ஆஃப்கன் புத்தாண்டு கொண்டாட்டத்தில் குண்டுவெடிப்பு: 29 பேர் பலி

காபூல் குண்டுவெடிப்பு 26 பேர் பலி

பட மூலாதாரம், AFP

ஆஃப்கன் தலைநகர் காபூலில் நடந்த சந்தேகத்திற்குரிய தற்கொலை குண்டுதாரி நடத்திய வெடிப்பு தாக்குதலில் குறைந்தது 29 பேர் மரணமடைந்தனர், 18 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரி கூறினார்.

ஆஃப்கன் புத்தாண்டான `நவ்ரஷ்` - ஐ கொண்டாட நூற்றுகணக்கானோர் திரண்டிருந்தனர். அந்த கூட்டத்ததில் வெடிகுண்டு தாக்குதல் நடந்துள்ளது என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

காபூல் குண்டுவெடிப்பு 26 பேர் பலி

பட மூலாதாரம், Reuters

அந்த கூட்டத்தில் இருந்த சிறுபான்மை ஷியா சமூகத்தை சேர்ந்த மக்கள் பெரும்பான்மையாக இருந்தார்கள்.

மரணித்தவர்களின் எண்ணிக்கை உயரலாம் என்று அங்கிருந்து வந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

காபூல்

ஷகி திருதளத்தை நோக்கி நடந்து வந்த தற்கொலை குண்டுதாரி, குண்டுகளை வெடிக்க செய்துள்ளார் என்று பிபிசியிடம் பேசிய உள்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: