இரண்டு குண்டுகள், பதினெட்டாயிரத்து ஐந்நூறு மக்கள், ஆறு மணி நேரம்: பரபரப்பு நிமிடங்கள்
கடந்த சில மணிநேரங்களில் நடைபெற்ற முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகின்றோம்.
காலி செய்யப்பட்ட ஜெர்மன் நகரம்

பட மூலாதாரம், AFP
இரண்டாம் உலக போரில் போடப்பட்ட இரண்டு குண்டுகள் ஜெர்மன் நகரம் ஒன்றில் கண்டெடுக்கப்பட்டது. அந்த குண்டுகளை செயலிழக்க செய்வதற்காக ஆறு மணி நேரத்திற்கு அந்த ஊரில் உள்ள மக்களை எல்லாம் ஊரைவிட்டு வெளியே அனுப்பி இருக்கிறார்கள். மத்திய ஜெர்மனியில் உள்ள அந்த ஊரின் பெயர் லுட்விக்ஷஃபன். அங்கு 500 கிலோ எடை உள்ள குண்டுகள் கட்டட பணியாளர்களால் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. இது அமெரிக்காவால் போடப்பட்ட குண்டுகளாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. இதனை அப்புறப்படுத்துவதற்காக அந்த ஊரில் இருந்த 18,500 பேரை ஆறு மணி நேரத்திற்கு வெளியே அனுப்பினர் அதிகாரிகள்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு

வான் தாக்குதல்

பட மூலாதாரம், Reuters
வான் தாக்குதலில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் ஆஃப்கன் தலைவர் சனிக்கிழமை பலியானார் என்று ஆஃப்கன் அதிகாரிகள் கூறுகின்றனர். பாகிஸ்தான் எல்லை அருகே உள்ள கிழக்கு மாகாண பகுதியான நன்கர்ஹர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை ஒன்றில் அபு சாத் எர்ஹாபியும், அந்த அமைப்பை சேர்ந்த பத்து உறுப்பினர்களும் மரணத்தினர் என கூறப்படுகிறது.

மன்னித்து கொள்ளுங்கள்

அயர்லாந்து குடியரசுக்கான தனது வரலாற்று சிறப்புமிக்க இரண்டு நாள் பயணத்தை ஞாயிற்றுக்கிழமை நிறைவு செய்தார் போப் ஃபிரான்ஸிஸ். மதகுருக்களால் குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதை மறைத்த கத்தோலிக்க திருச்சபைகளின் உறுப்பினர்களுக்காக மன்னிப்பு கோரியுள்ளார் போப் ஃபிரான்ஸிஸ்.

இரு சக்கர பயணம்

பட மூலாதாரம், AFP
இனி மகிழுந்து வணிகத்தை விட மின்சார இரு சக்கர வாகன வணிகத்தில் அதிகம் கவனம் செலுத்தப்போவதாக ஊபர் நிறுவனம் கூறி உள்ளது. வாடகை கார் வணிகத்தில் உலகம் முழுவதும் கோலோச்சி வருகிறது ஊபர். இந்த நிறுவனத்தை சேர்ந்த போஸ் டாரா உள் நகரங்களுக்கு பயணிக்க தனிமனித போக்குவரத்துதான் தோதாக இருக்கும் என்று கூறி உள்ளார். ஆனால் அதே நேரம் இது லாபத்தை பாதிக்கும் என்றும் தரவுகள் கூறுகின்றன.

நாடக ஆசிரியர் காலமானார்

பட மூலாதாரம், Reuters
அமெரிக்காவில் கொண்டாடப்பட்ட நாடக ஆசிரியர் நீல் சிமோன் தனது 91 வது வயதில் நிமோனியா பிரச்சனையால் காலமானார் என அவரது பிரதிநிதிகள் கூறி உள்ளனர். தி ஆட் கப்புல், பார்ஃபூட் இன் தி பார்க் ஆகிய நகைச்சுவை நாடகங்களுக்காக உலகளவில் 60-களில் அறியப்பட்டார். 1991 ஆம் ஆண்டு புலிட்சர் விருது பெற்றார்.

ஃப்ளோரிடா தாக்குதல்

பட மூலாதாரம், GLHF GAME BAR
ஃப்ளோரிடா மாகாணத்தில் பொழுதுபோக்கு வளாகம் ஒன்றில் துப்பாக்கிதாரி ஒருவரால் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர் என போலிஸார் தெரிவித்துள்ளனர்.துப்பாக்கிதாரியின் பெயர் டேவிட் கேட்ஸ். 24 வயதுடைய அவர் பால்டிமோரை சேர்ந்தவர். அவர் சம்பவ இடத்தில் தன்னை தானே சுட்டுக் கொண்டு உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வேறுயார் மீதும் சந்தேகமில்லை.இந்த சம்பவத்தில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












