உலகப் பார்வை: லெபனானில் 10 ஆண்டுகளில் முதல் முறையாகத் தேர்தல்

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம்.

10 ஆண்டுகளில் முதல் முறையாகத் தேர்தல்

கிட்டதட்ட கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறையாக, லெபனான் நாட்டின் இன்று நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது.

கடைசியாக 2009-ம் ஆண்டு லெபனானில் தேர்தல் நடந்தது. அடுத்த நான்கு ஆண்டில் தேர்தல் நடந்திருக்க வேண்டும். ஆனால், அண்டை நாடான சிரியாவில் ஸ்திரமின்மை இல்லாததால், இரண்டு முறை நாடாளுமன்றத்தின் காலம் நீட்டிக்கப்பட்டது.

பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் புதிய வாரிசின் புகைப்படம்

பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் கேம்பிரிட்ஜ் கோமகன் மற்றும் அவரது மனைவி கேத்திரின் தங்களது மூன்றவது குழந்தையான, லூயிஸ் ஆர்தர் சார்லஸின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். இக்குழந்தை கடந்த ஏப்ரல் 23ஆம் தேதியன்று பிறந்தது. இந்த ஆண் குழந்தை பிரிட்டிஷ் அரியணைக்கான வரிசையில் ஐந்தாவது இடத்தில் இருக்கும்.

காஸா குண்டு வெடிப்பு: ஆறு பாலத்தீனியர்கள் பலி

காஸா பகுதியில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில், ஆறு பாலத்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் பலர் காயமடைந்துள்ளனர் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர். குண்டு வெடிப்புக்கான காரணம் இன்னும் தெளிவாக தெரியவில்லை.

ரஷ்யாவில் எதிர்கட்சி தலைவர் தடுத்து நிறுத்தம்

ரஷ்ய அதிபராக புதின் நான்காம் முறையாக பதவி ஏற்க இன்னும் இரண்டு நாட்கள் உள்ள நிலையில், புதினின் அலுவலகம் எதிரே போராட்டம் நடத்த கூடிய முக்கிய எதிர்கட்சி தலைவர் அலெக்ஸே நவால்னி உள்ளிட்டோரை போலீஸார் தடுத்து நிறுத்தினர். பிறகு எந்த குற்றச்சாட்டும் பதியப்படாமல் போலிஸ் காவலில் இருந்து நவால்னி விடுவிக்கப்பட்டார்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: