பாலத்தீனிய விவகாரம்: இஸ்ரேலுடனுனான கால்பந்தாட்ட போட்டியை ரத்து செய்த அர்ஜென்டினா

காஸா பகுதியில் பாலத்தீனியர்களை இஸ்ரேல் நடத்தும் விதம் காரணமாக எழுந்த அரசியல் அழுத்தங்களை அடுத்து இஸ்ரேலுடன் விளையாட இருந்த கால்பந்து உலக கோப்பை பயிற்சி விளையாட்டு போட்டி ஒன்றை அர்ஜென்டினா ரத்து செய்துள்ளதாக கூறப்படுகிறது.

பாலத்தீன் விவகாரம்: இஸ்ரேலுடன் விளையாட மறுத்த அர்ஜென்டினா

பட மூலாதாரம், AFP

அர்ஜென்டினா வீரர் கொன்ஸாலோ ஈஎஸ்பினிடம் செவ்வாய்க்கிழமை இந்த தகவலை தெரிவித்தார்.

ஈஎஸ்பினுக்கு அளித்த நேர்காணல் ஒன்றில் போட்டி ரத்து செய்யப்பட்டுவிட்டது என்று கூறிய அவர், "இறுதியாக அவர்கள் சரியான காரியம் ஒன்றை செய்திருக்கிறார்கள்" என்றும் தெரிவித்தார்.

அர்ஜென்டினா ஊடகங்கள் போட்டி ரத்தான தகவலை உறுதிப்படுத்துகின்றன.

அதேநேரம், இன்னும் இஸ்ரேல் கால்பந்து சங்கத்திடமிருந்து அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் வரவில்லை.

பெஞ்சமின்

பட மூலாதாரம், EPA

அர்ஜென்டினா உடனான உறவை காப்பதற்காக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு அர்ஜென்டினா அதிபர் மெளரிசியோவுக்கு அழைப்பு விடுத்தார்.

கொண்டாடிய பாலத்தீனியர்கள்

இதனை மேற்கு கரையில் உள்ள ரமல்லா மக்கள் உற்சாகத்துடன் கொண்டாடி தீர்த்தனர்.

பாலத்தீனிய கால்பந்து சங்கம் அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸிக்கும் பிற வீரர்களுக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த ரத்தின் மூலமாக இஸ்ரேலுக்கு எதிராக சிவப்பு அட்டை எழுப்பப்பட்டுள்ளதாக பாலத்தீனிய கால்பந்து சங்கத்தின் தலைவர் ஜிப்ரீல் ரஜோப் கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னதாக அர்ஜென்டினா பாலத்தீனியத்துடன் விளையாடக் கூடாது என்ற தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி பாலத்தீனிய மக்கள் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி இருந்தனர்.

அவாஸ் என்ற அமைப்பு இஸ்ரேலுடன் அர்ஜென்டினா விளையாட கூடாது என்று பிரசாரம் செய்து வந்தது.

இந்த அமைப்பு அர்ஜென்டினாவின் முடிவினை 'நெறி சார்ந்த துணிச்சலான முடிவு' என்று வரவேற்று உள்ளது.

தொடர்புடைய செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :