You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆறு தசாப்த காத்திருப்புக்கு பின் நிகழும் சந்திப்பு - நெகிழ வைக்கும் நிகழ்வு
ஒரு நீண்ட காத்திருப்பு முடிவுக்கு வந்திருக்கிறது. ஏறத்தாழ ஆறு தசாப்தமாக உறைந்து போயிருந்த சொற்கள் உயிர் பெற்று இருக்கின்றன. ஏறத்தாத 65 ஆண்டுகள் எந்த உரையாடலுக்காக அவர்கள் காத்திருந்தார்களோ அந்த வாஞ்சையான வார்த்தை பரிமாற்றம் நிகழ இருக்கிறது.
காத்திருத்தல்
கொரிய போரின் போது பிரிந்து சென்ற உறவினர்கள் சந்திக்க இருக்கிறார்கள். 1950-53 ஆம் ஆண்டு நிகழ்ந்த கொரிய போரின் போது தென் கொரியாவுக்கு சென்றவர்கள் மீண்டும் வட கொரியா வந்திருக்கிறார்கள்.
முதலாம் உலகப் போருக்குப் பின் கொரியா இரண்டு நாடுகளாக பிரிந்தது. ஒரு காலத்தில் உறவினர்களாக இருந்தவர்கள் இரு நாட்டினராக பிரிந்து போனார்கள். ஒருவரை ஒருவர் சந்திக்க இயலாத நிலை ஏற்பட்டது.
இப்போது வயதான தென் கொரிய குழு ஒன்று உறவினர்களை சந்திக்க வட கொரியா சென்றுள்ளது. அதில் ஒருவருக்கு வயது 101.
இந்த தென் கொரியர்கள் அனைவரும் வட கொரியா செல்வதற்கு குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.
யாரெல்லாம் இந்த சந்திப்பில் கலந்து கொள்கிறார்கள்?
இரு நாட்டு தரப்பும் நூறு பேரை இந்த சந்திப்பில் கலந்து கொள்வதற்காக தேர்ந்தெடுத்துள்ளது.
சிலர் தங்கள் உறவினர்கள் உயிரோடு இல்லை அவர்களை சந்திக்க முடியாது என்பதால் இந்த சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை. அதனால் 83 வட கொரியர்களும், 89 தென் கொரியர்களும் இந்த சந்திப்பில் கலந்து கொள்கிறார்கள்.
இந்த சந்திப்பில் கலந்து கொள்ள இருக்கும் தொண்ணூற்று இரண்டு வயதான ஒரு பாட்டியின் வார்த்தைகள் நெகிழ வைப்பதாக இருக்கின்றன.
முதலாம் உலக போரின் போது பிரிந்த தன் மகனை பார்க்க போவதாக சொல்கிறார்.
லீ கூம் சியோம் தன் மகனுக்கு நான்கு வயது இருந்தபோது பிரிந்ததாக சொல்கிறார்.
இறப்பின் வாசலில் நிற்கிறேன். இந்த நாள் என் வாழ்வில் வரும் என்று நான் நினைத்து பார்க்கவே இல்லை என்கிறார் அவர்.
ஏன் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது?
கொரிய போர் லட்சகணக்கான மக்களை பிரித்தது. ஒரு வீட்டில் வசித்தவர்கள். ஒரு தெருவில் விளையாடியவர்கள். இரண்டு நாட்டவராக மாறினார்கள்.
எப்போதாவது அரசு அனுமதியுடன் இவ்வாறான சந்திப்பு நிகழும். கடந்த 18 ஆண்டுகளில் 20 சந்திப்புகள் நிகழ்ந்து இருக்கின்றன.
எப்படி நிகழ இருக்கிறது?
தென் கொரியர்கள் பேருந்துகளில் பலத்த பாதுகாப்புடன் மவுண்ட் கும்காங் சுற்றுலா விடுதிக்கு வருகிறார்கள். அவர்கள் மூன்று நாட்கள் வட கொரியாவில் இருப்பார்கள். ஆனால், உறவினர்களை சந்திக்க, பேச சில மணி நேரம் மட்டுமே அனுமதி வழங்கப்படும். மொத்தமாக 11 மணி நேரம் மட்டுமே இந்த சந்திப்பு நிகழும். அதுவும் பலத்த கண்காணிப்பின் கீழ்.
பிற செய்திகள்:
- கேரள வெள்ளம்: மழை குறைந்தது, மீட்பு பணிகள் தீவிரம்
- குரேஷியா: கடலில் 10 மணி நேரம் போராடிய பெண் மீட்பு - நம்பிக்கை பகிர்வு
- ஆசிய விளையாட்டு: முதல் தங்கப்பதக்கத்தை வென்றது இந்தியா
- குழந்தை பெற்றெடுக்க சைக்கிளில் மருத்துவமனை சென்ற நியூசிலாந்து அமைச்சர்
- தென்கொரியா: காதுகேளாதவர்களின் வாடகை கார் சேவை - எப்படி சாத்தியமானது?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்