கேரள வெள்ளத்துக்கு மனிதாபிமான உதவி செய்ய பாகிஸ்தான் தயார்: இம்ரான்

கேரள வெள்ளத்தில் தேவையான மனிதாபிமான உதவிகளை செய்யத் தயாராக இருப்பதாக புதிதாகப் பதவியேற்ற பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் டிவிட்டரில் ஒரு பதிவிட்டுள்ளார்.

"இந்தியாவில், கேரளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாகிஸ்தான் மக்கள் சார்பில் எங்கள் பிரார்த்தனைகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறோம். தேவையான மனிதாபிமான உதவிகள் எதையும் செய்யத் தயாராக இருக்கிறோம்," என்று அந்த டிவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பாக, கேரள வெள்ள நிவாரணமாக ஐக்கிய அரபு எமிரேட் அளிக்க முன்வந்த ரூ. 700 கோடியை ஏற்க முடியாது என்று இந்திய அரசு தெரிவித்துள்ளது.

ஆனால், தேசிய பேரிடர் மேலாண்மை திட்டத்தில் தீவிர பேரிடர் நேரத்தில் வெளிநாட்டு நிதியுதவியை பெற்றுக் கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டிருப்பதாக கேரள நிதியமைச்சர் தாமஸ் ஐசக் ஒரு டிவிட்டர் பதிவில் தெரிவித்திருக்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: