வேட்டையாடிகளை வேட்டையாடிய பனிக்கரடி
கடந்த சில மணிநேரங்களில் நடைபெற்ற முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகின்றோம்.
பனிக்கரடி வேட்டை

வேட்டையாடி ஒருவர் வடக்கு கனடாவில் பனிக்கரடி மற்றும் அதன் குட்டியால் கொல்லப்பட்டிருக்கிறார். இந்த சம்பவத்தில் மேலும் இரண்டு வேட்டையாடிகளுக்கு சிறு காயம் ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து அந்த பனிக்கரடியையும், அதன் குட்டியையும் சுட்டு கொன்றிருக்கிருக்கிறார்கள். கனடாவின் இந்த கோடை காலத்தில் நிகழும் இரண்டாவது சம்பவம் இது.

வீடற்ற மனிதரும், அமெரிக்க தம்பதியும்

பட மூலாதாரம், DAVID SWANSON/ PHILADELPHIA INQUIRER
தம்மை ஏமாற்றிவிட்டதாக கூறி வீடற்ற மனிதர் ஒருவர் அமெரிக்க தம்பதி மீது வழக்கு தொடர்ந்துள்ளார். எனக்கு உதவுவதாக கூறி 4 லட்ச அமெரிக்க டாலர்கள் நிதியை திரட்டி அதனை அவர்கள் சொந்த பயன்பாட்டிற்கு உபயோகித்து இருக்கிறார்கள் என்பதுதான் அவரின் குற்றச்சாட்டு. கேட் தம்பதியின் வாகனம் சாலையில் பெட்ரோல் இல்லாமல் நின்றபோது தன்னிடம் இருந்த கடைசி இருபது டாலரை ஜானி பெட்ரோல் போட கொடுத்தார். இந்த சம்பவமானது வைரலாக பரவியது. ஜானிக்கு பாராட்டுகள் குவிந்ததன. ஜானிக்கு உதவ கேட்டு நிதி திரட்ட தொடங்கிய போது ஏறத்தாழ 14,00 பேர் நிதி அளித்தார்கள்.


நாங்கள் இருக்கிறோம்

பட மூலாதாரம், PA
நைஜீரியா மக்களையும், அந்த நாட்டில் வசிக்கும் பிரிட்டன் பணியாளர்களையும் தீவிரவாத தாக்குதலில் இருந்து காக்க நைஜீரியாவுக்கான ராணுவ உதவி அதிகரிக்கப்படும் என்று பிரிட்டன் பிரதமர் தெரீசா மே கூறி உள்ளார். இஸ்லாமிய கிளர்ச்சியை எதிர்கொள்ள நைஜீரிய ராணுவத்திற்கு சிறப்பு ஆயுதங்களும், பயிற்சியும் வழங்கப்படும் என்றும் அவர் கூறி உள்ளார்.

துருக்கி ஹிட்லர்

பட மூலாதாரம், EPA
'துருக்கி ஹிட்லர்' எனும் வாசகம் பொறிக்கப்பட்ட துருக்கி அதிபர் ரிசெப் தயிப் எர்துவானின் 13 அடி பொற் சிலையை தீயணைப்பு வீரர்கள் அகற்றி உள்ளனர். ஜெர்மனில் 'கெட்ட செய்தி' என்ற தலைப்பில் கலை விழா நடந்து வருகிறது. அந்த கலைவிழாவில்தான் எர்துவான் சிலை வைக்கப்பட்டிருக்கிறது. எர்துவான் ஆதரவாளர்களுக்கும், விமர்சகர்களுக்கும் எழுந்த கருத்து வேறுபாட்டினை அடுத்து அந்த சிலை அகற்றப்பட்டிருக்கிறது. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள், காத்திரமான உரையாடலுக்கு இது வழிவகுக்கும் என்று நாங்கள் நினைத்தோம் என்று கூறி உள்ளனர்.

பதவி விலக உள்ள வெள்ளை மாளிகை வழக்கறிஞர்

பட மூலாதாரம், Reuters
வெள்ளை மாளிகையின் வழக்கறிஞர் டான் மெக்கான், வரும் மாதங்களில் தனது பதவியில் இருந்து விலகுவார் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார். வரும் இலையுதிர் காலத்தில், உச்சநீதிமன்றத்துக்காக நியமிக்கப்படுவது உறுதி செய்யப்பட்டதும் அவர் இப்பதவியில் இருந்து செல்வார் என்றும் அதிபர் டிரம்ப் ட்வீட் செய்துள்ளார். 2016 அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு இருந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையில் மெக்கானின் ஒத்துழைப்பு அமைதியின்மையை ஏற்படுத்தியுள்ளதாக வெள்ளை மாளிகை அறிக்கையை தொர்ந்து இந்த வெளியேற்றம் நிகழவுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












