உலகப் பார்வை: ஐரோப்பாவின் 2வது மிகப்பெரிய ஸ்டீல் தயாரிப்பாளரான டாடா
கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.
ஒரு ஒப்பந்தத்தில் 2வது மிகப்பெரிய ஸ்டீல் தயாரிப்பாளரான டாடா

பட மூலாதாரம், Getty Images
ஜெர்மனியின் தொழில்துறைப் பெருநிறுவனம் தைஸ்சன்க்ரப்புன், டாடா ஸ்டீல் நிறுவனமும் இணைந்து ஸ்டீல் தயாரிக்க ஒப்புக்கொண்டுள்ளன. இதன் மூலம் ஐரோப்பாவின் இரண்டாவது மிகப்பெரிய ஸ்டீல் தயாரிப்பாளராக இந்நிறுவனங்கள் உருவெடுத்துள்ளன. ஆர்சல்லர் மிட்டல் எனும் நிறுவனமே ஐரோப்பியாவின் முன்னணி ஸ்டீல் தயாரிப்பாளராக உள்ளது.
தைஸ்சன்க்ரப் டாடா ஸ்டீல் என அழைக்கப்படும் இந்த புதிய நிறுவனம் நெதர்லாந்தை தலைமையிடமாக வைத்து இயங்க உள்ளது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகளைப் பரிந்துரை செய்யவுள்ள டிரம்ப்

பட மூலாதாரம், Reuters
அமெரிக்காவின் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக தன்னால் பரிந்துரை செய்யப்படவுள்ளவர்களின் பெயர்களை ஜூலை 9-ம் தேதி அறிவிக்க உள்ளதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இரண்டு பெண்கள் உட்பட, ஐந்து பேரை தான் பரிந்துரை செய்ய உள்ளதாக அவர் கூறியுள்ளார். டிரம்பால் பரிந்துரை செய்யப்படவுள்ளவர்களுக்கு செனட் சபை ஆதரவளிக்க வேண்டும். டிரம்பின் குடியரசுக் கட்சிக்கு இங்கு பெரும்பான்மை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

துருக்கி முக்கிய எதிர்க்கட்சி தலைவர் கைது

பட மூலாதாரம், AFP/GETTY
துருக்கியின் முக்கிய எதிர்க்கட்சி அரசியல்வாதியான எர்ன் எர்டெம், தீவிரவாதம் தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் கூறியுள்ளது.
2016-ல் துருக்கி அதிபர் ரெசெப் தாயிப் எர்துவானுக்கு எதிரான தோல்வியடைந்த ராணுவப் புரட்சியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்படும் ஒரு குழுவுக்கு உதவியதாக எர்டெம் மீது குற்றச்சாட்டுகள் பதியப்பட்டுள்ளன.

கூடுதல் வரி வேண்டாம்: ஜென்ரல் மோட்டார்ஸ்

பட மூலாதாரம், Getty Images
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்குக் கூடுதல் வரிகளை விதிக்க வேண்டாம் என அமெரிக்காவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமாக ஜென்ரல் மோட்டார்ஸ் அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளது.
டிரம்ப் நிர்வாகத்தின் இத்திட்டத்தால் வேலைவாய்ப்புகள் குறையும் எனவும், விலைகள் அதிகரிக்கும் எனவும் ஜென்ரல் மோட்டார்ஸ் கூறியுள்ளது.

பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












