கேரள வெள்ளத்துக்கு மனிதாபிமான உதவி செய்ய பாகிஸ்தான் தயார்: இம்ரான்
கேரள வெள்ளத்தில் தேவையான மனிதாபிமான உதவிகளை செய்யத் தயாராக இருப்பதாக புதிதாகப் பதவியேற்ற பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், TWITTER.COM/IMRANKHANPTI
இது தொடர்பாக அவர் டிவிட்டரில் ஒரு பதிவிட்டுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
"இந்தியாவில், கேரளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாகிஸ்தான் மக்கள் சார்பில் எங்கள் பிரார்த்தனைகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறோம். தேவையான மனிதாபிமான உதவிகள் எதையும் செய்யத் தயாராக இருக்கிறோம்," என்று அந்த டிவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பாக, கேரள வெள்ள நிவாரணமாக ஐக்கிய அரபு எமிரேட் அளிக்க முன்வந்த ரூ. 700 கோடியை ஏற்க முடியாது என்று இந்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
ஆனால், தேசிய பேரிடர் மேலாண்மை திட்டத்தில் தீவிர பேரிடர் நேரத்தில் வெளிநாட்டு நிதியுதவியை பெற்றுக் கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டிருப்பதாக கேரள நிதியமைச்சர் தாமஸ் ஐசக் ஒரு டிவிட்டர் பதிவில் தெரிவித்திருக்கிறார்.
பிற செய்திகள்:
- அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு: 'டிரம்ப் குறித்த உண்மைகளை கூறப்போகிறேன்' - கோவன்
- சந்தையை கைப்பற்ற குறைவான விலையில் களமிறங்கும் ஜியோமி மொபைல்
- சௌதி: ‘பெண் செயற்பாட்டாளருக்கு மரண தண்டனை விதிக்க முயற்சி’
- 'வெளிநாட்டில் இருந்து கட்சிகளுக்கு நிதி வரலாம்; மக்களுக்கு மட்டும் உதவக்கூடாதா?'
- பாகிஸ்தான் ராணுவ தலைவரை சித்து அணைத்துக்கொண்டது ஏன்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்