கள் நடந்துவரும் பாஸ்ரா நகரத்தில் இந்த சம்பவமானது நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள காணொளியில், செளதா அல் அலி ஒரு சூப்பர்மார்க்கெட் அருகே தனது வாகனத்தில் ஏறும் போது அடையாளம் தெரியாத நபர்களால் சுடப்படுகிறார்,

Presentational grey line

கைதான சீன உளவாளி

அமெரிக்கா

பட மூலாதாரம், Getty Images

சீனாவை சேர்ந்த ஒருவர் அமெரிக்க பொறியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளை சீனாவின் சார்பில் உளவுப் பார்த்ததாக கைது செய்யப்பட்டுள்ளார் என அமெரிக்க விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சட்ட விரோத உளவாளியாக செயல்பட்டதாக 27 வயதாகும் ஜு ஷாக்குவான் சிகாகோவில் கைது செய்யப்பட்டார் என அமெரிக்க அட்டார்னி அலுவலகம் தெரிவித்துள்ளது.

மின் பொறியியல் படிப்பதற்காக 2013ஆம் ஆண்டு அமெரிக்கா வந்துள்ளார் ஷாக்குவான். 2016ஆம் ஆண்டு அமெரிக்க ராணுவத்தில் அவரின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.

சிகாகோ நீதிமன்றத்தில் பதிவான குற்றவியல் புகாரின்படி ஷக்குவான் ஜி உயர்மட்ட உளவுத்துறை அதிகாரி ஒருவருக்கு பணி புரிந்ததாக குற்றம் சுமத்தப்படுகிறது.

Presentational grey line

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :