உலகப் பார்வை: வாழ்க்கையை முடித்துக் கொள்வதில் மகிழ்ச்சி'- உயிர்துறந்த 104 வயது விஞ்ஞானி
கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம்.
தனது வாழ்க்கையை முடித்தக் கொண்ட 104 வயது விஞ்ஞானி

பட மூலாதாரம், Getty Images
தனது வாழ்க்கையை முடித்துக் கொள்ள வேண்டும் என்று தேர்ந்தெடுத்த, 104 வயதான விஞ்ஞானி டேவிட் குட்ஆல் சுவிட்ஸர்லாந்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் உயிரிழந்ததாக ரைட் டு டை என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
நோய்வாய்படவில்லை என்றாலும் வாழ்க்கை தரம் மோசமடைவதால், தன் வாழ்வை முடித்துக் கொள்ள வேண்டும் என்று அவர் முடிவு செய்தார். லண்டனில் பிறந்த டேவிட் புகழ்பெற்ற சூழலியலாளர் மற்றும் தாவரவியலாளர் ஆவார்.
"வாழ்க்கையை முடித்துக் கொள்வதில் மகிழ்ச்சி" என்று தான் உயிரை விடுவதற்கு சிறிது நேரம் முன்பு அவர் தெரிவித்தார்.
இதற்காக ஆஸ்திரேலியாவில் இருந்து விமானம் மூலம் அவர் சுவிட்ஸர்லாந்த் சென்றது உலகம் முழுவதும் உள்ள மக்களின் கவனத்தை ஈர்த்தது.
பாலியல் வன்புணர்வு செய்த கணவரை கொன்ற இளம்பெண்

பட மூலாதாரம், Getty Images
தன்னை பாலியல் வன்புணர்வு செய்த கணவரை கொலை செய்ததற்காக இளம் பெண் ஒருவருக்கு மரண தண்டனை வழங்கி சூடான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கணவரின் குடும்பத்தினர் நிதி இழப்பீடு பெற மறுத்ததையடுத்து நவுராவின் தண்டனையை நீதிபதி உறுதி செய்தார்.
16 வயதில் நவுரா ஹுசைனுக்கு கட்டாயத் திருமணம் செய்து வைக்கப்பட்டது. தற்போது அவருக்கு வயது 19.
உலகம் முழுவதும் அமைதி

பட மூலாதாரம், Getty Images
உள்நாட்டு மற்றும் வெளியுறவு கொள்கைகளில் தான் அடைந்துள்ள வெற்றியை குறித்து இந்தியானாவில் நடைபெற்ற குடியரசு கட்சியின் பேரணியில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசினார். மேலும், அடுத்த மாதம் வட கொரிய தலைவர் கிம்முடன் நடைபெற உள்ள சந்திப்பில், உலகம் முழுவதும் அமைதியையும் சமாதானத்தையும் நிலைநாட்ட போவதாக அவர் கூறினார்.
இரான் அணுசக்தி ஒப்பந்தம் போன்று அவலமாக இல்லாமல், நல்லதொரு ஒப்பந்தத்தை கொண்டுவரப் போவதாகவும் அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
இரான் குழுவுக்கு நிதியளித்தவர்கள் மீது தடைவிதித்த அமெரிக்கா

பட மூலாதாரம், AFP
இரானின் பலம்பொருந்திய புரட்சி காவல்படையுடன் (ஐஆர்ஜிசி) தொடர்பு கொண்டிருப்பதாக கூறப்படும் 6 நபர்கள் மற்றும் 3 நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடைகள் விதித்துள்ளது.
இது குறித்து அமெரிக்க கருவூல செயலரான ஸ்டீவன் மனுஷியன் கூறுகையில், ஐஆர்ஜிசி குழுவின் தவறான செயல்பாட்டுக்கு உதவும் வகையில் பல மில்லியன் டாலர்களை அளித்துள்ளவர்களை இந்த புதிய தடைகள் குறிவைத்துள்ளதாக தெரிவித்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












