பதவி விலகும் அமெரிக்க வெள்ளை மாளிகை வழக்கறிஞர் - ஏன், எதனால்?

டான் மெக்கான்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, டான் மெக்கான்

வெள்ளை மாளிகையின் வழக்கறிஞர் டான் மெக்கான், வரும் மாதங்களில் தனது பதவியில் இருந்து விலகுவார் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்

வரும் இலையுதிர் காலத்தில், உச்சநீதிமன்றத்துக்காக நியமிக்கப்படுவது உறுதி செய்யப்பட்டதும் அவர் இப்பதவியில் இருந்து செல்வார் என்றும் அதிபர் டிரம்ப் ட்வீட் செய்துள்ளார்.

2016 அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு இருந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையில் மெக்கான் வழங்கும் ஒத்துழைப்பு, அமைதியின்மையை ஏற்படுத்தியுள்ளதாக வெள்ளை மாளிகை அறிக்கையை தொர்ந்து இந்த வெளியேற்றம் நிகழவுள்ளது.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

நிர்வாகத்தின்போது வெள்ளை மாளிகை வழக்கறிஞர்கள் அடிக்கடி மாற்றப்படுவது ஒன்றும் புதிதல்ல.

முன்னதாக அதிபர் டிரம்பின் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டவர் மெக்கான். தற்போது வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரிகள் பலர் அங்கிருந்து விலக, கடைசியாக இவரும் விலகியுள்ளார்.

மெக்கானுடன் நெருங்கிய நபர் ஒருவர், வாஷிங்டன் பத்திரிகையிடம் கூறுகையில், மெக்கான் வரும் இலையுதிர் காலத்தில் விலகி செல்ல திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

எனினும், இதுகுறித்து அதிபர் டிரம்புடன் மெக்கான் ஆலோசிக்கவில்லை. இந்நிலையில், அதிபர் டிரம்பின் ட்வீட் அவருக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீதித்துறை விசாரணை அதிகாரிகளுடன், தானாகவே மூன்று முறை சென்று, மொத்தம் 30 மணி நேரத்திற்கு பேசியுள்ளார் என்று கூறப்படுகிறது.

அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு தொடர்பான குற்றச்சாட்டை விசாரித்து வரும் சிறப்பு கவுன்சில் ராபர்ட் முல்லருக்கு, மெக்கான் மிகுந்த ஒத்துழைப்பு அளித்ததாக நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது.

முல்லரின் இந்த விசாரணை டிரம்பின் அதிபர் பதவிக்கு பிரச்சனையான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :