You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தென்கொரியா: காதுகேளாதவர்களின் வாடகை கார் சேவை - எப்படி சாத்தியமானது?
தென் கொரியாவின் தலைநகரம் சோலில் காதுகோளாத ஓட்டுநர்கள் வாடகை கார் சேவையை முதல் முதலாக தொடங்கியுள்ளனர்.
காது கேட்கின்ற திறனில் குறைபாடு உள்ள கார் ஓட்டுநர்களை வாடகைக்கு அமர்த்த உள்ளூரில் இருக்கின்ற தயக்கத்தை குறைப்பதற்கு உதவிய புதிய மென்பொருள் இந்த முயற்சியை சாத்தியமாக்கியுள்ளது.
இந்த வாரத்தில் காது கேளாத இருவர் வாடகை கார் மூலம் பயணிகளுக்கு சேவையாற்ற தொடங்கியுள்ளதாக கொரியன் டைம்ஸ் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. உள்ளூர் நிறுவனமான கோயக்டஸ் உருவாக்கிய மென்பொருள் மூலம் இந்த ஓட்டுநர்கள் உதவி பெறுகின்றனர்.
இந்த மென்பொருள் செயல்படுவது பற்றி விளக்கும்போது, இரண்டு மாத்திரை கணினிகள் வாடகை காரின் முன்னும், பின்னும் பொருத்தப்பட்டுள்ளன. இவை 'கோயோஹான் டேக்ஸி' அல்லது 'சைலன்ட் டேக்ஸி' மென்பொருளோடு (App) இணைக்கப்பட்டுள்ளது.
பேசுவதை எழுத்து முறையில் மாற்றுகின்ற வசதியை இந்த மென்பொருள் கொண்டுள்ளது. பயணியர் சென்றடையும் முனையம் மற்றும் இறக்கிவிட விரும்பும் இடம், கட்டணம் செலுத்தும் முறை ஆகிய வசதிகளை கொண்டுள்ளதால் பயணிகளுக்கு இது மிகவும் எளிதாக அமைந்துவிடுகிறது.
கணினி பொறியிலாளர் பட்டம் வென்ற சொங் மின்-பியோவின் தலைமையில் சோல் நகரிலுள்ள மாணவர்கள் குழு ஒன்றால் இந்த மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.
காது கோளாதவர்களுக்கு அதிக வேலைவாய்ப்பை வழங்க விரும்பியதாக சொங், கொரிய டைம்ஸிடம் கூறியுள்ளார்.
நோட்டையும், பேனாவையும் எடுத்து, குறித்து கொள்ள முயலும் அந்த தருணத்திலேயே கொரியர்கள் அந்த வாடகை காரை விட்டு அகன்று விடுவார்கள் என்பதால் இந்த மென்பொருளை (ஆப்) கண்டுபிடித்த்தாக அவர் குறிப்பிடுகிறார்.
2015ம் ஆண்டு மே மாதம் வாடகை கார் சேவை நிறுவனமான உபேர் காது கேளாதோர் விழிப்புணர்வை உருவாக்க எடுத்த முயற்சியால் தூண்டுதல் பெற்றதாக சொங் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வசதியால் காது கோளாதோர் அதிகம் பேர் இந்த தொழிலை செய்ய முன்வருவர் என்று கோயக்டஸ் நிறுவனம் நம்புகிறது.
தென் கொரியாவில் 2 லட்சத்து 55 ஆயிரம் பேர் காது கோளாதோர் என்று சுகாதார மற்றம் நலவாழ்வு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்