"அமைதியை ஏற்படுத்த வட கொரிய தலைவர் கிம்மிற்கு கிடைக்கும் ஒரே வாய்ப்பு": டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images
சிங்கப்பூரில் அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் உச்சிமாநாடு, அமைதியை நிலைநாட்ட வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னுக்கு கிடைத்த ஒரு வாய்ப்பு என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அதிபர் டிரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் இருவருக்கும் இடையிலான பேச்சுவார்த்தை சிங்கப்பூரில் வரும் செவ்வாய்கிழமையன்று நடைபெறுகிறது.
"அமைதியை நிலைநாட்டுவதற்கான நோக்கம்" என்று இந்த மாநாட்டினை டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்.
கனடாவில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில், மற்ற தலைவர்களுடன் வரி விதிப்பு தொடர்பாக எழுந்த பிரச்சனைகள் மற்றும் அதன் வீழ்ச்சியை தொடர்ந்து அதிபர் டிரம்ப் சிங்கப்பூர் புறப்பட்டு சென்றார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
பேச்சுவார்த்தைகளின் முடிவில் கிம், அணுஆயுதங்களை கைவிட்டு விடுவார் என்று அமெரிக்கா நம்புகிறது.
கடந்த 18 மாதங்களாக அதிபர் டிரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஆகியோர் இடையே அசாதாரண உறவு நிலவியது.
செவ்வாய் கிழமை காலை சிங்கப்பூரில் உள்ள சென்டோசா விடுதியில் அவர்கள் ஒருவருக்கு ஒருவர் பார்த்து கொள்ளும்போது, அமெரிக்க அதிபரும், வட கொரிய தலைவரும் சந்தித்து கொள்ளும் நிகழ்வு முதல்முறையாக நடைபெறும்.
முன்னதாக, சர்வதேச நாடுகள் எச்சரிக்கை விடுத்து எதிர்ப்பு தெரிவித்த போதிலும், பல பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைகளை வட கொரியா நடத்தியது. இதனால் அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற ஒரு வருடத்திற்குள், டிரம்பிற்கும், கிம்மிற்கும் இடையே பல கசப்பான பரிமாற்றங்கள் நடைபெற்றன.
அமெரிக்காவை, வட கொரியா தொடர்ந்து அச்சுறுத்தினால், கடும் கோபத்தை கட்டவிழ்த்துவிட வேண்டியிருக்கும் என்று டிரம்ப் உறுதி எடுத்தார். அதற்கு டிரம்பினை, மனநலம் சரியில்லாதவர் என்று கிம் குறிப்பிட்டார்.

மற்ற நாடுகள் இந்த சந்திப்பினை எப்படி பார்க்கின்றன?
தென் கொரியா
இந்த சந்திப்புக்கு உந்துதலாக இருந்த தென் கொரியா, இது வெற்றியில் முடிய வேண்டும் என்று நினைக்கிறது. தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன், கொரியா போருக்கு முறையான முடிவினை வி்ரும்புகிறார்.
சீனா
வட கொரியாவின் பாரம்பரிய நட்பு நாடான சீனா, இந்த சந்திப்பை கூர்ந்து கவனிக்கும்.
ஜப்பான்
கொரிய கற்பதீபத்திற்கு அருகே உள்ள ஜப்பான், பல ஆண்டுகளாக வட கொரியாவின் அச்சுறுத்தலின் கீழ் இருந்து வந்துள்ளது. வட கொரியா அணுஆயுத திட்டங்களை முடிவுக்கு கொண்டுவர அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும் என்பதே ஜப்பானின் பிரதான முன்னுரிமை.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












