வில்லங்கமாக சிக்கிய அணில்களை மீட்ட மறுவாழ்வு மையம்

வால்கள் ஆபத்தான முறையில் பின்னி பிணைந்திருந்த 5 சாம்பல் நிற அணில் குட்டிகளை அமெரிக்க வனவிலங்கு மையம் ஒன்று காப்பாற்றியுள்ளது.

பின்னி பிணைந்திருக்கும் அணில் குட்டிகள்

பட மூலாதாரம், Image copyrightWISCONSIN HUMANE SOCIETY

தாய் அணிலால் கூடு கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட புல் மற்றும் பிளாஸ்டிக் கீற்றுகளோடு இந்த அணில் குட்டிகளின் வால்கள் பின்னி பிணைந்து, ஒன்றுக்கொன்று விலகிச் செல்ல முடியாத அளவுக்கு முடிச்சு விழுந்திருந்தது.

இந்த அணில் குட்டிகள் விஸ்கான்சின் மனிதவள சங்கத்தின் வனவிலங்கு மறுவாழ்வு மையத்திடம் வழங்கப்பட, இந்த மையம் அவற்றின் வால்களை பத்திரமாக பிரித்து எடுத்து அவற்றின் உயிரை காப்பாற்றியுள்ளது.

மயக்க மருந்து வழங்கப்பட்ட நிலையில், இந்த 5 அணில் குட்டிகளின் வால்களிலும் பின்னி பிணைந்திருந்த கீற்றுகளை கத்தரியால் வெட்டி அவற்றை விடுவித்துள்ளனர்.

தங்களின் சமநிலைக்கும், தங்களை வெப்பமாக வைத்து கொள்ளவும் அணில்களுக்கு வால் மிகவும் முக்கியமானது என்று இந்த வனவிலங்கு மறுவாழ்வு மையத்தின் ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வால்கள் பின்னி பிணைந்து கொண்டதால், அவற்றில் ரத்த ஓட்டம் நின்றுபோய் திசுக்களில் சேதங்கள் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுவிக்கப்பட்ட அணில் குட்டிகள்

பட மூலாதாரம், WISCONSIN HUMANE SOCIETY

20 நிமிட போராட்டத்திற்கு பின்னர்தான் இந்த அணில் குட்டிகளை விடுவிக்க முடிந்தது என்றால், அந்த முடிச்சால் ஏற்படும் ஆபத்து எவ்வளவு அதிகமாக இருந்திருக்கும் என்பதை கற்பனை செய்து கொள்ளலாம்.

விரைவில் அவற்றை காட்டில் விட்டுவிடவுள்ளதாக இந்த மறுவாழ்வு மையம் தெரிவித்துள்ளது.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :