உலகப் பார்வை: ரஷ்யாவில் ஓய்வூதிய வயது உயர்த்தப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.

ரஷ்யா: ஓய்வூதிய வயது உயர்த்தப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

ரஷ்யா: ஓய்வூதியத்துக்கான வயது அதிகரிப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம்

பட மூலாதாரம், TWITTER

ரஷ்யாவில் ஓய்வூதியம் பெறுவதற்கான வயதை உயர்த்தும் முடிவை எதிர்த்து 30 நகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் உலகக்கோப்பை கால்பந்து தொடங்கிய நாளன்று வந்த இது குறித்த அறிவிப்பின்படி, ஆண்களுக்கான ஓய்வூதிய வயது 60லிருந்து 65 ஆகவும், பெண்களுக்கு 55லிருந்து 63 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

அதிக அளவு மக்கள் பணி ஓய்வு பெறும் சூழ்நிலையையையும், தொழிலாளர் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையையும் சமாளிப்பதற்கு இந்த மாற்றம் அவசியமானது என்று ரஷ்ய அரசு கூறியுள்ளது.

Presentational grey line

இறுதிக்கட்டத்தை அடைந்த மெக்ஸிகோ தேர்தல்

இறுதிக்கட்டத்தை அடைந்த மெக்ஸிகோ தேர்தல்

பட மூலாதாரம், AFP

கடந்த பல தசாப்த காலங்களில் மோசமான அரசியல் வன்முறையை கண்ட மெக்ஸிகோ தேர்தல் வாக்குப்பதிவு இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் இந்த தேர்தலுக்கான பிரசாரம் துவங்கியதிலிருந்து இதுவரை 130க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சித் தொண்டர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஊழலை ஒழித்துகாட்டுவேன் என்று கூறியுள்ள மெக்ஸிகோ சிட்டியின் முன்னாள் மேயரான 64 வயதாகும் ஆண்ட்ரெஸ் மானுவல் லோபஸ் ஒபடோர் அதிபர் பதவிக்கான போட்டியில் முன்னணியில் உள்ளார்.

Presentational grey line

பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சிறாருக்கு இழப்பீடு வழங்கும் ஆஸ்திரேலியா

பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கும் ஆஸ்திரேலியா

பட மூலாதாரம், AFP

கல்வி நிறுவனங்களில் நடந்த பாலியல் துன்புறுத்தல்களால் பாதிக்கப்பட்ட சிறார்களுக்கு தேசிய அளவிலான இழப்பீட்டுத் திட்டம் ஒன்றை ஆஸ்திரேலியா தொடங்கியுள்ளது.

'தேசிய நிவாரணத் திட்டம்' என்றழைக்கப்படும் இந்த திட்டத்தின் கீழ் சுமார் 60,000 ஆஸ்திரேலியர்கள் இழப்பீட்டுக்கு தகுதியுடையவர்களாக இருப்பர்.

இழப்பீட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நான்கு பில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் பாதிக்கப்பட்டவர்க்ளின் காயத்தை குறைக்கும் என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :