வட கொரியாவுடன் பேச்சுவார்த்தை நடப்பதற்கான வாய்ப்பு உள்ளது - டிரம்ப்

பட மூலாதாரம், Win McNamee
வட கொரியாவுடனான பேச்சுவார்த்தையை ரத்து செய்வதாக தெரிவித்திருந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தற்போது பேச்சுவார்த்தை நடப்பதற்கான சாத்தியங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
திட்டமிட்டப்படி ஜூன் 12ஆம் தேதி அந்த பேச்சுவார்த்தை நடைபெறலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வியாழனன்று, "வெளிப்படையான விரோதத்தை" வட கொரியா தெரியப்படுத்தியதால் பேச்சுவார்த்தையை ரத்து செய்வதாக அவர் தெரிவித்திருந்தார்.
முன்னதாக வட கொரியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையேயான பேச்சுவார்த்தை தொடர்பாக வடகொரியாவிடமிருந்து ஆக்கப்பூர்வமான பதில் வந்திருப்பது நல்ல செய்தி என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
''வடகொரியாவிடமிருந்து ஆக்கப்பூர்வமான அறிக்கை வந்திருப்பது நல்ல செய்தி. இது எங்கே முன்னெடுத்துச் செல்லும் என விரைவில் நாம் பார்ப்போம். நீடித்த வளம் மற்றும் அமைதியை அடைய இவை உதவும் என நம்பிக்கையுடன் உள்ளேன்.ஆனால் நேரமும் செயல்திறனும்தான் இதற்கு பதில் சொல்லும்'' என டிரம்ப் தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
எந்த நேரத்திலும், எந்த நிலையிலும் அமெரிக்க அதிபர் டிரம்புடன் பேசத் தயாராக உள்ளதாக வட கொரியா தெரிவித்திருந்தது.
ஜூன் 12-ல் நடப்பதாக இருந்த அமெரிக்கா - வடகொரியா உச்சி மாநாட்டை, அதிபர் டிரம்ப் ரத்து செய்ததையடுத்து, அவரின் முடிவு மிகுந்த வருத்தமளிப்பதாக வட கொரிய துணை வெளியுறவு அமைச்சர் கிம் க்யே-க்வான் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுடன் நடைபெறவிருந்த பேச்சுவார்த்தையை ரத்து செய்வதாக அறிவித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேச்சுவார்த்தைக்கு உகந்த சமயம் அல்ல எனவும் டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்.
ஜூன் மாதம் 12ஆம் தேதி சிங்கப்பூரில் நடைபெறவிருந்த அந்த பேச்சுவார்த்தை நடைபெறாது என தெரிவித்த டிரம்ப்,''பெருங்கோபம் மற்றும் வெளிப்படையான விரோதத்தை'' வடகொரியா வெளிப்படுத்தியிருப்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக சமீபத்தில் அவர் கூறியிருந்தார்.
சிங்கப்பூரில் ஜூன் 12 அன்று உச்சிமாநாட்டை நடத்துவது பொருத்தமற்றது என்றும் அதிபர் கிம்முக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், கிம்மை 'மற்றொரு நாள்' சந்திக்க மிகவும் எதிர்பார்ப்புடன் இருப்பதாக டிரம்ப் தெரிவித்திருந்தார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
''உங்களுடன் அங்கு உச்சிமாநாட்டில் பங்குபெற நான் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்தேன். ஆனால் சோகம் என்னவெனில் உங்களது சமீபத்திய அறிக்கையில் பெருங்கோபமும், வெளிப்படையான விரோதமும் வெளிப்பட்டிருந்தன. அதன் அடிப்படையில் நான் நீண்டகாலமாக திட்டமிடப்பட்டிருந்த தற்போதைய சந்திப்பில் பங்கேற்பது பொருத்தமானதாக இருக்காது என உணர்கிறேன்'' என டிரம்ப் கூறினார்.
'' உங்களது அணுசக்தி திறன்கள் குறித்து நீங்கள் பேசுகிறீர்கள், ஆனால் எங்களுடையது மிகவும் வலிமையானது மேலும் நான் அவற்றை ஒரு போதும் பயன்படுத்துவதற்கான தேவை வரக்கூடாது என கடவுளிடம் வேண்டுகிறேன்'' என டிரம்ப் குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், Getty Images
முன்னதாக, வட கொரியா லிபியாவை போல முடிந்துவிடக்கூடும் என அமெரிக்க துணைப் பிரதமர் மைக் ஃபென்ஸ் விமர்சித்ததையடுத்து வட கொரிய அதிகாரி சோ சன் ஹுய் அவரது கருத்தை முட்டாள்தனமானது என தெரிவித்துள்ளார்.
வட கொரியா பேச்சுவார்த்தையை நடத்த பிச்சையெடுக்காது என்றும் பேரப்பேச்சு நடத்துவதற்கான ராஜதந்திர முயற்சிகள் தோல்வியடைந்தால் அணுசக்தி மோதல் நடக்கலாம் எனவும் எச்சரித்திருந்தார் சோ சன் ஹுய்.

யார் இந்தசோ சன்-ஹுய்?
கடந்த தசாப்தத்தில் அமெரிக்காவுடனான பல்வேறு பரஸ்பர ராஜீய பேச்சுவார்த்தைகளில் சோ சன் ஹுய் ஈடுபட்டுள்ளார். கிம் ஜாங் உன்னின் உயர்மட்ட உதவியாளர்களில் அவரும் ஒருவர். மேலும், அவரது கருத்து கிம் ஜாங் உன்னின் இசைவுடனேயே வெளிவரும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
வட கொரியாவுக்கு லிபியா போல முடிவு இருக்கக்கூடும் என பென்ஸ் வட கொரியாவை எச்சரித்த சில நாட்களுக்கு பிறகு சோ சன் ஹுய் கருத்து வெளியாகியுள்ளது.லிபியாவில் 2011-ல் கிளர்ச்சியாளர்களால் அந்நாட்டின் தலைவர் கடாஃபி கொல்லப்பட்டார்.

என்ன நடந்தது ?
மே10 - டிரம்ப் சிங்கப்பூரில் ஜூன் 12-ல் கிம்மை சந்திப்பதாக தெரிவித்தார்.
மே 12 - சோதனை தளத்தை தகர்க்கவுள்ளதாக வடகொரியா அறிவித்தது.
மே 16 - அமெரிக்க தேசிய பாதுகாப்புத்துறையின் ஜான் போல்டன் '' லிபிய மாதிரி'' என வடகொரியா குறித்து கருத்து தெரிவித்ததையடுத்து உச்சிமாநாட்டை ரத்து செய்யவுள்ளதாக வட கொரியா அச்சுறுத்தியது.
மே 18 - போல்டனிடம் இருந்து விலகி நின்ற டிரம்ப், ’லிபியா மாதிரி’ அணுசக்தி ஒழிப்புக்கு அமெரிக்கா தள்ளவில்லை எனத் தெரிவித்தார்
மே 22 - ''சில உறுதியான நிபந்தனைகள் வட கொரியா நிறைவேற்றாவிட்டால்'' அமெரிக்கா சந்திப்பில் பங்கேற்காது என டிரம்ப் வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில், அமெரிக்கா - வடகொரியா பேச்சுவார்த்தை ரத்தானதையடுத்து, ஜ.நா சபை செயலாளர் அன்டோனியோ கட்டரஸ் தன் கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.
இதே போல, தன் ஆழ்ந்த வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ள தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன், உயர் பாதுகாப்பு அதிகாரிகளை அவசரப் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












